Monday, October 09, 2006

புன்னகை!

“புன்னகை நம் முகத்திற்கு அழகூட்டுகிறது. அது மட்டுமா? நம் வயதையும் அல்லவா குறைத்து காட்டுகிறது! புன்னகை செய்ய முடியாத எதையும் அழகு சாதனங்களோ, அழகு கூடங்களோ செய்யாது”

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

உண்மைதான். முகத்தில் தெரியும் புன்னகை உள் மனதில் இருக்கும் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி என்றால் மிகையாகாது.

பொறாமை, அகங்காரம், காமம் ஆகிய தீய குணங்கள் மண்டிக் கிடக்கும் உள்ளம் கொண்டவருடைய முகத்தில் எத்தனை பொன் நகையணிந்தாலும் புன்னகை தரக்கூடிய அழகு வரவே வராது.

பெண்களின் முகத்துக்கு மட்டுமே அழகூட்டுவதல்ல புன்னகை. குழந்தை முதல் வயோதிகர் வரை ஆணாயினும் பெண்ணாயினும் முகத்திற்கு அழகூட்டுவது புன்னகைதான்.

புன்னகையால் என்னென்ன பயன்?

1. புன்னகை பிறருடன் நமக்கிருக்கும் நட்பைக் காட்டுகிறது
2. புன்னகை புதிய நண்பர்களை நமக்கு தருகிறது
3. புன்னகை நம்முடைய அன்றைய நாளையே பிரகாசிக்கச் செய்கிறது 4. புன்னகை அத்துடன் நில்லாமல் நாம் அன்று சந்திக்கும் எல்லோருடைய நாளையும் பிரகாசிக்கச் செய்கிறது
5. புன்னகை நம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை மற்றவர் மனதில் விதைக்கிறது
6. புன்னகை நம் உள்ளத்திலிருக்கும் அமைதி, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய நல்ல உணர்வுகளுக்கு ஒரு வெளி அடையாளம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

நாம் விரும்பும் பெண்ணோ, ஆணோ நம்முடைய விருப்பத்தை அங்கீகரிக்க காட்டும் அடையாளமே புன்னகைதானே!

காசில்லாமல் ஒரு நகை கிடைக்கிறதென்றால் அது புன்னகையைத் தவிர வேறென்ன?

அணிந்துக் கொள்வோம், வருகிறீர்களா?

***

10 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//புன்னகை நம் முகத்திற்கு அழகூட்டுகிறது. அது மட்டுமா? நம் வயதையும் அல்லவா குறைத்து காட்டுகிறது//

ஜோசப் ஐயா...!

அது பல் உள்ளவங்களுக்குத் தான், பொக்கைவாய் உள்ளவங்களெக்கெல்லாம் புன்னகை வயதை குறைத்துக் காட்டாது !
:))

புன்னகையும் என்ற பெயரில் சிலரின் கேலி சிரிப்பை என்ன சொல்வீர்கள் ?
:)
புண் நகை / எல்லி நகை !

பெண்களுக்கு புன்னகையால் பொன் நகையல்ல. பொன் நகையை வாங்கிக் கொடுத்தால் தான் புன்னகையே !

ஐயா..!
கொஞ்சம் கலாட்டா.. செய்தேன் எல்லாம் புன்னகைக்காக்த் தான் !

சீரியஸ் ஆக சொல்லனும் என்றால்
அருமையான பதிவு !

சிரிச்சிக் கிட்டே சொல்ல வேண்டுமென்றால்.

நல்ல கலகல பதிவு !
:)))))

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

ஐயா..!
கொஞ்சம் கலாட்டா.. செய்தேன் எல்லாம் புன்னகைக்காக்த் தான் !//

ஒங்க பின்னூட்டத்த படிக்கும்போதே என் உதடுகளில் அரும்பியது நீங்க கேட்ட புன்னகை.

அதுலயும் பொக்கைவாய் புன்னகை இருக்கே அதனுடைய மகிமையே தனி.. நம்ம காந்தி தாத்தா புன்னகை மாதிரி..

:))

delphine said...

SMILE.... i miss this at Chennai.. people are so very serious..

tbr.joseph said...

Hi Delphine!

SMILE.... i miss this at Chennai.. people are so very serious.. //

You are right.. We Chennaites don't have time for plesantries!

Here every smile has got a price tag!

Don't worry. You'll get used to it.

G.Ragavan said...

உண்மைதான் ஜோசப் சார். கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்துகள்.

கோவி, உண்மையிலே பழுத்த பழங்கள் சிரிக்கையில் பாருங்கள்....அந்தச் சிரிப்பின் தன்மை புரியும். வாரியார் சிரித்துப் பார்த்திருக்கிறீர்களா! :-)

வெற்றி said...

ஜோசப் ஐயா,
மிகவும் நல்ல பதிவு. அணிவதற்கு புன்னகையை விட சிறந்த அணிகலன் ஏதும் உண்டோ?

அய்யன் வள்ளுவனும் இதை எடுத்துச் சொல்லியுள்ளார்.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலான் ஆகப் பெறின்.

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

உண்மையிலே பழுத்த பழங்கள் சிரிக்கையில் பாருங்கள்....அந்தச் சிரிப்பின் தன்மை புரியும்.//

ரொம்ப கரெக்ட்..

tbr.joseph said...

வாங்க வெற்றி,

நீங்க என்ன திருக்குறள் எக்ஸ்பர்ட்டா?
ஆனா கொஞ்சம் பதவுரையும் எழுதுனா நல்லாருக்கும்:)

லதா said...

Smile is a simple curve that makes many things straight - யாரோ

tbr.joseph said...

வாங்க லதா,

Smile is a simple curve that makes many things straight //

Wonderful! Thanks for the information:)

Post a Comment