Wednesday, May 07, 2014

ஆத்திகன் நாத்திகன் ஆவது எப்போது? (நிறைவுப் பதிவு)நம்முடைய பூமி மட்டுமே சரியான அளவில், ஜீவராசிகள் வாழ ஏதுவான வாயு கலவைகள் கலந்த வளிமண்டலத்துடன் அமைந்துள்ள ஒரே கிரகம்! ஆனால் பூமியைப் போன்றே இன்னும் பல சூரியக் குடும்பங்கள் (solar family) உள்ளன என்கிறார்கள். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சூரியக் குடும்பங்களில் செவ்வாய் (MARS) கிரகத்தைத் தவிர வேறெந்த கிரகங்களிலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏதுவானதாக இல்லை. மேலும் பூமியில் வாழும் ஜீவராசிகள் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான நீர் ஆதாரமான  கடல் பரப்பு உள்ள கிரகம் வேறெதுவும் இருப்பதாக இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் உண்மை. 

இது மட்டுமல்லாமல் 

1 அ:  பூமி நிலை நிற்கும் இடம். 

நம்முடைய பூமி சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்தும் குளிர்ந்த சந்திரனிடமிருந்தும் மிகச் சரியான அதாவது ஜீவராசிகள் வாழ்வதற்கு ஏதுவான தொலைவில் அமைந்துள்ளது. அது சூரியனிடமிருந்து இப்போதுள்ள இடைவெளியை விட சற்று அதிகமான இடைவெளியில் அமைந்திருந்தால் நாம் அனைவருமே பனிக்கட்டிகளாக உறைந்துப் போயிருப்போம். சற்றே அருகாமையில் இருந்திருந்தால் நாம் அனைவருமே பொசுங்கிப் போயிருப்போம். மேலும் பூமி அதனுடைய அச்சாணியில் மணிக்கு சுமார் 67,000 மைல் வேகத்தில் சுழல்வதால் பூமியின் அனைத்து மேற்பரப்பும் சூரியனின் ஒளியை சீராக பெற முடிகிறது. 

அதேபோன்று சந்திரனும் நம்முடைய பூமியின் ஈர்ப்பு சக்தியிலிருந்து மிகச் சரியான தொலைவில் அமைந்துள்ளது. 

ஆகவேதான் கடலின் அலைகளும் ஒரே சீராக அமைந்து ஒரே இடத்தில் தேங்கிவிடாமலோ அல்லது தேவைக்கு அதிகமாக சீறிப்பாய்ந்து உலகின் கண்டங்களை அழித்துவிடாமலோ காக்க முடிகிறது. 

1 ஆ) நாம் குடிக்கும் நீர். 

உலகிலுள்ள ஜீவராசிகள் உயிர்வாழ தேவையான தண்ணீர் வான்வெளியிலுள்ள எந்த கிரகத்திலும் இல்லாமல் நம்முடைய பூமியில் மட்டுமே கிடைக்கிறது. 

ஆனால்  நமக்கு தேவையான தண்ணீரில் 97 விழுக்காடு கடலில்தான் உள்ளது. ஆதலால் இயற்கையாகவே கடல் நீரிலுள்ள உப்பு ஆவியாகி மீண்டும் மழையாக பொழிந்து நாம் பருகுவதற்கு ஏற்ற வகையில் ஆறாகவும், ஓடையாகவும் பூமியின் பரப்பின் மீது ஓடியும் பூமிக்கடியில் இறங்கியும் மாறும் வசதி பூமியில் மட்டுமே உள்ளது. இப்படியொரு வசதி மட்டும் இல்லையென்றால் water water everywhere not a drop to drink என்கிற பழமொழி உண்மையாகி இருக்குமே? இவையெல்லாமே தன்னால் ஏற்பட்டதா? ஒரே பொருளில் இருந்து வெடித்து சிதறியவற்றுள் பூமியும் ஒன்று என்றால் இங்கு மட்டும் ஏன் இதெல்லாம்?

