‘வாழ்க்கையில் நாம் அவ்வப்போது செய்யும் தவறுகள் நமக்கு பாடம் கற்பிப்பதுடன் மற்றவர்களுடைய தவறுகளையும் பொறுத்துக்கொள்ள உதவுகிறது.’
தவறு செய்வது மனித இயல்பு.
ஆனால் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதுடன் மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் இருப்பதை இயல்பாக்கிக் கொள்வது அவசியம்.
தவறு செய்வது மனித இயல்பு என்பதை நாம் உணர்ந்துவிட்டால் போதும் பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்பது எளிதாகிவிடும்.
பைபிளிலும் இதைக் குறித்து ஒரு வாசகம் வருகிறது. ‘உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தை மறந்துவிட்டு உன் அயலான் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்க்காதே.’
உண்மைதானே..
நம்முடைய தவறுகளால் நமக்கு ஏற்படும் இழப்பைத் தாங்கிக்கொள்வது நமக்கு எளிதாகத் தெரிகிறது.
அதுவே பிறருடைய தவற்றால் என்றால் மட்டும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
இதுவும் மனித இயல்புதான். அப்படி நினைக்காமல் இருப்பதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை.
அது போகப் போக, நம்முடைய வாழ்நாளில் கிடைக்கும் அனுபவங்களே நம்மை அத்தகைய பக்குவத்துக்கு இட்டுச் செல்லக் கூடும்.
அத்தகைய மனப்பக்குவமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.
இன்றைய குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் அத்தனை விரிசல்களுக்கும் இத்தகைய மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே காரணம் என்றால் மிகையாகாது.
மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பண்டைய காலத்து சொல் இப்போதும், இந்த 21ம் நூற்றாண்டிலும் பொருத்தமாக இருப்பதுதான் வேதனை, வெட்கக் கேடு.
சுருங்கிக் கிடக்கும் நம்முடைய மனதை விசாலப்படுத்தி பிறருடைய தவறுகளைப் பொருத்துக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் பெற என்ன செய்ய வேண்டும் என்று நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டும்..
சிந்திப்போமா?
Subscribe to:
Post Comments (Atom)


4 comments:
மாமியார் மண்குடம்- உடைஞ்சால் திரும்ப வராது.
போனது போனதுதான்.
மருமகள் பொன்குடம்- திருப்பி செஞ்சுக்கலாம்.:-))))
நானும் சிந்திச்சுக்கிட்டே இப்ப பழமொழிகளைத் தேடிக்கிட்டு இருக்கேன்.
இந்த அவசரயுகத்தில் பலரிடம் இது இருப்பதில்லை.வருந்தத்தக்க விஷயம்.
நான்,தான் இப்படி எல்லாவற்றிலும் பார்பதைவிட்டு,நானும் தவறு செய்வேன் என்பதை உணர்ந்தால் நீங்கள் சொன்னது போல் அடுத்தவர் தவறு பெரிதாக தெரியாது.
உங்க எழுத்து நாளுக்கு நாள் மெருகேறுகிறது.
இப்படி பின்னூட்டம் போட்டாவது எங்க எழுத்தை முன்னேற்றாலம் என்று பார்க்கிறேன்.:-))
வாங்க குமார்,
இந்த அவசரயுகத்தில் பலரிடம் இது இருப்பதில்லை.வருந்தத்தக்க விஷயம்.//
உண்மைதான்..
இப்படி பின்னூட்டம் போட்டாவது எங்க எழுத்தை முன்னேற்றாலம் என்று பார்க்கிறேன்//
இது கொஞ்சம் ஓவரா தெரியுதே.. இருந்தாலும் ஸ்மைலி போட்டுட்டீங்களே..அதனால ச்சும்மா தமாஷ்னு நினைச்சிக்கிறேன்..
வாங்க துளசி,
மாமியார் மண்குடம்- உடைஞ்சால் திரும்ப வராது.
போனது போனதுதான்.//
அதாவது மருமகள் பார்வையில..
மண்குடம் ஒடஞ்சா வேற வாங்கிக்கல்லாமில்ல.. என்ன மிஞ்சிப்போனா அஞ்சோ இல்ல பத்தோ இருக்கும்.. அப்படித்தானே:))
Post a Comment