Monday, October 16, 2006

இடைஞ்சல்கள்

“விஞ்ஞானம் எந்த அளவு முன்னேறியிருந்தாலும் வீசும் சூறாவளி காற்று, பேய் மழை, கண்களைக் கூசவைக்கும் மின்னல், நடுங்க வைக்கும் இடி என்ற இயற்கைச் சீற்றங்களை தடுக்க முடிவதில்லை. ஆனால் அது இவற்றின் அழிவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது.”

அதுபோல்தான் நம் வாழ்விலும்.

சில சமயங்களில் நமக்கு ஏற்படும் சோதனைகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றிற்கு காரணம் என்னவென்பது நமக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது.

‘நான் எவ்வளவோ கவனமாகத்தானே செயல்பட்டேன்.. பிறகெப்படி?’ என்ற மாய்ந்து போகிறோம்.

காரணத்தை அல்லது காரணகர்த்தாவைத் தேடி அலைகிறோம்..

நமக்கு தோல்வியின் தாக்கத்தைவிட நான் இதை எதிர்பார்க்காமல் போனேனே என்ற அங்கலாய்ப்பே அதிகமாகிறது.

புயல், மழை, இடி, மின்னல். இவற்றிற்கு காரணங்களைத் தேடி அலைந்தால்.. இறைவனையல்லாது யாரை குற்றம் சொல்வது?

இயற்கையின் சீற்றத்திற்கு காரணகர்த்தா இறைவந்தானே? அவராக பார்த்து வீசியது போதும், பெய்தது போதும் என்று நினைக்கும்வரை (இதற்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வாதாடுவர்களுடன் வாதாடி பலனில்லை) பொறுத்திருக்க வேண்டியதுதான்.

ஆட்டத்தை துவக்கியவந்தானே முடிக்க வேண்டும்?

அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..

நம்மால் ஓரளவுக்குத்தான் கவனமாக இருக்க முடியும்.

சாலையில் நாம் எவ்வளவு கவனமாக வாகனத்தை செலுத்தினாலும், பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் நாம் நடந்து சென்றாலும் சில சமயங்களில் விபத்துகளில் சிக்கிக்கொள்வதில்லையா?

நடக்கும் விபத்து பிறருடைய கவனக்குறைவாலும் ஏற்படலாம் அல்லவா?

அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..

நம்மால் இயன்ற அளவு கவனமாக, உண்மையாக இருப்போம், முழு மனதுடன் உழைப்போம். நல்லவற்றையே நினைப்போம்.

அதன் பிறகும் ஏற்படும் தோல்விகளை, ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை நமக்களிக்கும்படி இறைவனை வேண்டுவோம்..

இறைவனின் அருள் நமக்கு இருக்கும் வரை இத்தகைய தாற்காலிக இடைஞ்சல்களை நம்மால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மழைக்கு பின்னாலும் வானவில் உண்டுதானே..

***

4 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//இறைவனின் அருள் நமக்கு இருக்கும் வரை இத்தகைய தாற்காலிக இடைஞ்சல்களை நம்மால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மழைக்கு பின்னாலும் வானவில் உண்டுதானே..
//

ஐயா நன்றாக சொன்னீர்கள் !

ஒவ்வொரு மழைக்கு பின்பும் ஒரு வானவில் உண்டு, அங்கு ஞான சூரியனும் இருந்தால் !
:))

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

ஒவ்வொரு மழைக்கு பின்பும் ஒரு வானவில் உண்டு, அங்கு ஞான சூரியனும் இருந்தால் //

சரியாய் சொன்னீர்கள்.

ஞான சூரியன் இல்லாமலிருந்தால் அங்கு சூன்யம்தான் இருக்கும்..

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
சத்தியமான வார்த்தைகள்!
உங்களைப் போன்ற பக்குவம் எனக்கெல்லாம் எப்போது வந்து சேருமோ!

tbr.joseph said...

வாங்க ஜோ,

உங்களைப் போன்ற பக்குவம் எனக்கெல்லாம் எப்போது வந்து சேருமோ! //

இது உங்களுடைய தன்னடக்கத்தைக் காட்டுகிறது ஜோ. உங்களுடைய பல பதிவுகளிலும் உங்களுடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் மீறிய பக்குவத்தை நான் பார்த்திருக்கிறேன்..

ஆனால் ஒன்று. நான் வாழ்க்கையில் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவன். ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீள இறைவனுடைய துணை வேண்டும் என்பதை அனுபவித்து உணர்ந்தவன். அடிபட்டு, அடிபட்டு வந்த பக்குவம்தான் இது..

Post a Comment