2. உலகம் எப்போதாவது உண்டாகியிருக்க வேண்டும் அல்லவா? அது ஒரு மூலப் பொருளிலிருந்துதான் உண்டானது என்றால் அந்த மூலப்பொருள் உண்டானது எவ்வாறு? ஒன்றும் இல்லாமையிலிருந்து ஏதாவது ஒன்று உருவாக முடியுமா (Can something come out of nothing?).

இந்த கேள்விக்கு ஆய்வாளர்களின் பதில் என்ன? கடவுள் இருக்கிறார் என்கிற கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை என்பதற்காகத்தானே கடவுளே இல்லை என்கிறீர்கள்? அப்படியானால் உலகம் உருவாக காரணமாயிருந்த 'மூலம்' யாரால் உருவானது என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அதை மட்டும் எவ்வாறு நம்புவது?

3. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகும் அறிவியல் ஆய்வாளர்களால கண்டுணர முடியாத பல ரகசியங்கள் நம்முடைய வாழ்க்கையில் (our life) உள்ளன. நம்முடைய புவி ஈர்ப்பு சக்தி பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஒரே சீராக உள்ளது! அது நாள் தவறாமல் இருபத்தி நான்கு மணிக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றுக்கொள்கிறது, ஒளியின் வேகமோ ஒலியின் வேகமோ காலங்காலமாக ஒரே அளவில் அமைந்துள்ளது! இதை நிர்ணயித்தது எந்த சக்தி? 

4. நம்முடைய உடலிலுள்ள ஒவ்வொரு திசுக்களிலும் (cell) கணினியில் உள்ளவைப் போன்ற குறிகள் (codes) எழுதி வைக்கப்பட்டுள்ளனவாம். இதைத்தான் டி.என்.ஏ (DNA) என்கிறார்கள். இவை A T G மற்றும் C என்ற குறிச்சொற்களால் அழைக்கப்படும் நான்கு வேதிப்பொருட்களால் (chemicals) ஆன கலவை. இவை CGTCTGACTCGCTCCTGAT என்ற வரிசையில் கலக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொரு ஜீவராசிக்கும் வெவ்வேறு விதங்களில் கலக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் ஒருவருடைய DNA இன்னொருவருடைய DNAவிலிருந்து மாறுபடுகிறது.

இதை யார் ஏற்படுத்தியது? இதற்கு வேதியல் ஆய்வாளர்கள் கூறும் பதில் என்ன? 

இவற்றையெல்லாம் எழுதியுள்ள நான் துவக்கத்தில் குறிப்பிட்ட ஆய்வாளர் மேலும் கூறுகிறார்:

"நானும் ஒரு காலத்தில் நாத்திகனாக இருந்தவன் தான். மற்ற நாத்திகர்களைப் போன்றே இறைவன் இல்லை என்பதை நிருபிக்க வேண்டும் என்ற முயற்சியில் முழுமூச்சாக இறங்கியவன் தான். ஆனால் காலப்போக்கில் எதற்கு இறைவன் இல்லை என்பதை நிருபிக்க இவ்வளவு காலத்தை விரயமாக்க வேண்டும் என்ற சிந்திக்க ஆரம்பித்தேன். இறைவனை நம்புபவர்களை அவர்களுடைய அறியாமையிலிருந்து விடுவிக்க நான் அப்படியொருவன் இல்லவே இல்லை என்பதை நிருபிக்கவே இத்தனை முயற்சிகளை செய்கிறோம் என்ற சமாதானம் நாளடைவில் எனக்கே போலியாக தோன்றியது.  

அதுமட்டுமல்ல, இறை நம்பிக்கையுடையவர்களுடைய வாதங்களை முறியடித்துவிட்டாலே அவர்களையும் நம் பக்கம் இழுத்துவிட முடியுமே என்று நினைத்து நான் செய்த அனைத்து முயற்சிகளும் நான் எதிர்பார்த்த பலனைஅளிக்கவில்லை என்பதையும் உணர ஆரம்பித்தேன்.

