Saturday, September 22, 2007

சோ ஒரு படித்த கோமாளி

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சோ எனக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர்.

முட்டை, முட்டைக் கண்களை உருட்டி பல படங்களில் அவர் அடித்த லூட்டிகள் மறக்க முடியாதவை.

தேன் மழைன்னு ஒரு படம். கடத்தி வச்சிருக்கற கும்பல் அவரோட நண்பரோட தொலைப்பேசி எண்ணை சொல்றியா இல்லையான்னு கத்திய காட்டி மிரட்டும். இவர் கண்களை உருட்டியவாறு சொல்வார்'டேய் இதுக்கெல்லாம் பயந்து அந்த ஃபோன் நம்பர் 4678120னு சொல்லுவேன்னு பாத்தியா? சொல்ல மாட்டேன்.' அதாவது ஃபோன் நம்பர சொல்லிட்டு சொல்லமாட்டேன்னு சொல்வார். இதே மாதிரி தொடர்ந்து வீட்டு விலாசத்தையும் சொல்லிட்டு சொல்வேன்னு பாத்தியா, சொல்ல மாட்டேன்னு சொல்வார்.

தமாஷாருக்கும்.

அதே மாதிரி இந்த வாரத்து வார இதழ் ஒன்னுலயும் (அந்த எந்த இதழ்னு சொல்லணுமா என்ன?) நிறைய ஜோக் அடிச்சிருக்கார்.

அதாவது மு.க அவர்களுக்கு இந்து மத கடவுள்களை பழிப்பதற்குத்தான் தெரிகிறது. ராமர் இருந்தாரா இல்லையா, முருகர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேட்கும் இவர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவ மதங்களில் நடந்தவைகளுக்கெல்லாம் சரித்திர, அறிவியல் சாட்சிகளை கேட்பாரா என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் நாங்கள் அப்படியில்லை. கிறிஸ்து மரித்து உயிர்த்ததற்கு சரித்திர, அறிவியல் சான்றுகள் உண்டா என்று நாங்கள் கேட்போமா? கேட்க மாட்டோம். என்று தமாஷ் செய்திருக்கிறார்.

'அதான் கேட்டுட்டீங்களே சார், அப்புறமென்ன கேக்க மாட்டோம்னு சொல்றீங்க?' அப்படீன்னு நாங்க கேப்போமா சோ அவர்களே, கேட்க மாட்டோம்.

சோ ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மற்றபடி சுப்பிரமண்ய சாமியைப் போலவே இவரும் ஒரு படித்த முட்டாள். கோமாளி, சந்தர்ப்பவாதி. சமயத்திற்கேற்றாற்போல் பேசுவார், எழுதுவார். நாகரீகம் என்று வாய் கிழிய பேசுவார். ஆனால் அவருடைய எழுத்தில் அதை பார்க்க முடியாது.

மு.க. இந்துக்களை பரிகசித்து, இழித்து பேசிவிட்டார் என்றால் அவரை சாடிவிட்டு போங்க. அத விட்டுட்டு மத்த மதங்களை பற்றி எதுக்கு சார் பேசறீங்க? சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டு நாங்க சொல்ல மாட்டோம்னு வேற சொல்லிக்கறீங்க.... ஏன் சார் இதென்ன காமெடி டயலாக்கா?

என்னத்த படிச்சி என்ன பிரயோசனம்? இதுல சட்டவல்லுனர்னு வேற சொல்லிக்கறது.

கேவலம்.

கோமாளின்னு வேணும்னா சொல்லிக்குங்க. அதான் சரியாருக்கும்.

8 comments:

கோவி.கண்ணன் said...

//சொல்லிட்டு நாங்க சொல்ல மாட்டோம்னு வேற சொல்லிக்கறீங்க.... ஏன் சார் இதென்ன காமெடி டயலாக்கா?

என்னத்த படிச்சி என்ன பிரயோசனம்? இதுல சட்டவல்லுனர்னு //

சரியான கேள்விதான். மு கருணாநிதியை சாக்கிட்டு இவர்கள் மற்ற மதத்து மீது காழ்பை காட்டுகிறார்கள். சுப்ரமணிசாமி கருணாநிதி கேட்பாரா ? என்று கன்னி மேரி மாதாவை இழுத்ததை பார்த்தீர்களா ?

http://govikannan.blogspot.com/2007/09/blog-post_22.html

:))

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

சுப்ரமணிசாமி கருணாநிதி கேட்பாரா ? என்று கன்னி மேரி மாதாவை இழுத்ததை பார்த்தீர்களா ?//

ஆமாங்க. அந்தாள் அதுக்கு மேல கோமாளி. தராசுல இவங்க ரெண்டு பேரையும் வச்சா வச்சா எந்த சைடும் கீழ போகாது:-)

ஓகை said...

