Monday, July 16, 2012

மகாத்மா கிறீஸ்துவர்களை வெறுத்தது ஏன்?

மகாத்மா ஒருமுறை 'நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன். ஆனால் கிறீஸ்துவர்களை அல்ல.' என்று கூறியதாக சொல்வார்கள். ஆனால் அவர் எப்போது, எதற்காக இவ்வாறு கூறினார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.

நேற்று ஞாயிறு மாலை திருப்பலிக்கு இடையில் குருவானவர் இந்த கேள்வியை மையமாக வைத்து உரையாற்றினாலும் காந்திஜி எதற்காக இவ்வாறு கூறியிருக்கலாம் என்பதற்கு பதிலளிக்கவில்லை.

ஆகவே இன்று இதே கேள்வியை கூகுளில் அடித்துப் பார்த்தேன். 'எப்போது' என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லையென்றாலும் 'எதற்காக'  என்ற கேள்விக்கு பல விதமான விடைகள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன.

காந்திஜி ஆங்கிலேய பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியதாகவும் அப்போது பேட்டியாளர் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, 'கிறீஸ்து கூறியவாறு கிறீஸ்துவர்கள் எவரும் இப்போது வாழ்வதில்லையே' என்று காந்திஜி பதிலளித்ததாகவும் ஒரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!

காந்திஜியின் இந்த பதில்தான் இணையத்திலுள்ள பல கட்டுரைகளில் எள்ளி நகையாடப்பட்டுள்ளன. அப்படி பார்த்தால் எந்த மதத்தினர்தான் தங்களுடைய மதத்தில் கூறப்பட்டுள்ளவாறு நடக்கின்றனர் அல்லது வாழ்கின்றனர் என்ற பதில் கேள்வியும் காந்திஜி இவ்வாறு கூறியதற்கு முக்கிய காரணம் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்தான் என்று ஒரு சம்பவத்தையும் குறிப்பிடுகின்றனர்.

காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ஒரு கிறிஸ்துவ நண்பரின் பரிந்துரையின் பேரில் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அறிய விரும்பினாராம். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு என கருதப்படும் வேதாகம ஆசிரியர்கள் எழுதியவற்றையும் (பைபிள்) படித்தபிறகு ஒரு கிறீஸ்துவ தேவாலயத்திற்கு சென்றாராம். ஆனால் அவர் கருப்பர் என்ற காரணத்திற்காக அவரை தேவாலய காவலாளி உள்ளே அனுமதிக்கவில்லையாம்!

இதுவும் கற்பனையாக இருக்கலாம். ஏனெனில் இதே நிகழ்ச்சி கொல்கொத்தா தேவாலயத்தில் நடந்ததாகவும் வேறொரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!

ஆகவே காந்திஜி இவ்வாறு கூறினாரா என்பதற்கே சரித்திர சான்றுகள் இல்லாதபோது ஏன் அவ்வாறு கூறினார் என்ற வினாவுக்கு விடையாக முன்னுக்கு பின் முரணாக பல இடுகைகள், கட்டுரைகள், அதற்கு பதிலுரைகள், பதிலுக்கு பதிலுரைகள்.....

ஆனால் காந்திஜி இவ்வாறு கூறினார் என்றே வைத்துக்கொண்டாலும் ஏன் அவ்வாறு கூறியிருப்பார் என்று பார்த்தால்....

அன்று இந்தியாவை மட்டுமல்லாமல் உலகிலுள்ள பல நாடுகளையும் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்த இங்கிலாந்து ஒரு பெரும்பான்மையான கிறீஸ்துவர்களைக் கொண்ட நாடு. தன்னுடைய ஆதிக்கத்திலிருந்த மக்களை வதைத்து அடிமைப்படுத்தி வந்தது மட்டுமல்லாமல் கிறிஸ்துவர்களல்லாத பலரையும்  வலுக்கட்டாயமாக மதம் மாற்றிய நாடு என்ற எண்ணமும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தது. ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த கிறீஸ்துவ மிஷினரிகள் எனப்படும் குருக்கள், கன்னியர்களில் பலர் ஆங்கிலேயர்கள் இந்தியர்களைக் கொடுமைப்படுத்தியதைக் கண்டும்  காணாதவாறு இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசுவின் போதனைக்கு நேர்மாறாக நடந்துக்கொண்ட பல ஆங்கிலேய அதிகாரிகளுடைய நடத்தையும் காந்திஜியை கிறிஸ்துவர்களை வெறுக்க வைத்திருக்கலாம்.