ஒருவேளை இறைவன் இல்லை என்கிற எண்ணத்தை சிலருடைய மனதில் விதைத்ததே இறைவனாக இருக்குமோ என்ற வினாவும் என்னுள் எழ ஆரம்பித்தது. ஒரு பொருளை குறித்து எதிர்மறையான வாதம் எழும்போதுதான் அதற்கு நேர்மறையான வாதங்களும் எழும் பிறகு இறுதியில் எந்த வாதம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அந்த வாதமே வெல்லும் என்பதுதான் இறைவனின் சித்தம் போலும் என்றும் நினைக்க ஆரம்பித்தேன். இறைவன் இல்லை, 

இல்லை என்று வாதிடுகிற என்னைப் போன்றோரே தன்னைப் பற்றி அன்றாடம் சிந்திப்பார்கள் என்பது இந்த எண்ணங்களை அவர்களுடைய மனதில் விதைத்ததே இறைவனாக இருக்குமோ என்ற வினாவும் என்னுள் எழுந்தது.  

நீண்ட கால குழப்பத்திற்குப் பிறகு இறுதியில் ஒருநாள் போதும் இந்த குழப்பம் என்ற நினைவு உள்ளுக்குள் எழ என்னை முழுமையாக வென்றுவிட்ட இறைவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அன்று முதல் நான் அதுவரை உணர்ந்திராத ஒரு ஆழ்ந்த அமைதி என்னுள் நிறைவதை என்னால் உணர முடிந்தது. இந்த வினோத அனுபவம் எனக்கு மட்டுமல்ல என்னுடைய நண்பரும் பிரபல சமூகவியலாளர் மற்றும் மனோதத்துவ நிபுணருமான மால்கல் மக்கரிட்ஜுக்கு ஏற்பட்டதை பிறகுதான் நான் அறிந்தேன். அவர் என்னிடம் கூறியது: 'நான் இறைவன் இல்லை இல்லை என்று சொன்னபோதெல்லாம் நான் அவரைப் பற்றியே நாள் முழுவது சிந்தித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். இந்த உணர்வும் அவராலேயேதான் ஏற்பட்டது என்பதை  சிறிது காலத்திற்குப்பிறகு நானே ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று."

நான் இந்த கட்டுரையின் முதல் சில வரிகளில் கூறியுள்ளதுபோல் இறைவனை ஏற்க மறுப்பவர்கள்தான் அன்றாடம் அவரைப் பற்றியே சிந்தித்துக்கொண்டுள்ளார்கள்.  இது ஒருவகை வெறியாகவே மாறி வருவதை காண முடிகிறது. அவர்களை இவ்வாறு ஆட்டிப்படைப்பதே இறைவன்தான் என்று கூட எண்ணத் தோன்றுகிறது. 

இறைவன் நம்மிடம் பேச நினைப்பதைத் தான் நம்முடைய மனது கூறுகிறது என்பதும் உண்மைதான். இறைவன் எங்கும் ஏன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறான் என்பதற்கு இதை விட பெரிய ஆதாரம் இருக்க முடியாது.  அப்படியானால் ஊழல் செய்பவன், கொள்ளையடிப்பவன், கொலை செய்பவன், அக்கிரமக்காரன் இவர்களுள் எல்லாம் இறைவன் இல்லையா என்ற கேள்வியும் அப்படி அவர்களுக்குள்ளும் இறைவன் இருந்தால் அவர்களை ஏன் அவனால் மாற்ற முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.  இறைவன் அவர்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார்.  அவர்கள் அக்கிரமச் செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் இதைச் செய்யாதே என்று அறிவுறுத்தத்தான் செய்கிறார். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே அவற்றிற்குச் செவிமடுப்பதில்லை என்பதுதான் உண்மை. 

