Friday, September 29, 2006

உழைக்காமல் கிடைக்கு ஊதியம்

“முயற்சி செய்யாமல் கிடைக்கும் வெற்றி உழைக்காமல் கிடைக்கும் ஊதியத்திற்கு நிகராகும்..”

இது இன்றைய சிந்தனை..

ஒரு குட்டிக்கதை..

இரு கல்லூரி மாணவர்கள் சந்தித்துக்கொண்டனர்.

அவர்களுள் ஒருவன் கோபு. வசதிபடைத்தவன். ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே வாரிசு. மற்றவன் பாபு. நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ள குடும்பத்திலிருந்து வருபவன். நான்கு சகோதரிகளுடன் பிறந்தவன்..

கோபுவிற்கு அவனுடைய தினக் கைச்செலவுக்கு கிடைக்கும் தொகை பாபுவின் தந்தையின் ஒரு வாரக் கூலி.

கோபு படிப்பில் சூன்யம்.. பாபுவோ வகுப்பில் எப்போதும் முதல்..

கோபுவுக்கு தானும் வகுப்பில் முதல்வனாக வரவேண்டும் என்ற ஆசை. என்ன செய்வது என்று யோசித்தான்.

பாபுவோ தனக்கும் கோபுவைப் போன்று அன்றாட கைச்செலவுக்கு பணம் கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்தான். அதற்கென்ன வழி என்று யோசித்தான்.

இருவரும் தங்களுடைய நிராசைகளைப் பகிர்ந்துக்கொண்டனர்.

சற்று நேர ஆலோசனைக்குப் பிறகு இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு உத்தி தோன்றியது.

இருவருமே ஒருவரையொருவர் பார்த்து, ‘ஏய் இதுக்கு ஒரு வழி இருக்கு.’ என்றனர்.

கோபு ‘அதெப்படிறா ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல.. சரி முதல்ல நீ சொல்லு.. ஏன்னா நீதான் எப்பவுமே க்ளாஸ்ல ஃபர்ஸ்ட்..’ என்றான் தன் நண்பனிடம்.

பாபு, ‘இல்லடா நீதான் சொல்லணும்.. ஏன்னா நீ என்னெ விட வசதியானவன்.. பணக்காரன்..’ என்றான்.

கோபு பெருமையுடன் சரி என்று தலையாட்டிவிட்டு, ‘டேய்.. எனக்கு க்ளாஸ்ல ஃபர்ஸ்டா வரணும்.. ஒனக்கு கைச் செலவுக்கு நிறைய பணம் வேணும்.. ஒன்னு பண்ணுவோம்.. நீ வர்ற ஃபைனல் எக்ஸாம்ல உன் ஆன்சர் ஷீட்ல என் பேரயும் ரோல் நம்பரையும் எழுதறே.. நான் உன் பேரையும் ரோல் நம்பரையும் எழுதறேன்.. அதுக்கு பதில நான் வர்ற மாசத்துலருந்து கிடைக்கற பாக்கெட் மணிய உங்கிட்ட குடுத்துடறேன்.. என்ன சொல்றே?’ என்றான்.

அடப் பாவி என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட பாபு, ‘டேய்.. அது சரியா வராது....ஆள விடு’ என்று கழன்றுக் கொண்டான்.

அவனுக்கு உடலுழைப்பேதும் இல்லாமல் இவனுடைய பணத்தை பெறுவது சரியல்லவே என்ற சிந்தனை.. அத்துடன் தன்னுடைய எதிர்கால வாழ்வையே பணயம் வைப்பதா என்றும் தோன்றியது.

‘சரிடா.. நீ என்ன சொல்ல வந்தே? அதச் சொல்லு, கேப்போம்..’

‘நான் இன்னையிலருந்து சாயந்தரம் க்ளாஸ் விட்டதும்.. என்னெ மாதிரி எப்படி படிக்கறது.. எக்ஸாமுக்கு எப்படி ப்ரிப்பேர் பண்றதுன்னு சொல்லித் தரேன்.. நீ அதுக்கு சம்பளமா ஒன் பாக்கெட் மணியில பாதிய குடுத்தா போறும்..’