ஆனால் காந்திஜியும் ஒரு சராசரி மனிதர்தான் என்றும் அவருடைய கருத்துக்களுக்கு அத்தன முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர் மரணதருவாயில் 'ஹே ராம்' என்று அழைத்த ராமரைப் போல் அல்லாமல் ஏக பத்தினி விரதத்தை காற்றில் பறக்கவிட்ட நேருவை தன்னுடைய வாரிசாக ஏற்றுக்கொண்டவர்தானே அவர்? மதத்தின் பெயரால் இந்திய துணைக்கண்டத்தையே இரண்டாக பிளந்த இந்துக்களும் இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தில் கூறியவற்றைத்தான் கடைப்பிடித்தார்களா என்ன? அவர்களை எப்படி காந்திஜி சகோதரர்களாக ஏற்றுக்கொண்டார்?

ஆக, காந்திஜி இவ்வாறு கூறியிருந்தால் அதற்கு முக்கியமான ஒரு காரணம் தனக்கு ஏற்பட்ட அவமானமும் இருக்கலாம் என்றுதான் கருதுகிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தின் துவக்கமே அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானம்தான் என்பதை மறுக்கமுடியாதே? அதற்கு முன்பிருந்தே லட்சோப லட்ச தென்னாப்பிரிக்க இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை அவர் கண்டுக்கொள்ளவில்லையே, ஏன்?

**********

14 comments:

Robin said...

ஆன்மீகத்தை பொறுத்தவரை காந்தி ஒரு hypocrite.

Tbr Joseph said...

ஆன்மீகத்தை பொறுத்தவரை காந்தி ஒரு hypocrite//

சரியா சொன்னீங்க ராபின்.

Anonymous said...

காந்திஜி கபடதாரின்னா பெண்களை சீரழிக்கிற மத போதகர்களும், பாதிரியார்களும் ரெம்ப நல்லவன்களா?

Tbr Joseph said...

காந்திஜி கபடதாரின்னா பெண்களை சீரழிக்கிற மத போதகர்களும், பாதிரியார்களும் ரெம்ப நல்லவன்களா?//

காந்திஜியை கபடதாரி என்று நான் கூறவில்லை. அதுபோன்றே கற்பழிப்பு வில்லன்கள் இல்லாத மதம் எது? விழுக்காடு விகிதத்தில் பார்த்தாலும் எந்த மதத்தில் இத்தகைய கயவர்கள் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியுமே!

இன்னும் ஒன்று. எத்தகைய கருத்தையும் தங்களுடைய சொந்த பெயரில் எழுத நெஞ்சுறுதி வேண்டும். இப்படி முகமூடியிட்டு என்னுடைய தளத்திற்கு வராமல் இருப்பது நல்லது.

Joseph George said...

I agree with the below article. Fortunately or unfortunately Gandhi is a better person than almost everyone today.
Mahatma Gandhi and Christianity
by Dibin Samuel
Posted: Thursday, August 14, 2008, 23:50 (IST)

If not for Mohandas Karamchand Gandhi, the Indian Independence struggle would have taken longer with more blood shed, division and war. When senior leaders of the Hindu political groups urged Gandhi to respond 'violence with violence' and 'sword with sword', he opposed insisting and exhorting the path of non–violence and peace, which was Gandhi's biggest sword to combat the trained and fully equipped forces.

For sure this great man is one of the most respected leaders of modern history, for not only his life, but also his ideals and his message to the people.

Although Hindu, Gandhi had a very close connection with Christianity and admired Jesus very much, often quoting from his favorite 'Sermon on the Mount' chapter in Mathew 5–7.

When the missionary E. Stanley Jones met with Gandhi he asked him, "Mr. Gandhi, though you quote the words of Christ often, why is that you appear to so adamantly reject becoming his follower?"

Gandhi replied, "Oh, I don't reject Christ. I love Christ. It's just that so many of you Christians are so unlike Christ."

“If Christians would really live according to the teachings of Christ, as found in the Bible, all of India would be Christian today,” he added.

