Saturday, January 03, 2009

திருக்காட்சி திருவிழா

இயேசு பாலகன் பிறந்த செய்தியறிந்து அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலினால் உந்தப்பட்டு நெடுதூரம் பயணித்த மூன்று அரசர்களின் (ஞானிகள், வாண் ஆய்வாளர்கள் எனவும் கூறலாம்) திருவிழா.

இதை குட்டி கிறிஸ்துமஸ் என கோவாவில சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதையே திருக்காட்சி திருவிழா என தமிழிலும் Epiphany என ஆங்கிலத்திலும் கூறுகிறார்கள்.

பெர்ஷியா நாட்டைச் சார்ந்த இந்த மூன்று ஆய்வாளர்களும் வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு அதைப் பிந்தொடர்ந்து சென்று இயேசு பாலகன் பிறந்திருந்த குடிலை அடைந்தனர் என்கிறது பைபிள்.


ஆகவே இறைமகன் இயேசு யூதர்களுக்கு மட்டுமின்றி புறவினத்தாருக்கும் தன்னை வெளிப்படுத்திய தினமாகவும் இது கருதப்படுகிறது.

அதாவது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்லாமல் பெர்ஷியா நாட்டைச் சார்ந்த யூதர்களல்லாதவர்களுக்கும் தன்னுடைய பிறப்பை வெளிப்படுத்திய நாள் இது.

காலங்காலமாக இத்திருவிழா ஜனவரி 6ம் நாள் உலகெங்குமுள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவுக்காக செய்யப்படும் அலங்காரங்கள் இத்திருவிழா தினம்வரை வீடுகளில் வைக்கப்படுவதுண்டு.

என்னுடைய வீட்டில் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களான குடில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் சாந்தா க்ளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆகியவற்றின் புகைப்படம் மேலே!

அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (Better late than never!!)

அன்புடன்,
ஜோசஃப்

3 comments:

ராஜா வாயிஸ் said...

மூன்று அறிஞர்களும் பெர்சியாவைச் சேர்ந்தவர்கள் என்று பைபிளில் எங்கு சொல்லியுள்ளது. கீழ்ததிசை ஞானிகள் யார் என்பது குறித்து இன்னும் பல சர்ச்சைகள் இருந்து கொண்டிருந்து அவர்கள் பூர்வீகம் தமிழகம் வரை வந்து நிற்க பெர்சியா என்று எப்படி அடித்துச்சொல்லுகிறீர்கள். பைபிளில் அப்படி இருந்தால் தயவு செய்து குறிப்பிடவும்

ராஜா வாயிஸ்

டி.பி.ஆர் said...

வாங்க ராஜா,

இவர்கள் பெர்ஷியாவைச் சார்ந்தவர்கள் என்று பைபிள் கூறுகிறது என்று சொல்ல வரவில்லை.

"மூன்று ஆய்வாளர்களும் வானில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு அதைப் பிந்தொடர்ந்து சென்று இயேசு பாலகன் பிறந்திருந்த குடிலை அடைந்தனர் என்கிறது பைபிள்."

இதுதான் பைபிள் மேற்கோள்.

புறவினத்தாருக்கும் தன்னை வெளிப்படுத்தினார் என்பதுதான் முக்கியம். அவர்கள் பெர்ஷியர்களா,இந்தியர்களா என்பதல்ல முக்கியம்.

Charles said...

கிறிஸ்தவ இனம் இன்று குறை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு, அழிந்து கொண்டிருக்கிறது. அதாவது, அன்னை மரியாள் முதன்மை படுத்தி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், அவர் யார் என எதிர்கேள்வி கேட்டு பெந்தகோஸ்தே சபையினரும், மேரி ஜீசஸ் சூசை என சொல்லாமல் சொல்லிக் கொண்டு லுத்தரன், சி.எஸ்.ஐ சகோதரர்களும் இருக்கின்றனர். இந்த அடிதடியையும், ஒருவரைஒருவர் குற்றம்சாட்டும் மனப்பக்குவம் என்று தோன்ற போகிறதோ தெரியவில்லை. பிறந்திருக்கும் இயேசு பாலனை இன்னும் சில வாரங்களில் சிலுவையில் அறைந்து உயிர்பிக்க போகிறோம். நாமும் அவரை போன்று இதயமுள்ளவர்களாய், தவறுகளை தாங்கும் மன்னிக்கும் மனமுள்ளவர்களாய் மாறி, பாவத்தின் சின்னமான விளங்கிய சிலுவையை தோளில் சுமந்து, அதில் அறையப்பட்டு, மனிதநேயமுள்ள, மற்றவர்கள் மன்னிக்கிற, நேசிக்கிற, அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கிற மானுடனாய், மனிதர்களாய் வாழ்வோம்.

என்றும் அன்புடன்,
சார்லஸ் அமுல்துரை
charles_d_a@rediffmail.com

Post a Comment