இரவில் மின்சாரம் இல்லாமல் அவஸ்தைப்படும்போதுதான் பகலின் அருமை தெரிகிறது. வெய்யிலில் வேகும்போதுதான் நிழலிலின் அருமை தெரிகிறது. அதுபோலத்தான் இதுவும்.  தீயவன் என்ற ஒருவன் இருப்பதால்தான் நல்லவர்கள் இணம் கண்டுக்கொள்ளப்படுகின்றனர். நாம் அன்றாடம் சந்திக்கும் பத்து நபர்களில் ஒருவரோ அல்லது இருவரோ மட்டுமே நம் கண்களுக்கு தீயவர்களாக தென்படுகின்றனர்.  மாறாக பத்தில் எட்டுப் பேர் தீயவர்களாக இருந்திருந்தால் அவர்கள் செய்வது தீயது என்கிற உணர்வே நமக்கு இல்லாமல் போயிருக்கும். இதன் அடிப்படையில்தான் Mob culture செயல்படுகிறது.  ஒரு இடத்தில் குழுமியுள்ளவர்களில் பெரும்பாலோனோர் வன்முறையைக் கையில் எடுக்கும்போது அந்த கூட்டமே வன்முறையில் ஈடுபடுகிறது.  மாறாக ஒரு இடத்தில் குழுமியுள்ளவர்களுள் பெரும்பாலோனோர் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டத்திலுள்ள ஓரிரு தீயவர்களும்  தீய செயல்களில் ஈடுபட முடியாமல் போகிறது.  

இந்த அடிப்படை வாதம் இறைவன் உள்ளாரா இல்லையா என்கிற வாதத்திற்கும் பொருந்தும். ஏனெனில் உலகில் இறைவனை நம்புபவர்களுடைய எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 97 விழுக்காடுக்கும் அதிகமாக உள்ளதாம்.  ஆகவே வெறும் மூன்று விழுக்காடுள்ள இறை மறுப்பாளர்களும் வேறு வழியின்றி தன்னைப் போலவே அவனை ஏற்பவர்களாக மாறுவார்கள் என்கிறார் நான் மேலே குறிப்பிட்ட, ஒரு காலத்தில் நாத்திகராக இந்த அறிவியல் ஆய்வாளர். 

முடிவுரை:

இறைவன் இருக்கிறார். அவரை யாரும் ஏற்படுத்தவில்லை. அவர் யாருக்கும் சொந்தக்காரரும் இல்லை. அவருக்கு உருவம் ஏதும் இல்லை. அவர் ஒரு சக்தி. 

அவரை பலரும் பலவிதங்களில் உருவகப்படுத்தி பார்த்ததால்தான் பல மதங்கள் ஏற்பட்டன. எத்தனை விதத்தில், எத்தனை ரூபத்தில்  யார் வழிபட்டாலும்  இறைவன் ஒருவனே.  நதிகள் பலவாயினும் அவை சென்று கலக்கும் கடல் ஒன்றுதானே. கடல் எத்தனை பெயரில் அழைக்கப்பட்டாலும் அது ஒன்றுதான் என்பதுபோல்தான் இறைவனும். வழிகள் பலவாயினும் சென்று சேருமிடம் ஒன்றுதான். இவற்றில் இதுதான் உண்மையான வழி என்பதெல்லாம் அற்ப மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை. 

மதங்களும் சடங்குகளும் அவற்றை ஒட்டியுள்ள சம்பிரதாயங்கள் எல்லாமே மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை. இறைவனை நம்புவதற்கோ அல்லது அவனை அடைவதற்கோ இவை எதுவுமே உதவுவதில்லை. ஆனால் காலங்காலமாக இருந்துவரும் இத்தகைய சம்பிரதாயங்களில் பலவும் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக ஏற்படுத்தப்பட்டவைதான். வீட்டின் முன் கோலம் இடுவதிலிருந்து பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது வரைக்கும் எல்லாமே ஏதாவது ஒரு அறிவியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவையே.  ஆனால் இவற்றை செய்தால் நல்லது என்றால் மனிதன் அவற்றிற்கு செவிமடுக்க மாட்டான் என்பதாலேயே மதத்தின் பெயரால் அதை சொல்லி வைத்தார்கள். 'சாமி குத்தமாகிவிடும்' என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள். 

