‘பெரிய சாதனைகளை படைக்க பெரியவர்களாக (வல்லவர்கள்) இருக்க வேண்டும் என்பதல்ல.. பெரியவற்றை சாதிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ள சிறியவர்களாலும் முடியும்’
‘தம்மை உயர்த்திக்கொள்வோர் தாழ்த்தப்படுவோர். தம்மை தாழ்த்திக்கொள்வோர் உயர்த்தப்படுவோர்’ : இது பைபிள் வாக்கு
இறைவனின் படைப்பிலே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றில்லை.
அவரவர் சொல், செயல், சிந்தனை இவைகளை வைத்தே ஒருவர் பெரியவரா சிறியவரா என்பதை இவ்வுலகம் கணிக்கின்றது.
ஒருவரை பெரியவர் என்று கணிக்க அவருடைய பணம், பதவி அல்லது செல்வாக்கு ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால் அத்தகைய கணிப்பு நிரந்தரமானதல்ல என்பதையும் நான் கண்டுணர்ந்திருக்கிறோம்.
இன்று முதல்வராயிருந்தவர் நாளை கைதியாவதும், இன்று கைது செய்யப்படுபவர் நாளை முதல்வராவதும் சரித்திரம்!
சமுதாயத்தின் அடிமட்டத்தில் வறுமையில் உழலும் குடும்பத்திலிருந்து வந்த எத்தனையோ இளைஞர், இளைஞிகள் உலகில் எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்கவியலாத சாதனைகள¨ நிகழ்த்தியிருப்பதை சமீப காலமாக பல பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம்.
சாதனைகளைப் படைப்பதற்கு நாம் பெரியவர்களாக, அதாவது மெத்தப் படித்த மேதைகளாகவோ, அல்லது செல்வாக்குள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்குள்ளவர்களை பரிச்சயமுள்ளவர்களவோ இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல என்பதை இவை நிரூபித்துள்ளன.
சாதனைகளைப் படைக்க நம்முடைய சமுதாய மற்றும் பொருளாதார நிலை ஒரு பொருட்டே இல்லை.
சாதனைகளைப் படைக்க அதை படைக்க வேண்டுமென்ற எண்ணம், நம்மால் அதை அடைய முடியும் என்ற ஒரு முழுமையான ஈடுபாடு இருந்தாலே போதும்.
சாதனைகள் நம் காலடியில் வந்து விழும் என்பது நிச்சயம்!
சாதனைகள் படைக்க சந்திரனை எட்டிப் பிடிக்க வேண்டுமென்பதில்லை.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மால் எட்ட முடியாதவற்றை எட்டிப்பிடிப்பதும் சாதனைதான்.
சாதனை படைப்போர் புது சரித்திரத்தையே எழுதுபவர்கள் என்பதை மறக்கலாகாது..
வாருங்கள். புது சாதனை படைப்போம், புது சரித்திரம் எழுதுவோம்!!
****
Monday, December 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)


2 comments:
//தம்மை உயர்த்திக்கொள்வோர் தாழ்த்தப்படுவோர். தம்மை தாழ்த்திக்கொள்வோர் உயர்த்தப்படுவோர்’ //
எனக்கு பைபிளில் பிடித்த வாசங்களில் இதுவும் ஒன்று.
//அவரவர் சொல், செயல், சிந்தனை இவைகளை வைத்தே ஒருவர் பெரியவரா சிறியவரா என்பதை இவ்வுலகம் கணிக்கின்றது//
நன்றி சொன்னீர்கள் சார்.
//சாதனைகளைப் படைப்பதற்கு நாம் பெரியவர்களாக, அதாவது மெத்தப் படித்த மேதைகளாகவோ, அல்லது செல்வாக்குள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்குள்ளவர்களை பரிச்சயமுள்ளவர்களவோ இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல என்பதை இவை நிரூபித்துள்ளன
//
அருமையான வரிகள்
நன்றி வினையூக்கி.
Post a Comment