Tuesday, May 14, 2013

தேவாலய பாடல்கள்


கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகளின் இடையில் பாடல்களை பாடுவது வழக்கம்.

இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை முன்பொருகாலத்தில் ஒரு குறுந்தொடராகவே பதிவிட்டு வந்துள்ளேன்.

கடந்த ஞாயிறு வழிபாட்டில் பாடிய இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

எனக்கு இசையைப் பற்றிய விவரம் இல்லாததால் இது எந்த ராகத்தில் பாடப்பட்டது என்று சொல்லத் தெரியவில்லை.

ஆனால் பாடகர் குழு இதை பாடிய ராகம் என்னை பல இடங்களில் உணர்ச்சிவசப் பட வைத்தது என்பது மட்டும் உண்மை.

இதில் பல்லவி இறைவன் பக்தனிடம் கூ


பல்லவி:

இறைவன் பக்தனிடம்:

தாயாகி தந்தையாகி
நெஞ்சமெல்லாம் உனதாகி
கண்களில் உன்னை தாங்கினேன் - என்
செல்லமே கண்களில் உன்னை தாங்கினேன்.

பக்தனின் புகழ்பாடல்:

காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா

சரணங்கள்:

இறைவனின் உறுதிமொழிகள்:

1. உன்னை என் கைகளில் பொறித்துள்ளேன்
பயம் வேண்டாம் இனி கலங்க வேண்டாம்
காப்பாற்றும் தேவன் உந்தன் கரம் பற்றினேன்
தோள்களில் சுமந்து வழிநடப்பேன்.

காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா

2. அடைக்கலப் பாறையாக நான் இருப்பேன்
அரணும் கோட்டையுமாய் காத்து நிற்பேன்
இருளில் நீ இடறாமல் துணை இருப்பேன்
சிறகினில் உனை மூடி பலம் அளிப்பேன்

காக்கின்ற தெய்வமல்லவா - நீ
கனிவுள்ள தெய்வமல்லவா

2 comments:

அபயாஅருணா said...

அடைக்கலப் பாறையாக நான் இருப்பேன்
அரணும் கோட்டையுமாய் காத்து நிற்பேன்
இருளில் நீ இடறாமல் துணை இருப்பேன்
சிறகினில் உனை மூடி பலம் அளிப்பேன்
.நிஜமாகவே கடவுளின் மீது நம்பிக்கையும் நமக்கு தன்னம்பிக்கையும் தரும் வரிகள் .

sury Siva said...

யூ ட்யூப் லிங்க் தாருங்கள்.

ராகம் என்னவென்று நான் சொல்லுகிறேன்.

சொற்சுவை பொருட்சுவை இரண்டுமே அற்புதம்.

நானே பாடிவிடட்டா ?

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.vazhvuneri.blogspot.com

Post a Comment