இறைவன் இருக்கிறான் என்று நம்புவது மூட நம்பிக்கையல்ல. அவன் பெயரால் தேவையற்ற சடங்குகளில் ஈடுபடுவதுதான் மூட நம்பிக்கை. கடவுளை நம்புவது முட்டாள்தனமல்ல. அவன் பெயரால் நீ இதை செய், அதை செய் என்று கட்டளையிடுவதுதான் முட்டாள்தனம். 

எனக்கு இறை நம்பிக்கை ஒரு ஆழ்ந்த மன அமைதியைத் தருகிறது. அதை அனுபவித்தால் போதும், ஆராய்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். அதே சமயம் என்னுடைய கருத்துக்கு ஒத்துப்போகாதவர்களை நான் நிந்திப்பதில்லை, ஏளனம் செய்வதில்லை.  அப்படியெல்லாம் அவர்களை சிந்திக்க வைப்பதே இறைவன் தான் என்று எண்ணமே என்னுள் ஓங்கி நிற்கிறது. மோதலுக்குப் பிறகே காதல் என்பதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இன்று தீவிர இறை மறுப்பாளர்களாக உள்ள பலரும் எதிர்வாரும் காலத்தில் என்றாவது ஒருநாள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல இன்று இறைவனை ஏற்றுக்கொள்கிற அனைவருக்குமே உள்ளது. ஏனெனில் இவர்களும் ஒருகாலத்தில் இறைவனை ஏற்றுக்கொண்டவர்கள்தானே?  ஆகவேதான் அவர்களுடன் தீவிர வாக்குவாதத்தில் இறை ஏற்பாளர்கள் ஈடுபடுவதில்லை.  

ஆனால் ஒன்று. ஆழ்ந்து உறங்கும் ஒருவனை எழுப்பிவிடலாம்.  உறங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முயல்வது முட்டாள்தனம். இன்று ஏதோ ஒரு காரணத்திற்காக உலகிற்கு தங்களை இறை மறுப்பாளர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் நடிப்பவர்களே என்பது என்னுடைய கருத்து. அதில் தவறிருக்கலாம். ஆனால் அதுதான் என்னைப் பொறுத்தவரை உண்மை. 

இதற்கு என்னுடைய நண்பரையே உதாரணமாக காட்ட முடியும். அவரை பள்ளிப்பருவதிலிருந்தே எனக்கு பழக்கம். என்னை விட சுமார் மூன்று வயது சீனியர். அவர் படித்த கல்லூரியிலேயே பிறகு விரிவுரையாளராக பணியாற்றினார். அந்த கல்லூரி ஒரு மதத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் கல்லூரி.  அவர் திருமணம் செய்த பெண் அவர் சார்ந்திருந்த மதத்தைச் சார்ந்தவர்மட்டுமல்ல அவருடைய சாதியையும் சார்ந்தவர்தான்.  அவருக்குப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் அவர் சார்ந்திர்ந்த மதத்தில் திருமுழுக்கு சடங்குடன் இணைத்தார். அந்த மத குருமார்களால்/ கன்னியர்களால் நடத்தப்பட்டு வந்த பள்ளி, கல்லூரிகளில்தான் படிக்க வைத்தார்.  பிறகு அவர்கள் இருவரையும் அதே மதத்தைச் சார்ந்தவர்களுடன் திருமணம் செய்துவைத்தார். ஆனால் சமீப காலமாக அதாவது பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து நான் கல்லூரியில் படிக்கும் வயதிலிருந்தே இறைவனை நம்பாதவர் என்று கூறிவருகிறார்.  அப்படியானால் வீட்டில் ஏன் உங்கள் தெய்வங்களின் படங்களை வைத்துள்ளீர்கள் என்று கேட்டால் அது மனைவியின் கட்டாயம் என்று கூறுகிறார். ஆனால் அவர் வீட்டில் மனைவி சொல்லை தட்டாதவர் என்று கூறிவிடமுடியாது.  குடும்பத்திலுள்ள அனைவரையும் ஆட்டிப்படைக்கும் குணம் படைத்தவர் என்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் நண்பர்களுக்கும் தெரியும். இவர் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்கிற ஆணவக்காரர்.  இவரைப் போலத்தான் இன்று நாட்டிலுள்ள பல நாத்திகர்களும் என்று பொதுவாக குறை கூற நான் விரும்பவில்லை என்றாலும் அதில் ஓரளவு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. ************

12 comments:

Packirisamy N said...