பிற மதங்களை இழிவு படுத்திப் பேசுவதை பெரும்பாலான இந்துக்கள் செய்வதில்லை. பலவிதமான கடவுள்களை வழிபடும் இந்துக்களுக்கு மற்ற மதக் கடவுள்கள் மேலும் சில சில தெய்வங்கள் என்ற வரிசையில் வருவார்களே தவிர இழித்துச் சொல்ல மனதாலும் நினைக்க மாட்டார்கள். என்னை வைத்து மட்டும் நான் சொல்லவில்லை. நான் அறிந்தவரை பெரும்பாலான இந்துக்களின் மனநிலை இதுதான்.

இந்து மதத்தை மட்டும் பழித்துவிட்டு மற்ற மத நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிப்பதும் விமர்சனம் செய்யாமல் இருப்பதும் கயமையிலும் கயமை, கடைந்தெடுத்த கயமை. இதை உங்களால் புரிந்துகொள்ள இயலுமானால் சோ மற்ற மதங்களை தொடர்பு படுத்திப் பேசியதைப் புரிந்து கொள்ள முடியும்.

மற்ற மதத்தவரை இழித்துப் பேசும் இந்து வன்முறையாளர்களை நீங்கள் கண்டிக்கும்போது நானும் உங்களுடன் சேர்ந்து கொள்வேன்.

இந்துமதத்தினர் பெரிதும் மதிக்கும் இராமனைப் பழித்த கலைஞரின் மேல் ஒரு இறைநம்பிக்கையாளர் என்ற முறையில் உங்களுக்கும் மனதளவில் கண்டனம் இருக்குமென்றே நம்புகிறேன்.

ஜோ / Joe said...

:))

tbr.joseph said...

வாங்க ஓகை,

பிற மதங்களை இழிவு படுத்திப் பேசுவதை பெரும்பாலான இந்துக்கள் செய்வதில்லை. நான் அறிந்தவரை பெரும்பாலான இந்துக்களின் மனநிலை இதுதான்.
//

உண்மைதான். பல பிரபலமான கிறிஸ்துவ ஆலய விழா கூட்டங்களில் அதிகம் கலந்துக்கொள்வது இந்துக்கள்தான்.

இந்து மதத்தை மட்டும் பழித்துவிட்டு மற்ற மத நம்பிக்கைகளை உயர்த்திப் பிடிப்பதும் விமர்சனம் செய்யாமல் இருப்பதும் கயமையிலும் கயமை, //

என்னுடைய நிலைப்பாடு என்னவெனில் எந்த மத நம்பிக்கையையும் எள்ளி நகையாடுவது சரியல்ல என்பதுதான். அது யாராக இருந்தாலும்.

ஆனால் அதே சமயம் தங்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் மதத்தை கையில் எடுத்துக்கொண்டு போராட்டத்தில் இறங்குவதும் பிறகு அதை மறந்துப்போவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பிஜேபி போன்ற அரசியல் கட்சிகளின் போக்கு இதைத்தான் காட்டுகிறது. சேது சமுத்திர கால்வாய் திட்டம் தங்களுடைய கட்சியின் முயற்சியால் வந்தது என்று கூறுவதும் இப்போது ராமர் பாலத்தை திமுக அரசு வேண்டுமென்றே தகர்க்க திட்டமிடுகிறது என்று வாதிடும் அ இஅதிமுகவின் போக்கும் இத்தகையதுதான்.

இந்துமதத்தினர் பெரிதும் மதிக்கும் இராமனைப் பழித்த கலைஞரின் மேல் ஒரு இறைநம்பிக்கையாளர் என்ற முறையில் உங்களுக்கும் மனதளவில் கண்டனம் இருக்குமென்றே நம்புகிறேன்.//

இதை என்னுடைய ராமர் பாலம் பதிவிலேயே மிகத்தெளிவாக கூறியுள்ளேன். என்ன சமாதானம் கூறினாலும் முக வின் பேச்சு சிறுபிள்ளைத்தனம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முதல்வர் , அவர் அனுபவத்தால் இந்த பேச்சைத் தவிர்த்திருக்கலாம்.
இன்றுவரை அவரால் 'மஞ்சள் துண்டுக்கு' விளக்கம் தர முடியவில்லை.
பி.டி.பழனிவேல் ராஜனின் ,மதுரை மீனாட்சி பக்தியையும் ,குங்குமத்தையும் இவரால்,அவர் இறக்கும் வரை எதுவும் சொல்ல முடியவில்லை.(பரம்பரை பொட்டு என சப்பைக் கட்டுக் கட்டினார்.)
ஆனால் இவற்றையெல்லாம் சாட்டாக வைத்து, சோ,சுப்பிரமணிய சுவாமி வேற்றுமதத்தில் தேவையின்றி கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது.
கலைஞர் பிறப்பால் இந்து....இந்துவத்தால் பாதிக்கப்பட்டவர்...அதன் மேல் தான் அவர் கேள்வி எழுப்புவார்.
இங்கே சும்மா இருக்கும் கிறிஸ்தவ,இஸ்லாமிய அன்பர்களை இழுப்பது..கொழுவி விட்டுக் கூத்துப் பார்க்கும் குணம்.
இவர்கள் கற்றவர்களானால் இப்போக்கைத் தவிர்க்க வேண்டும்.