Gandhi's closeness with Christianity began when he was a young man practicing law in South Africa. Apart from being attached with the Christian faith, he intently studied the Bible and the teachings of Jesus, and was also seriously exploring becoming a Christian, which led him to his discovery of a small church gathering in his locality.

These strongly entrenched Biblical teachings have always acted a panacea to many of India's problems during its freedom struggle.

After deciding to attend the church service in South Africa, he came across a racial barrier, the church barred his way at the door. "Where do you think you're going, kaffir?" an English man asked Gandhi in a belligerent tone.

Gandhi replied, "I'd like to attend worship here."

The church elder snarled at him, "There's no room for kaffirs in this church. Get out of here or I'll have my assistants throw you down the steps."
Article from Christian Today:
http://in.christiantoday.com/article/2837.htm

Joseph George said...

This infamous incident forced Gandhi to never again consider being a Christian, but rather adopt what he found in Christianity and its founder Jesus Christ.

In a speech to Women Missionaries in 28 July 1925, he said, “…although I am myself not a Christian, as an humble student of the Bible, who approaches it with faith and reverence, I wish respectfully to place before you the essence of the Sermon on the Mount...There are thousands of men and women today who, though they may not have heard about the Bible or Jesus have more faith and are more god fearing than Christians who know the Bible and who talk of its Ten Commandments..."

To a Christian missionary Gandhi once said, “To live the gospel is the most effective way most effective in the beginning, in the middle and in the end. …Not just preach but live the life according to the light.... If, therefore, you go on serving people and ask them also to serve, they would understand. But you quote instead John 3:16 and ask them to believe it and that has no appeal to me, and I am sure people will not understand it...the Gospel will be more powerful when practiced and preached.”

“A rose does not need to preach. It simply spreads its fragrance. The fragrance is its own sermon…the fragrance of religious and spiritual life is much finer and subtler than that of the rose.”

In many ways Gandhi was right, the intense proselytization by Christian missionaries in India through force and allurement forced him to make many scathing statements against Christian missionaries, which several times inspired them to retrospect and change the way of approach in ‘Evangelism’.

"If Jesus came to earth again. He would disown many things that are being done in the name of Christianity," Gandhi said during his meeting with an English missioner.

Here I am remembered of Sadhu Sundar Singh who is said to have done more to "indeginize" the churches of India than any figures in the twentieth century.

"You have offered us Christianity in a Western cup... Give it to us in an Eastern bowl and we will drink of it," is a famous statement by Singh, who converted from Sikh to Christianity after his personal experience with Jesus, who appeared in his room on one morning in the year 1905, when he was just fifteen years old.

Stanley Jones once asked Gandhi: “How can we make Christianity naturalized in India, not a foreign thing, identified with a foreign government and a foreign people, but a part of the national life of India and contributing its power to India’s uplift?"

Gandhi responded with great clarity, "First, I would suggest that all Christians, missionaries begin to live more like Jesus Christ. Second, practice it without adulterating it or toning it down. Third, emphasize love and make it your working force, for love is central in Christianity. Fourth, study the non–Christian religions more sympathetically to find the good that is within them, in order to have a more sympathetic approach to the people."

Mahatma Gandhi truly was the pioneer of Satyagraha—resistance to tyranny through mass civil disobedience, firmly founded upon ahimsa or total non–violence—which led India to independence and inspired movements for civil rights and freedom across the world.

He is officially honored in India as the Father of the Nation; his birthday, 2 October, is commemorated in the country as Gandhi Jayanti, a national holiday, and worldwide as the International Day of Non–Violence.

Article from Christian Today:
http://in.christiantoday.com/article/2837.htm

santa said...

அன்றைய கிருத்துவ பாதிரிகள் கருப்பர்களை இன்னமும் முழுமையான மனிதனாக பரிணாமம் கொள்ளாத விலங்கு என்று உரைத்த கிருத்துமத போதனைகளை எதிர்த்துதான் அவர் கூறியிருப்பார்

Tbr Joseph said...

Thanks for the visit and your contribution Joseph George.

I do agree that MG was not against Christianity per se. It was the attitude of the Englishmen, especially those in power at that time, and to a certain extent, the Christian missionaries which would have led hime to make his often quoted quote. Even though many blogs and sites mention about his visit to a Church there are also observations that it could be someone's imagination. MG himself did not make any mention about such an incident during his life time, except in an interview to an Englishman.

