Wednesday, November 15, 2006

இளைய தலைமுறை!

‘நம்முடைய குழந்தைகளுக்கு முன்பு நாம் நல்லது செய்தாலும், தீயது செய்தாலும் அது அவர்களுடைய மனதில் ஆழமாய் பதிந்துவிடும்.’

எல்லா தலைமுறையினருமே அவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறையினரைக் குறை கூறுவதிலேயே முனைப்பாயிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

நான் என்னுடைய தாத்தா, தந்தை என்னுடைய தலைமுறையினரிடம் கண்ட அதே குற்றத்தையே நானும் இப்போது என்னுடைய மக்களிடத்தில் காண்கிறேன்.

இது இனி வரும் எல்லாத் தலைமுறையினரும் பாடும் பாட்டாகவே இருக்கும்.

ஆனால் இதற்கு காரணம் யார் என்பதை நாம் அனைவருமே மறந்துபோகிறோம்.

நம்முடைய பெற்றோர்கள் நம்முடைய இளம் பருவத்தில் நம் கண்ணெதிரே பேசிய பேச்சு, செய்த செய்கைகள் இவைகளைத்தானே நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கும் எதிரில் பேசுகிறோம், செய்கிறோம்?

நம்முடைய பெற்றோர்கள் பேசிய பேச்சும், செய்த செய்கைகளும் நல்லவைகளாய் இருந்திருந்தால் நாமும் நல்லதையே பேசி, நல்லதையே செய்திருப்போம்.

அதையே நம்முடைய பிள்ளைகளும் கடைப்பிடித்திருப்பார்கள். நாமும் நம்முடைய பெற்றோர்கள் செய்த தவறுகளையே செய்துவிட்டு நம்முடைய இளைய தலைமுறையனரை மட்டும் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று குறை காணுவதில் என்ன பயன்?

ஏசு வாழ்ந்த காலத்தில் ஒருமுறை தன்னைக் காண வந்த இளஞ்சிறார்களை சீடர்கள் தடுத்து நிறுத்துவதைப் பார்த்து இவ்வாறு கூறுவார். ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோரதே..’ மேலும் ‘இச்சிறார்களுக்கு யாரேனும் இடைஞ்சலாயிருந்தால் (அதாவது அவர்கள் வழிதவறிச் செல்ல காரணமாயிருந்தால்) அவர்களுடைய கழுத்தில் இயந்திரக் கல்லைக் கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும்’ என்பார்.

ஆம்..

மாசு, மருவற்ற இளம் உள்ளங்களில் தவறான சிந்தனைகளை விதைப்பது அவர்களுக்கு விஷத்தை ஊட்டுவதற்கு சமம்.

நம்முடைய பெற்றோர்களுக்கு அவர்களுடைய வயதான காலத்தில் நாம் செய்வது: அது நல்லதாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி அதையேத்தான் நம்முடைய பிள்ளைகளும் நமக்குச் செய்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவெ இன்று முதல் நம்முடைய பிள்ளைகளுக்கு முன்பு நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம்.

****

14 comments:

G.Ragavan said...

பாவங்களில் பெரிய பாவம் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பது. ஏசுபிரானின் பொன்மொழி அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டியதும் செயலில் காட்ட வேண்டியதும் ஆகும். குழந்தைகள் வருங்காலம். வருங்காலம் சிறப்பாக குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க வேண்டும். மிகவும் நல்ல பதிவு.

tbr.joseph said...

வருங்காலம் சிறப்பாக குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க வேண்டும்//

சத்தியமான வார்த்தைகள் ராகவன்.

வினையூக்கி said...

நல்ல பதிவு சார், நாம் தெரிந்தோ தெரியாமலோ , வெறுப்புகளை நம் குழந்தைகள் மேல் திணித்து விடுகிறோம். முதலில் நம் வெறுப்புகளை குழந்த்தைகள் மத்தியில் பேசுவதை நிறுத்தினாலே , இளைய சமுதாயம் நன்றாக அமையும்.

tbr.joseph said...

முதலில் நம் வெறுப்புகளை குழந்த்தைகள் மத்தியில் பேசுவதை நிறுத்தினாலே , இளைய சமுதாயம் நன்றாக அமையும். //

சரியா சொன்னீங்க வினையூக்கி. சற்று சிரமம்தான்.. ஆனால் முயன்றால் முடியாதது இல்லை..

தேவ் | Dev said...

I agree to this post

tbr.joseph said...

Thanks Dev!

Long time no see!!

துளசி கோபால் said...

நம்ம 'வினையூக்கி' சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.

tbr.joseph said...

உங்களுடைய வழிமொழிதலை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் துளசி:))

தேவ் | Dev said...

Joseph sir.. always see but commentings only problem

Ellaam because of laziness :)))

tbr.joseph said...

Ellaam because of laziness //

It's OK Dev.. I thought you were out of station or something..

Ok,all the best:))

ILA(a)இளா said...

நல்ல கருத்து ஜோசப் சார், வினையூக்கி சொல்வதையும் மனதில் கொண்டால் இளைய சமுதாயத்துக்கு நல்ல எதிர்காலத்தினை அமைத்து தந்துவிடலாம்

ஜோ / Joe said...

//ஆகவெ இன்று முதல் நம்முடைய பிள்ளைகளுக்கு முன்பு நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம்.//

உபயோகமான உபதேசம்..கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் ஜோசப் சார்.

tbr.joseph said...

வினையூக்கி சொல்வதையும் மனதில் கொண்டால் இளைய சமுதாயத்துக்கு நல்ல எதிர்காலத்தினை அமைத்து தந்துவிடலாம் //

உண்மைதான் இளா!

tbr.joseph said...

உபயோகமான உபதேசம்..கண்டிப்பாக கடைபிடிக்கிறேன் //

ஒரு நல்ல தலைமுறை உருவாவதற்கு நாம் அடிக்கல் நாட்டுவோமே..

நன்றி ஜோ..

Post a Comment