கோபுவுக்கு இந்த யோசனை சரியான யோசனையாக தெரியவில்ல¨.. ‘நீ சொன்னதும் சரியா வராதுடா..’ என்று கழன்றுக்கொண்டான்.

அவனுக்கு தன்னுடைய முயற்சி ஏதுமில்லாமல் வெற்றியடைய வேண்டும் என்ற சிந்தனை..

நாமும் சில நேரங்களில் இப்படித்தான்..

பிறருடைய உழைப்பில் கிடைத்த வெற்றியை நமதாக்கிக் கொள்ள பார்க்கிறோம்..

வெற்றியடைந்தால் அதற்கு நாம்தான் காரணம்.. நம்முடைய யுக்தியும் உழைப்பும்தான் காரணம் என்று பறைசாற்றிக்கொள்கிறோம்..

தோல்வியென்றால் அதற்கு மற்றவரை பலிகடா ஆக்குவதில் முனைகிறோம்..

பிறருடைய உழைப்பில் சுகம் காண நினைப்பவர்களுக்கும் கொள்ளயைடிப்பவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை..

சிந்திப்போம்..

உழைக்காமல் கிடைக்கும் ஊதியம்

“முயற்சி செய்யாமல் கிடைக்கும் வெற்றி உழைக்காமல் கிடைக்கும் ஊதியத்திற்கு நிகராகும்..”

இது இன்றைய சிந்தனை..

ஒரு குட்டிக்கதை..

இரு கல்லூரி மாணவர்கள் சந்தித்துக்கொண்டனர்.

அவர்களுள் ஒருவன் கோபு. வசதிபடைத்தவன். ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே வாரிசு. மற்றவன் பாபு.  நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ள குடும்பத்திலிருந்து வருபவன். நான்கு சகோதரிகளுடன் பிறந்தவன்..

கோபுவிற்கு அவனுடைய தினக் கைச்செலவுக்கு கிடைக்கும் தொகை பாபுவின் தந்தையின் ஒரு வாரக் கூலி.

கோபு படிப்பில் சூன்யம்.. பாபுவோ வகுப்பில் எப்போதும் முதல்..

கோபுவுக்கு தானும் வகுப்பில் முதல்வனாக வரவேண்டும் என்ற ஆசை. என்ன செய்வது என்று யோசித்தான்.

பாவோ  தனக்கும் கோபுவைப் போன்று அன்றாட கைச்செலவுக்கு பணம் கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்தான். அதற்கென்ன வழி என்று யோசித்தான்.

இருவரும் தங்களுடைய நிராசைகளைப் பகிர்ந்துக்கொண்டனர்.

சற்று நேர ஆலோசனைக்குப் பிறகு இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு உத்தி தோன்றியது.

இருவருமே ஒருவரையொருவர் பார்த்து, ‘ஏய் இதுக்கு ஒரு வழி இருக்கு.’ என்றனர்.

கோபு ‘அதெப்படிறா ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல.. சரி முதல்ல நீ சொல்லு.. ஏன்னா நீதான் எப்பவுமே க்ளாஸ்ல ஃபர்ஸ்ட்..’ என்றான் தன் நண்பனிடம்.

பாபு, ‘இல்லடா நீதான் சொல்லணும்.. ஏன்னா நீ என்னெ விட வசதியானவன்.. பணக்காரன்..’ என்றான்.