// எனக்கு இறை நம்பிக்கை ஒரு ஆழ்ந்த மன அமைதியைத் தருகிறது. அதை அனுபவித்தால் போதும், ஆராய்வதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன். அதே சமயம் என்னுடைய கருத்துக்கு ஒத்துப்போகாதவர்களை நான் நிந்திப்பதில்லை, ஏளனம் செய்வதில்லை. //
இந்தக்கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் வெய்ன்பர்க் இவ்வாறு கூறுகிறார்.

Religion is an insult to human dignity. With or without it you would have good people doing good things and evil people doing evil things. But for good people to do evil things, that takes religion.
அவர் கூறுவதும் உண்மைதான். மனித குலம் போரினால் அழிந்ததைவிட, மதவெறியினால் அதிகமானோரை இழந்திருக்கிறது. ஒருவேளை அது இயற்கைக்காக ஏற்பட்ட சமனிலையா என்று தெரியவில்லை.

Bagawanjee KA said...

# இறைவன் அவர்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார். அவர்கள் அக்கிரமச் செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் இதைச் செய்யாதே என்று அறிவுறுத்தத்தான் செய்கிறார். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே அவற்றிற்குச் செவிமடுப்பதில்லை என்பதுதான் உண்மை. #
செவி மடுக்க வைக்க எல்லாம் வல்ல கடவுளால் ஏன் முடிய வில்லை ?தன்னால் படைக்கப் பட்டவனை திருத்த முடியாமல் என்ன திருவிளையாடல் நடத்திக் கொண்டிருக்கிறார் ?கடவுளால் கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு சாத்தான் கை ஓங்கி இருக்கின்றது என்றால் ,சாத்தானை விட பெரிய சக்தி இல்லை என்றாகி விடுகிறதே !
#அப்படியெல்லாம் அவர்களை சிந்திக்க வைப்பதே இறைவன் தான் என்று எண்ணமே என்னுள் ஓங்கி நிற்கிறது#
இப்படி என்னால் நினைக்க முடியவில்லை ,என் தேடல் தொடர்கிறது !
த ம 1

தி.தமிழ் இளங்கோ said...

நிறைவுப் பகுதி நிறைவாக இருந்தது.
த.ம.2

டிபிஆர்.ஜோசப் said...

தி.தமிழ் இளங்கோ said...
நிறைவுப் பகுதி நிறைவாக இருந்தது.//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

Bagawanjee KA said...

செவி மடுக்க வைக்க எல்லாம் வல்ல கடவுளால் ஏன் முடிய வில்லை ?தன்னால் படைக்கப் பட்டவனை திருத்த முடியாமல் என்ன திருவிளையாடல் நடத்திக் கொண்டிருக்கிறார் ?கடவுளால் கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு சாத்தான் கை ஓங்கி இருக்கின்றது என்றால் ,சாத்தானை விட பெரிய சக்தி இல்லை என்றாகி விடுகிறதே !//

நீங்கள் கூறுவதும் ஒருவகையில் உண்மைதான். இதைப் பற்றி ஒரு விளக்கம் பைபிளில் உள்ளது.
இறைவனின் தலைமையை ஏற்க விரும்பாத சில தூதுவர்கள் அவரை எதிர்க்க துவங்கியபோது ஏற்பட்ட போராட்டத்தின் இறுதியில்தான் இறைவன் அந்த தூதுவர்களை சபித்து நரகத்தில் தள்ளினாராம். அவர்கள்தான் சாத்தான்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். அப்போதிருந்தே அவர்களுக்கு இறைவனுக்கு இணையான வலிமையும் வழங்கப்பட்டிருந்ததாம். ஒரு சமயத்தில் ஏசு பிரானையே தன்னை வணங்கினால் இந்த உலகின் மீதுள்ள அனைத்துக்கும் ஏசுவை அதிபதியாக்குவேன் என்று மிரட்டியதாகவும் பைபிள் கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ எனக்கு தெரியாது.

ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, குறிப்பாக தீயவர்கள் நல்லவர்களை விடவும் மிகவும் பலம் பொருந்தியவர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் இருப்பதை பார்க்கும்போது கடவுளை விட சாத்தான் வலிமை வாய்ந்தவனாகத்தான் தோன்றுகிறான்.

#அப்படியெல்லாம் அவர்களை சிந்திக்க வைப்பதே இறைவன் தான் என்று எண்ணமே என்னுள் ஓங்கி நிற்கிறது#
இப்படி என்னால் நினைக்க முடியவில்லை ,என் தேடல் தொடர்கிறது !//

இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். அதுதான் சரி என்று நான் சொல்ல மாட்டேன். ஒருவனுடைய மனதுக்குள் எழும் அனைத்துச் சிந்தனைகளுக்கும் அவை நல்லவையாயினும் தீயவையாயினும் அது ஒருவரிடமிருந்தே வருகிறது. அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருந்தால் நல்ல சிந்தனைகளும் சாத்தான் இருந்தால் தீய சிந்தனைகளும் உதிக்கின்றன என்றும் கூறலாம்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் வெய்ன்பர்க் இவ்வாறு கூறுகிறார்.

Religion is an insult to human dignity.//

I don't know what he meant by 'an insult' No one is forced to believe in God or follow any particular religion.

With or without it you would have good people doing good things and evil people doing evil things. //

This is true. But at the same religion does not stop good people stop doing good things. Religious belief has infact stopped many evil people doing evil things. There are several examples in the history.

But for good people to do evil things, that takes religion.//

I don't agree with this sweeping accusation. If anyone is doing evil things in the name of religion he cannot be a good person in the first place. Good people will always remain good with or without religion.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Packirisamy N said...

//If anyone is doing evil things in the name of religion he cannot be a good person in the first place. //

When a person is doing certain things, as said in his religion, in his view he is not evil. He is a good person, following a religious procedure. He may have the rights to kill all the non-believers. Now, tell me is he a good person or evil person? The religion can make him evil.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...

When a person is doing certain things, as said in his religion, in his view he is not evil. He is a good person, following a religious procedure. He may have the rights to kill all the non-believers. Now, tell me is he a good person or evil person? The religion can make him evil.//

Which religion would compel any person, whether he is good or not, to kill or commit any crime? It is all made up by people with ulterior motives. Anyone who is basically good would think twice before committing such a crime in the name of religion or not. Anyone who kills in the name of religion is known as fundamentalist or a fanatic. I feel that they cannot be called good people. Anyway, this is my opinion.

Pushparaj Fernando said...

In my opinion, I do believe in God but religion is a personal affair. The presence of God has to be felt through your personal experiences and not through imposed practices. I truly hate a religion that proposes "A particular human designed avatar of God as the only God and the only path way to eternity". Its a pity that the modern men do not know to live with the people at the vicinity rather think of means to appease the divine. Further, I hate people using religion as the cheap tactic to manipulate the unsophisticated minds of the general public. When the nation is marred by so many issues of greater intensity, it is indeed a pity that the media concentrates on propagating religion amidst public. What I mean is a channel comes up a multi crore version of 'Mahabaratha' and on the other hand 'a clan of people who have rightly succeeded to let Bible make money for them' publish the film Jesus. The irony is that when millions of people starve for their basic rights and bread, what the hell is this religious propagation for? Why not these self acclaimed custodians of religions leave religion with the people and their hearts. When will this nation awake to radical thoughts?

sifraj muhammed said...

