தேவாலய
வழிபாடுகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கை முறையிலும் கத்தோலிக்க (RC) சபையிலுள்ளவர்களுக்கும், மற்ற கத்தோலிக்கரல்லாத சபைகளில் உள்ளவர்களுக்கும்
இடையில் பல வேறுபாடுகளை காண முடியும்.
(தொடர்ச்சி..)
3.கத்தோலிக்க
தேவாலயங்களில் பிரார்த்தனைக்கு முக்கியம் அளிக்கப்படுகிறது. மற்ற தேவாலயங்களில் கூட்டு பாடல்கள்தான் அதிகம்
முக்கியத்துவம் பெறுகின்றன. CSI தேவாலயங்களில் வழிபாட்டிற்கிடையே பாடல்கள் பாடப்படும்போது விசுவாசிகள் அனைவருமே தாளத்திற்கேற்றபடி கரவொலி எழுப்பி பாடகர்
குழுவினருடன் இணைந்து பாடுவதை பலரும்
கேட்டிருப்பீர்கள். ஆனால் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு
வரும் விசுவாசிகளில் பலருக்கு தேவாலயத்தில் பாடப்படும் பாடல் வரிகளே தெரிந்திருக்காது.
ஆங்கிலத்தில் இதை while protestants
participate in the church services catholics only witness the same என்பார்கள்.
உண்மைதான் பெரும்பான்மை கத்தோலிக்கர்கள் வழிபாடுகளில் வெறும் பார்வையாளர்களாகவே கலந்துக்கொள்கின்றனர்.
4.கத்தோலிக்க
மத குருமார்கள் (Priests) இல்லறத்தை துறந்தவர்கள். மற்ற சபிகளின் குருமார்கள் இல்லறவாசிகளாகவும் இருக்கலாம்.
5.கத்தோலிக்க
குருத்துவத்தில் பெண்களுக்கு இடமில்லை (கன்னியர்கள் குருக்களுக்கு இணையானவர்கள் அல்ல).
6.கத்தோலிக்கர்கள்
பாவசங்கீர்த்தனத்தில் (பாவத்தை குருவிடம் தெரிவித்து
மன்னிப்பு பெறுதல்) நம்பிக்கையுள்ளவர்கள் (சமீப காலங்களில் குறிப்பாக
இன்றைய தலைமுறையினரிடம் இது குறைந்துவருகிறது என்பது
உண்மைதான்).
7.திவ்விய
நற்கருனையில் ஏசு எப்போதும் வீற்றிருக்கிறார்
என்று கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர். தங்கள் கரங்களில் ஏந்தி
ஏசு என்னுள் வருகிறார் என்று
அதை பெறுபவர் விசுவசிக்கிறபோது மட்டுமே ஏசு அதில்
இருக்கிறார் என்று நம்புகின்றனர் பிராட்டஸ்டன்ட்
சபையினர். ஏனைய சபைகளில் நற்கருணை என்பதே இல்லை என்று நினைக்கிறேன்.
8. ஞாயிற்றுக்கிழமைகளிலும்
மத்திய திருச்சபை அறிவிக்கும் சில முக்கிய திருநாட்களிலும்
கண்டிப்பாய் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற
நியதி கத்தோலிக்க சபையில் உண்டு. மற்ற
சபையினருக்கு அத்தகைய கட்டாயம் ஏதும்
இல்லை.
9.பைபிளை
கரைத்துக் குடித்த கத்தோலிக்கர்கள் நூற்றில்
பத்து பேர் என்றால் மற்ற
சபைகளில் பைபிளை முழுவதுமாக அறிந்திருக்க
வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.
பைபிள் வாக்கியங்களை மனப்பாடமாக எடுத்துரைப்பதென்பது பல கத்தோலிக்க குருமார்களுக்கே
கைவராத கலை. ஆனால் மற்ற
சபையினரில் மிகச் சிறிய விசுவாசிக்கும்
பைபிள் முழுவதும் அத்துப்படியாக இருக்கும்.
10. கத்தோலிக்கர்களுக்கு
ஏசுபிரான் மட்டுமல்லாமல் அவருடைய தாயார் மரியாள்
மற்றும் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்கள் என பலர் மீதும்
நம்பிக்கையுண்டு. தங்களுடைய பிள்ளைகளுக்கு புனிதர்களுடைய பெயரையே வைப்பார்கள். கத்தோலிக்கரல்லாத
சபையினர் ஏசுவை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர்.
மரியாளை இறைவனால் தெரிவு செய்யப்பட்ட ஒரு
கருவியாகவே காண்கின்றனர். ஆகவே அவர்கள் பெரும்பாலும்
ஏசுவின் சீடர்களுடைய் பெயர்கள் (உ.ம்: பால், தாமஸ், ஆன்ட்ரூ) அல்லது
பழைய வேதாகமத்தில் (Old Testament) வரும் நபர்களுடைய (உ.ம்: சாமுவேல் (Sam) சாலமோன்,
யோசுவா, ஆபிரகாம்...) பெயர்களே குழந்தைகளூக்கு வைக்கின்றனர். இத்துடன் ஒரு தமிழ் பெயரும்
இருக்கும் (உ.ம்: ரஞ்சித்,
ஜெயசேகர், பிரபாகரன், மோகன்...).
இப்படி
வழிபாடுகளிலும் அடிப்படை நம்பிக்கைகளிலும் இவ்விரு பிரிவினருக்கும் இடையில்
பல வேறுபாடுகள் உள்ளன.
வாழ்க்கை
முறையிலும் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பதிலும்
இரு பிரிவினருக்கும் இடையில் பல வேறுபாடுகளைக்
காண முடிகிறது.
தொடரும்..
2 comments:
//பிராட்டஸ்டன்ட் சபையினர். ஏனைய சபைகளில் நற்கருணை என்பதே இல்லை என்று நினைக்கிறேன்.// ப்ராட்டஸ்டண்ட் சபைகளில் நற்கருணை உண்டு.
ப்ராட்டஸ்டண்ட் சபைகளில் நற்கருணை உண்டு.//
/தங்கள் கரங்களில் ஏந்தி ஏசு என்னுள் வருகிறார் என்று அதை பெறுபவர் விசுவசிக்கிறபோது மட்டுமே ஏசு அதில் இருக்கிறார் என்று நம்புகின்றனர் பிராட்டஸ்டன்ட் சபையினர்'/ என்றுதான் கூறியிருக்கிறேன். அவர்களல்லாத மற்ற சபைகளில்தான் நற்கருணை இல்லை என்று கூறியிருக்கிறேன்.
Post a Comment