Monday, December 02, 2013

பாலகன் ஏசுவின் வருகைக் காலம்

திருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள்ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்.[1]
திருவருகைக் காலம் என்பது இப்போதும் கீழைத் திருச்சபைகளில் (Eastern churches) "கிறித்து பிறப்பு விழா நோன்பு" (Nativity Fast) என்னும் பெயர்கொண்டுள்ளது.

ஆனால் நம்முடைய நாட்டிலும் உலகின் பிற பகுதிகளிலும் இது மகிழ்ச்சியின் காலம் என கருதப்படுவதால் நோன்பு (உபவாசம்) அனுசரிக்கப்படுவதில்லை. 

இது நவம்பர் மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி வரையிலும் சுமார் நான்கு வாரங்களுக்கு கொண்டாடப்படுகிறது. 

இறைமகன் ஏசுவின் வருகைக்கு தங்களைத் தயாரித்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட காலம் இது என்றும் கூறலாம். 

ஆடை ஆபரணங்கள் வாங்குதல் வீட்டை அலங்கரித்தல் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க வரவிருக்கும் ஏசு பாலகனை நம் உள்ளத்தில் வரவேற்க ஆன்ம ரீதியாக நம்மை ஏற்புள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதே உண்மையான தயாரிப்பு என்கிறது திருச்சபை!

இந்த காலத்தின் சிறப்புகளை விவரிக்க ஒரு கவிதை. 

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
இறைமகன் ஏசு
பாலகனாய் வந்துதித்த காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
கடையர்களாம் இடையருக்கும் - ஏசு
தன்னை காட்சியிட்ட காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
முத்திசை ஞானிகளும் - அவரை
பணிந்து வணங்கிய காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
தேடி வாரா உறவுகளையும்
தேடிச் செல்லும் காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
நம் நட்பை துறந்துச்
சென்றவரையும்
நாடிச் செல்லும் காலம்

காலம் இது காலம்
திருவருகைக் காலம்
பாலன் ஏசு நம்மிடையே
பிறக்கப் போகும் காலம்.

*******

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை வரிகள் அருமை... பாராட்டுகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்களும் ஒரு ஓட்டு `இடலாம்...

திண்டுக்கல் தனபாலன் said...

கட்டுரையில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

தி.தமிழ் இளங்கோ said...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கி விட்டது என்ற நற்செய்தியை, உங்கள் பதிவின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். முன்னதாகவே எனது வாழ்த்துக்கள்!

டிபிஆர்.ஜோசப் said...

திண்டுக்கல் தனபாலன் said...
கவிதை வரிகள் அருமை... பாராட்டுகள்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

திண்டுக்கல் தனபாலன் said...
நீங்களும் ஒரு ஓட்டு `இடலாம்...//

இட்டுவிட்டேன் :))

டிபிஆர்.ஜோசப் said...

தி.தமிழ் இளங்கோ said...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கி விட்டது என்ற நற்செய்தியை, உங்கள் பதிவின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். முன்னதாகவே எனது வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

ராஜி said...

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். கிறிஸ்துமஸ் கேக் எனக்கொண்ணு பார்சல்.

டிபிஆர்.ஜோசப் said...

ராஜி said...
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். //

மிக்க நன்றிங்க.

கிறிஸ்துமஸ் கேக் எனக்கொண்ணு பார்சல்.//

கண்டிப்பா :))

2008rupan said...

வணக்கம்

பதிவு அருமை வாழ்த்துக்கள்.....

கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ள இதோ.. விபரங்கள் படிக்க
http://2008rupan.wordpress.com வாருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Packirisamy N said...

தெரியாத தகவல். இங்கு கடைகளில் சென்ற மாதத்திலிருந்தே கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தொடங்கிவிட்டன. வீடுகளில், நீங்கள் கூறியது போல் நவம்பர் கடைசியிலிருந்துதான் அலங்காரங்களைக் காண்கிறேன். அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

வந்த புதிதில் குழந்தைகள் சாண்டா வருவாரென்று கண்விழித்திருந்தது நினைவுக்கு வருகிறது.

டிபிஆர்.ஜோசப் said...

08rupan said...
வணக்கம்

பதிவு அருமை வாழ்த்துக்கள்.....//

மிக்க நன்றிங்க.

கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ள இதோ.. விபரங்கள் படிக்க
http://2008rupan.wordpress.com வாருங்கள்.//

அழைப்புக்கு நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
தெரியாத தகவல். இங்கு கடைகளில் சென்ற மாதத்திலிருந்தே கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தொடங்கிவிட்டன. வீடுகளில், நீங்கள் கூறியது போல் நவம்பர் கடைசியிலிருந்துதான் அலங்காரங்களைக் காண்கிறேன். அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் திருவிழா வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.

வேகநரி said...

உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
சிறு சாக்கலட்டுகள் கொண்ட Advent சாக்கலட் பெட்டி தினம் ஒன்று சாப்பிட வெள்ளிகிழமை நிறுவனத்தில் தந்துவிட்டாங்கா.திங்க கிழமையே பெட்டியை காலிபண்ணியாச்சு.

Packirisamy N said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !

Post a Comment