Wednesday, December 20, 2006

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்!

‘நமக்கு நல்லது நடக்கும் சமயங்களில் நாமும் பிறருக்கு அதை செய்ய முயல வேண்டும்.’

தினை விதைத்தவன் தினையையும் வினை விதைத்தவன் வினையையும் அறுவடை செய்வான் என்பதைக் கேட்டிருக்கிறோம்.

நமக்கு நல்லது  நடக்க வேண்டும் என்று  எப்படி விரும்புகிறோமோ அது பிறருக்கும் நடக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

நாமும் நம்மைச் சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது போலவே மற்றவர்களும் நினைக்க வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்து போகிறோம்.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை பலரும் இன்றும் பாசத்துடன் நினைவுகூரக் காரணம் அவர் தனக்கு கிடைத்த சன்மானங்களையெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்த அந்த நல்ல உள்ளம்!

இவரைப் போன்று நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு சான்றாக சான்றோர்கள் பலர் வாழ்ந்த பூமி இது.

நாம் நல்லவற்றையே நினைத்தால் நமக்கும் நல்லது நடக்கும் நம்மால் பிறருக்கும் நல்லவற்றை செய்ய முடியும் என்பதை நம்புகிறவன் நான்.

பிறருடைய நல்லவைகளில், அவர்களுடைய வெற்றியில் நாம் பங்குகொள்கிறோமோ இல்லையோ அதைப் பார்த்து அழுக்காறு கொள்ளாமலாவது இருக்க முயல வேண்டும்.

ஆனால் அதற்கு மேலே ஒரு படி சென்று அவர்களுடைய மகிழ்ச்சியில் கலந்துக்கொள்ள முயன்றால் அதில்தான் மனிதம் முழுமைப் பெறுகிறது.

இப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் என்றென்றும் நினைவில் கொண்டிருக்கும்.

நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.

*****

6 comments:

வினையூக்கி said...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்

இனிய உளவாக இன்னாது கூறக் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று

tbr.joseph said...

வாங்க வினையூக்கி,

அருமையான குறள்களை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்..

இப்பதிவின் சாராம்சமே இதுதான் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான கருத்துகள் ஜோஸப் சார். நீங்கள் மதத்திற்கும் அப்பால் இந்த தேச சிந்தனைகளில்தான் இந்த நாட்டு விழுமியங்களில் வேரூன்றி இருக்கிறீர்கள் என்பதனை இது காட்டுகிறது. வாழ்த்துக்கள். கூடவே கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

வாங்க நீலகண்டன்,

கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள். //

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மலரும் புத்தாண்டு பிரிவினைகளையும், சச்சரவுகளையும் களைந்தெறியும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய ஆவல், இல்லையா?

மதுமிதா said...

விதையொன்றி விதைக்க சுரையொன்று முளைக்காது

அன்பை விதைக்க அன்பே விளையும்
நன்மை விதைக்க நன்மை விளையும்

///நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.///

நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்:-)

tbr.joseph said...

வாங்க மதுமிதா,

அன்பை விதைக்க அன்பே விளையும்
நன்மை விதைக்க நன்மை விளையும்//

பதிவின் சாராம்சத்தை இரண்டே வரிகளில் அடக்கிவிட்டீர்கள்.

மிக்க நன்றி.