K.R.அதியமான். 13230870032840655763 said...

a old mail :

To : Mr.Rajinder Puri,

Dear Sir,

I belive in karma and dharma. Advani has been punished partly for his past sins in using the Ram temple fanatics of VHP, etc to further his political career
since 1980s. VHP and Co are alteast sincere and consistent in their fanatisism. They are genuine
communalists and facisits, who do not belive in democracy. but they are honest and forthright. never
double dealing nor political animals. But Advani is a crafty and cynical politician, and a
'pseudo-communalist'. VHP is right in being disillusioned with him, who carefully used thier
agenda (Ram temple) to whip up a populist mass base and votes. And due to political expediancy, he abandoned Ram temple later.

Advani, whose ratha yatra (which directly resulted in the murder of 1000s of inncoents in 1990) would have become PM, but for the Jain hawala case. (thanks to your PIL) ; and now he stands discredited and powerless
within his own group.

Lord Rama has done justice. And Advani will never be PM in India.

Om tat Sat.

Regards
Athiyaman
Chennai

ஜீவி said...

இப்படி எழுதுவது இவர்களின் வழக்கமாகப் போய்விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால்,வேறுசிலர்
ஒரே மதக்கடவுளரிடமும் கூட வேறுபாடும் மாறுபாடும் காண்பார்கள்.
'தமிழ்ச்சொல் கேளா செவிடா' என்று
வைணவத்தைத் தாங்கிப்பிடிக்கும் பொழுது, சிவபெருமானைத் தூற்றுவார்கள்.ஒருமதத்திற்குள்ளேயே,'வெவ்வேறு கடவுள்கள்-என் கடவுள் தான் உசத்தி' என்று வேறுபாடு காண்பவர்கள்,பிறமதக்கடவுளர்களைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. குறைந்தபட்சம், தன் மதக்கடவுளர்களாகிய 'அரியும்-அரனும் ஒன்றே'என்றுகூடப் புரியாதவர்கள் பிற மதக் கடவுளர்களைப்பற்றி என்ன புரிந்து கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.. 'இவர்களிடம் போய் எல்லா மதங்களும் ஒன்றே-
எல்லா இறையும் ஒன்றே' என்கிற பரந்து பட்ட பார்வையை எப்படி எதிர்பார்க்க முடியும்? இதற்கெல்லாம் காரணம், இவர்களுக்கு சரியான 'இறைத்தத்துவம்' புரியாமை தான். நாத்திகம் பேசுபவர்களுக்கு முன்னாலேயே, இந்த ஆத்திகப் பேர்வழிகள், மனிதர்களை ஒன்றுபடுத்த வந்த இறைவனையே, பல்வேறு உருவங்களில்கூறு போட ஆரம்பித்து விட்டார்கள்.அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட பெயர் தான் மதம். 'குகனொடு ஐவரானோம்; பின்பு குன்று சேர்வான் மகனொடு அறுவரானோம்'என்று 'சோஷலிச' ஒற்றுமை பேசி, எல்லோரையும் இழுத்துஅணைத்துக்கொண்ட 'இராமகாதை'யை இவர்கள் புரிந்து கொண்ட லட்சணம் இதுதான்! நாத்திகக் கருத்துக்களை ஆத்திகர்கள் ஒன்று சேர்ந்து, வன்முறைகள் அற்ற வழிகளில், வாதாடல்கள் மூலம் எதிர்கொண்டால், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இறைவனை நம்புவர்களுக்கிடையேயும், நம்பாதவர்களுக்கிடையேயும்,இவர்கள் படைத்த மதத்தின் பெயரால் வேறுபாடுகளும், மாறுபாடுகளும் என்றால்..
மனிதனைப் பிரிக்க வந்த இந்த மதங்கள் தேவையா என்று தான் எண்ணத் தோன்றுகிறது. பிரித்தாளுவதற்கு,ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால், மதமும், ஜாதியும்,
ஜாதி உட்பிரிவுகளும், இன வேறுபாடுகளும் தேவையாக இருக்கிறது. நமக்கெதற்கு இவையெல்லாம்?...நான் ஏசுவைப் போற்றிப்புகழ ஒரு கிறிஸ்துவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா.. எழுத எழுத நீண்டு போவதால்,
'இறைவழிபாடு-ஓர் அலசல்' என்னும் என் பதிவுக்கு உங்களை அழைக்கிறேன்.

Post a Comment