செவி மடுக்க வைக்க எல்லாம் வல்ல கடவுளால் ஏன் முடிய வில்லை ?தன்னால் படைக்கப் பட்டவனை திருத்த முடியாமல் என்ன திருவிளையாடல் நடத்திக் கொண்டிருக்கிறார் ?கடவுளால் கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு சாத்தான் கை ஓங்கி இருக்கின்றது என்றால் ,சாத்தானை விட பெரிய சக்தி இல்லை என்றாகி விடுகிறதே ///// அல்குரானின் கூற்றுப்படி ஜின்கள் எனும் கூட்டத்தில் ஒருவந்தான் இப்லீஸ்(சாத்தான்) என்பன் நெருப்பினால் படைக்கப்பட்டவன். மனிதன் என்பவன் மன்னினால் படைக்கப்பட்டவன் . மனிதன் படைக்க படுவதற்கு முன் ஜின்களை படத்து விட்டான் . முலு ஜின் இனங்களிற்கும் தலைவானாகவும் சிறந்த ச்றிவாலியாகவும் இருந்தவன் இந்த சாத்தான். அதன் பின் மனிதன் படைக்கப்பட்டான் .மனிதனுக்கு அறிவு வழங்கப்பட்டது . அது ஜின்கலுக்குவழ்ங்கப்பட்ட அறிவிலும் மிகவும் மேன்பட்டது . எனவே மனிதனுக்கு அடிபனியுமாறு இறைவன் கூறினான் அதை ஜின் இங்கள் ஏற்று அடிபனிந்தாலும் .சாத்தான் ஏற்கவில்லை .ஏனன்றால் அவனது அறிவே பெரிது என்று என்னிகொண்டான்.

பிற்பாடு அவன் அடிபனிய சொன்ன இறைவனின் கட்டளையை அந்த சாத்தான் மறுத்ததால் அவன் சபிக்கப்பட்டான் , அப்போதுதான் அவன் இறைவனிடம் ஒரு வாக்குறுதியை பெற்றுக்கொள்கிறான்.

அதாவது “ மனிதனை அழிக்கும் காலம் (இவ்வுலகத்தை அழிக்கும் காலம்) மட்டும் எனக்கு அவகாசம் கொடு அந்த நேரத்தில் அறிவில் சிறந்த மனிதனி வழி கெடுத்து காட்டுகிரேன் என்று சொன்னான் .“இறைவனும் அவனது கோரிக்கையை ஏற்று கொண்டான் .அவனுக்கு இவ்வுலகம் அழியும் வரை மாத்திரம் மனிதனி வழிகெடுக்க அவகாஸம் கொடுத்தான் . ஆனாலும் இறைவன் அவனிடம் கூறுயது என்னுடைய அடியார்கலுக்கு எனது முலுமையான் வழிகாட்டுதலை வழ்ங்குவேன் அவற்றை ஏற்று நடப்பவர்களை உன்னால் வழிகெடுக்க முடியாது என்று இறைவன் கூறியதையும் வாக்குறிதியை பெற்று கொண்டான் .அதனால்தான் இறைவன் இன்னும் சாத்தான்களை தண்டிக்காமால் இருக்கிறான். மாறாக இறைவனுக்கு நிகறான சக்தி ஒன்றும் சாத்தான்களுக்கு வழ்ங்கப்படவில்லை.

ஜோதிஜி திருப்பூர் said...

எடுத்த விசயத்தில் சமரசமின்றி கடைசி வரைக்கும் கொண்டு வந்து நிறுத்துவதில் (என்னைப் போல) நீங்களும் பிடிவாதக்காரர் தான் போலும். பல தொடர் பதிவுகளில் இதைத்தான் உங்களிடம் இருந்து பார்க்கின்றேன்.

ராவணன் said...

பூமி என்னால் சுற்றுகின்றது. சந்திரன் என்னால் இயக்கப்படுகின்றது. இதை நீங்கள் மறுத்தால் நீங்கள் நாத்திகன். நான் மட்டுமே இறைவன் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கே நாத்திகர்கள். ஆத்திகன்..நாத்திகன் என்ற வாதமே தவறு. இங்கே அனைவரும் நாத்திகர்களே.... மற்றவர்களின் நம்பிக்கையை நம்மில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. நாத்திகம் என்றால் என்ன? அதற்கு சரியான விளக்கம் இருக்குமா?
பகுதி பகுதியாக எழுதினாலும் யாரும் ஆத்திகனாக இருக்கமுடியாது.

Post a Comment