“மாற்றம் தேவை என்று நாம் நினைப்பவைகளை மாற்ற வேண்டும். மாற்ற தேவையில்லாதவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும்.”
இது இன்றைய சிந்தனை..
அதென்ன மாற்றம் தேவையானவை, தேவையில்லாதவை?
நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.
நம்முடைய பழக்க வழக்கங்களை, நம்முடைய அணுகுமுறையை ஆராய்ந்து பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும்..
நம்மில் பலரும் சிறிய, சிறிய காரியத்திற்கெல்லாம்
1. உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்கிறோம்.
2. உண்மைக்கு புறம்பாகப் பேசுகிறோம்.
3. பிறர் மீது பழி போடுகிறோம், பொறாமை கொள்கிறோம்.
4. வசதிக்கு மீறி வாழ ஆசைப் படுகிறோம்.
5. பிறர் பொருளைக் கவர ஆசைப்படுகிறோம்.
இவை மாற்றப்பட வேண்டியவையல்லவா?
அதுபோலவே நம்மில் சிலர்
1. நம்முடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதனால் திமிர் பிடித்தவன், ஆணவக்காரன் என்ற பட்டப் பெயரை சம்பாதித்திருக்கிறோம்.
2. சிக்கனமாக இருக்கிறோம். கஞ்சப் பிரபு என்ற பட்டப் பெயரும் கிடைக்கிறது.
3. நேர்மையாக இருக்கிறோம்.. கிடைத்த பட்டப் பெயர் பிழைக்கத் தெரியாதவன்.
4. கள்ளங்கபடு இல்லாமல் இருக்கிறோம்.. ஏமாளி என்கிறது இவ்வுலகம்..
இவை மாற்றப் படவேண்டியவைதானா?
சரி.. இவற்றுள் எவற்றை நான் மாற்றிக்கொள்ள வேண்டும்? மாற்றாமலே இருந்துவிட்டால் என்ன?
முன்னவற்றை மாற்றி பின்னவற்றை மாற்றாமல் இருப்பின் இவ்வுலகில் வாழ முடியுமா என்ன?
முடியும் என்ற குரலும், நிச்சயம் முடியாது என்று ஒரு குரலும் நமக்குள்ளிருந்தே ஒலிக்கிறது..
முடியும் என்பது இறைவனின் குரலும்.. முடியாது என்பது சாத்தானின் குரலும்..
மாற்ற தேவையானவை இருப்பவர்களிடம் மாற்ற தேவையில்லாதவைகள் இருக்க வாய்ப்பில்லை.
மாறாக, மாற்றம் தேவையில்லாதவைகள் இருக்கும் சிலரிடம் சில மாற்ற தேவையுள்ளவைகளும் இருக்க வாய்ப்புண்டு..
நம்மில் பலர் இவ்வகையைச் சார்ந்தவர்கள்..
ஆகவே மாற்ற தேவையுள்ளவற்றை மாற்றுவோம்.. தேவையில்லாதவற்றை முடிந்தமட்டும் அப்படியே வைத்திருப்போம்..
சிந்திப்போம்..
16 comments:
Nice thought. Thanks
"கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்"--இது தான் ஞாபகம் வருது.
//மாற்ற தேவையுள்ளவற்றை மாற்றுவோம்.. தேவையில்லாதவற்றை முடிந்தமட்டும் அப்படியே வைத்திருப்போம்..//
அப்படியே செஞ்சாப்போச்சு.
வாங்க வினையூக்கி,
நேத்துதான் ஒங்கள பத்தி பேசிக்கிட்டிருந்தோம்..
வரவுக்கு நன்றி..
வாங்க குமார்,
"கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்"--//
இதையே தலைப்பா வச்சிருக்கலாம் போல..
வாங்க துளசி,
அப்படியே செஞ்சாப்போச்சு.//
சொல்றது ரொம்ப சுலபம். செய்யறதுதான் கஷ்டம்..
சரிதானுங்களே?
மாற்றத்தை பற்றிய நல்ல ஆய்வு. நமது நிலை மாற்றப்பட வேண்டியதா இல்லையா என்பதை எவ்வாறு அறிவது ? காலமும் கருத்துக்களும் மாறும்போது கட்டுப் பெட்டியாகவும் இருக்கக் கூடாது இல்லையா ?
வாங்க மணியன்,
காலமும் கருத்துக்களும் மாறும்போது கட்டுப் பெட்டியாகவும் இருக்கக் கூடாது இல்லையா //
இந்த கோணத்துலருந்து இதை என்னுடைய ஆங்கிலப் பதிவில் (ப்ளாக் தேசத்தில்) பார்த்திருக்கிறேன்..
படித்துவிட்டு கூறுங்கள்..
///
வாங்க வினையூக்கி,
நேத்துதான் ஒங்கள பத்தி பேசிக்கிட்டிருந்தோம்..
வரவுக்கு நன்றி..
///
Thank you Sir.