As for his observations on Christians not living as told in Bible, who can live like that, except the so called saints? I feel that it is childish for anyone to expect Christians or of any other religion to follow what is written in religious scriptures. To observe that he didn't like Christians only because some priests or nuns did not practice what they preach is unlike Ghandhi!

Tbr Joseph said...

அன்றைய கிருத்துவ பாதிரிகள் கருப்பர்களை இன்னமும் முழுமையான மனிதனாக பரிணாமம் கொள்ளாத விலங்கு என்று உரைத்த கிருத்துமத போதனைகளை எதிர்த்துதான் அவர் கூறியிருப்பார் //

இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த கிறீஸ்துவர்களையே அவர் வெறுத்ததாகத்தான் பலரும் கருதுகின்றனர். ஆனாலும் அனைத்து கிறீஸ்த்துவர்களும் காந்திஜியின் இந்த கருத்தை எதிர்த்ததும் இல்லை. அதற்காக அவரை இகழ்ந்ததும் இல்லை. கத்தோலிக்க மதத்தின் தலைவர் என கருதப்படும் பாப்பாண்டவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதெல்லாம் அவருடைய சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவதையும் கைவிடவில்லை.

Anonymous said...

கிறித்தவப்பள்ளிகளில் பாதிரிகள் கடை பிடிக்கும் பிற மதத்தை இழிவுபடுத்தும் பிரசங்க்களை காந்தி கேட்டிருக்கக்குடும். இன்றளவில் பிரட்டச்டண்டு, CSI மற்றும் பேந்தகொஸ்து பிரசன்கர்கள் பிற மத சகிப்புத்தன்மைஇன்மை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள் என்பது கண்கூடு.

Tbr Joseph said...

கிறித்தவப்பள்ளிகளில் பாதிரிகள் கடை பிடிக்கும் பிற மதத்தை இழிவுபடுத்தும் பிரசங்க்களை காந்தி கேட்டிருக்கக்குடும்//

இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த கிறீஸ்துவர்களையும் எனக்கு பிடிக்காது என்பதுபோன்ற பேச்சு காந்திஜிக்கு அழகா?

இந்த கருத்த சொல்றதுக்கு எதுக்கு அநானியா வறீங்க?

Archies said...

//'கிறீஸ்து கூறியவாறு கிறீஸ்துவர்கள் எவரும் இப்போது வாழ்வதில்லையே' என்று காந்திஜி பதிலளித்ததாகவும் ஒரு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!//
கிறீஸ்து கூறியவாறு இப்போது மட்டுமில்லை கிறிஸ்துவின் காலத்திலும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததில்லை. அன்னியா சப்பீராள் சம்பவம், யூதாஸின் சம்பவம், இன்னும் கிறிஸ்துவின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு அதன் பலனை மறுதலிக்கிறவர்கள் என்று நிறையவே நாம் காணலாம்.
இயேசு சொல்லாத சடங்காச்சாரியங்கள், பல பிரிவுகள் சுய வெறியுடன் பின்பற்றப்படுகின்றன. இவர்களை மாயக்காரரே என்று இயேசு திட்டினார். ஆகவே காந்திஜி அப்படி சொல்லியிருந்தால் அது முட்டாள்தனமான கூற்று.
பரீட்சை எழுதுகிறவன் பாடப்புத்தகத்தைப் படித்து விட்டு வந்துதான் பரீட்சை எழுதவேண்டும். அதில்லாமல் அருகிலிருக்கும் மாணவனைப் பார்த்து எழுதிவிட்டு தோற்றுப்போனால் அந்தப்பாடபுத்தகமே சரியில்லை என்று சொல்லமுடியுமா?
ஆகவே கிறிஸ்தவர்கள் என்பது கிறிஸ்துவினுடைய வார்த்தைகளைப் பின்பற்றுகிறவர்களேயல்லாமல் கிறிஸ்தவர்களைப் பின்பற்றுகிறதல்ல.
God Bless you Bro.Joseph

Tbr Joseph said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆர்ச்சீஸ்.

INDU said...

முதல்ல உங்கள நாட்ட விட்டு ரோமுக்கு விரட்டனும்..

Post a Comment