Wednesday, December 27, 2006

இன்றைய சாதனை!

‘இன்று ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இன்று நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துங்கள். அதுவே ஒரு பெரிய வெற்றியை அடைந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.’

சாதனை என்பது தினமும் சாத்தியமல்ல.

தினமும் சாதிக்கக் கூடியது எதுவும் பெரிய சாதனையுமல்ல.

ஆனால் பிறரன்பு அப்படியல்ல.

நம்மை நாமே அன்பு செய்வது பெரிய விஷயமல்ல. அதை ஐந்தறிவு படைத்த விலங்குகளும் செய்கின்றன.

நம்மை நாம் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்!

செய்து பாருங்கள். அது எத்தனை சிரமம் என்பது விளங்கும்.

மனித இயல்புக்கு அப்பாற்பட்ட விஷயம் அது.

நம்மை நம்முடைய எல்லா குறைகளுடனும் நாம் ஏற்றுக்கொள்வதுபோல பிறரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயலாத காரியம்தான். ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லையல்லவா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பிணைப்பை காதல் என்கிறோம்.

காதலின் அடித்தளமே இந்த பிறரன்புதான்.

இதில் கண்டதும் காதல் சேர்த்தியல்ல. இது கதைகளில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் ஏற்படும் இத்தகைய காதல் நாளடைவில் வெறும் காகிதக் காதலாகிவிட வாய்ப்புண்டு.

இறைவனுக்கு மனிதர்களை இனம் பிரித்து பார்க்க தெரிவதில்லை. சாதி, மதம், மொழி, நிறம் இவை எவற்றையுமே பார்க்காமல் அன்பு செய்கிறவர் இறைவன்.

ஆகவேதான் அன்பே உருவானவர் இறைவன் என்கிறோம்.

இறைவனால் இது முடிகிறது. ஏனெனில் அவரே அனைத்தையும் படைத்தவர்.

நம்மால் இது முடிவதில்லை.

முடியாததை செய்து முடிப்பதே ஒரு சாதனைதானே..

பெரிதாய் எதையும் சாதிக்க முடியவில்லையே என வருந்துவதைத் தவிர்த்து இதையாவது சாதிக்க முயல்வோம்!

****






3 comments:

வினையூக்கி said...

//இதில் கண்டதும் காதல் சேர்த்தியல்ல. இது கதைகளில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் ஏற்படும் இத்தகைய காதல் நாளடைவில் வெறும் காகிதக் காதலாகிவிட வாய்ப்புண்டு.
//
:):):):):)

tbr.joseph said...

வாங்க வினையூக்கி,

:):):):):) //

இதுக்கு என்ன அர்த்தம்?

ஏதாவது ஏற்பட்டிருக்கா?

வினையூக்கி said...

சில பல வருடங்களுக்கு முன்பு, ஸ்மைல்ஸ்

Post a Comment