அப்படியே நம்ம பிளாக் பக்கமும் வாங்க சார்
வாங்க வினையூக்கி,
அப்படியே நம்ம பிளாக் பக்கமும் வாங்க சார்//
தோ.. வந்துக்கிட்டேயிருக்கேன்:)
மாற்ற இயன்றதை மாற்றவும்
இயாலததை ஏற்றுக்கொள்ளவும் பலம் வேண்டி ஒரு செபம் இருக்கிறது
ஒரு பாடல் கூட உண்டு.
//மாற்ற தேவையானவை இருப்பவர்களிடம் மாற்ற தேவையில்லாதவைகள் இருக்க வாய்ப்பில்லை.
மாறாக, மாற்றம் தேவையில்லாதவைகள் இருக்கும் சிலரிடம் சில மாற்ற தேவையுள்ளவைகளும் இருக்க வாய்ப்புண்டு//
குழப்புகிறது..உதாரணம் கொடுத்து விளக்கமுடியுமா சார்?
ஜோசப் சார். கடவுள் சாத்தான் என்ற கருத்து அப்ரஹாமிய மதங்களில் உள்ளது. ஆனால் தமிழில் அந்த நம்பிக்கை இல்லை. அனைத்தும் இறைவந்தான். சாத்தான் என்று ஒன்று இருந்தால் அது இறைவனுக்குப் போட்டியாக இருந்தால் அது வெல்லவும் வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையே இறைவன் அனைத்தும் கடந்து உள்ளிருக்கும் கடவுள் என்ற நம்பிக்கை அடிபட்டுப் போகிறது. ஆக உலக இயக்கத்தில் நன்மை தீமை இரண்டும் இறைவனால் கட்டளைப்படுவதே. ஆனால் ஏன் என்றுதான் நமக்குத் தெரிய மாட்டேன் என்கிறது.
வாங்க சிறில்,
மாற்ற இயன்றதை மாற்றவும்
இயாலததை ஏற்றுக்கொள்ளவும் பலம் வேண்டி ஒரு செபம் இருக்கிறது//
அதென்ன செபம் சிறில்?
முடிஞ்சா தனி மயில்ல அனுப்புங்களேன்.
வாங்க முத்து,
குழப்புகிறது..உதாரணம் கொடுத்து விளக்கமுடியுமா சார்? //
மாற்றம் தேவையில்லாதவைகளை நான் பட்டியலிட்டிருக்கிறேனே..
அது இருக்கறவங்கள நீங்க பார்த்திருப்பீங்களே.. அவங்க சிலர் கிட்ட மாற்றம் தேவையுள்ள குணங்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்..
நம்மில் பலரும் இந்த வகையைச் சார்ந்தவர்கள்தானே முத்து..
நல்லவர்களும் - அதாவது மாற்ற தேவையில்லாத நல்ல குணங்களைக் கொண்டவர்கள் - சில நேரங்களில் உண்மைக்குப் புறம்பாக பேசுவதோ,கோபப்படுவதோ சகஜம்தானே அதைத்தான் மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னேன்..
ஆனால் மாற்ற தேவையான கெட்ட குணங்களை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்களுக்கு மற்ற நற்குணங்கள் இருக்க வாய்ப்பேயில்லைதானே.. உதாரணத்திற்கு பெருவரியான அரசியல்வாதிகளூம், அரசு அதிகாரிகளும்..
வாங்க ராகவன்,
கிறிஸ்துவ மதத்திலும் சாத்தான் இருக்கிறது என்று ஒரு நம்பிக்கையுண்டு..
யேசு கிறிஸ்து பொது வாழ்க்கையில் இறங்குவதற்கு முன்பு நாற்பது நாள் உபவாசம் இருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பார். அதன் இறுதியில் களைப்புற்று பசியாயிருப்பார். அப்போது சாத்தான் (அலகை என்கிறது பைபிள்) அவரை மலையுச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்த கற்களைக் காட்டி நீர் இறைவனின் மகனானால் இக்கற்களை ரொட்டியாக மாற்றி உண்ணும் என்று கூறுவதாகவும், கீழே தெரிந்த நகரத்தைக் காட்டி நீ மண்டியிட்டு என்னை வணங்கினால் இதை முழுவதையும் உனக்கு சொந்தமாக்குகிறேன் எனவும் கூறுவதாக ஒரு நிகழ்ச்சி வரும். அப்போது யேசு விலகிப்போ சாத்தானே என்று விரட்டுவார்..
உலகம் படைக்கப்பட்ட சமயத்தில் வானுலகில் இருந்த சில வான தூதர்களக் குழு ஒன்று லூசிஃபர் என்ற வானதூதரின் தலைமையில் கடவுளையே எதிர்த்ததாம். அப்போதுதான் கடவுள் அந்த மதிகெட்ட வானதூதர்களை சபித்து பாதாளத்தில் எரியும் நரக நெருப்பில் தள்ளி உனக்கும் என் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்.. என்றும் ஒரு நிகழ்ச்சியை படித்திருக்கிறேன். அந்த சபிக்கப்பட்ட வானதூதர்கள்தான் சாத்தான்கள் என்று ஒரு நம்பிக்கை கிறிஸ்ததுவர்களிடையே இன்றும் இருக்கிறது..
Post a Comment