கோபு பெருமையுடன் சரி என்று தலையாட்டிவிட்டு, ‘டேய்.. எனக்கு க்ளாஸ்ல ஃபர்ஸ்டா வரணும்.. ஒனக்கு கைச் செலவுக்கு நிறைய பணம் வேணும்.. ஒன்னு பண்ணுவோம்.. நீ வர்ற ஃபைனல் எக்ஸாம்ல உன் ஆன்சர் ஷீட்ல என் பேரயும் ரோல் நம்பரையும் எழுதறே.. நான் உன் பேரையும் ரோல் நம்பரையும் எழுதறேன்.. அதுக்கு பதில நான் வர்ற மாசத்துலருந்து கிடைக்கற பாக்கெட் மணிய உங்கிட்ட குடுத்துடறேன்.. என்ன சொல்றே?’ என்றான்.

அடப் பாவி என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட பாபு, ‘டேய்.. அது சரியா வராது....ஆள விடு’ என்று கழன்றுக் கொண்டான்.

அவனுக்கு உடலுழைப்பேதும் இல்லாமல் இவனுடைய பணத்தை பெறுவது சரியல்லவே என்ற சிந்தனை.. அத்துடன் தன்னுடைய எதிர்கால வாழ்வையே பணயம் வைப்பதா என்றும் தோன்றியது.

‘சரிடா.. நீ என்ன சொல்ல வந்தே? அதச் சொல்லு, கேப்போம்..’

‘நான் இன்னையிலருந்து சாயந்தரம் க்ளாஸ் விட்டதும்.. என்னெ மாதிரி எப்படி படிக்கறது.. எக்ஸாமுக்கு எப்படி ப்ரிப்பேர் பண்றதுன்னு சொல்லித் தரேன்.. நீ அதுக்கு சம்பளமா ஒன் பாக்கெட் மணியில பாதிய குடுத்தா போறும்..’

கோபுவுக்கு இந்த யோசனை சரியான யோசனையாக தெரியவில்ல¨.. ‘நீ சொன்னதும் சரியா வராதுடா..’ என்று கழன்றுக்கொண்டான்.

அவனுக்கு தன்னுடைய முயற்சி ஏதுமில்லாமல் வெற்றியடைய வேண்டும் என்ற சிந்தனை..

நாமும் சில நேரங்களில் இப்படித்தான்..

பிறருடைய உழைப்பில் கிடைத்த வெற்றியை நமதாக்கிக் கொள்ள பார்க்கிறோம்..

வெற்றியடைந்தால் அதற்கு நாம்தான் காரணம்.. நம்முடைய யுக்தியும் உழைப்பும்தான் காரணம் என்று பறைசாற்றிக்கொள்கிறோம்..

தோல்வியென்றால் அதற்கு மற்றவரை பலிகடா ஆக்குவதில் முனைகிறோம்..

பிறருடைய உழைப்பில் சுகம் காண நினைப்பவர்களுக்கும் கொள்ளயைடிப்பவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை..

சிந்திப்போம்..Thursday, September 28, 2006

மாற்றம் தேவையா?

“மாற்றம் தேவை என்று நாம் நினைப்பவைகளை மாற்ற வேண்டும். மாற்ற தேவையில்லாதவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும்.”

இது இன்றைய சிந்தனை..

அதென்ன மாற்றம் தேவையானவை, தேவையில்லாதவை?

நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.

நம்முடைய பழக்க வழக்கங்களை, நம்முடைய அணுகுமுறையை ஆராய்ந்து பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும்..

நம்மில் பலரும் சிறிய, சிறிய காரியத்திற்கெல்லாம்

1.     உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்கிறோம்.
2.     உண்மைக்கு புறம்பாகப் பேசுகிறோம்.
3.     பிறர் மீது பழி போடுகிறோம், பொறாமை கொள்கிறோம்.
4.     வசதிக்கு மீறி வாழ ஆசைப் படுகிறோம்.
5.     பிறர் பொருளைக் கவர ஆசைப்படுகிறோம்.

இவை மாற்றப்பட வேண்டியவையல்லவா?

அதுபோலவே நம்மில் சிலர்

1.     நம்முடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதனால் திமிர் பிடித்தவன், ஆணவக்காரன் என்ற பட்டப் பெயரை சம்பாதித்திருக்கிறோம்.
2.     சிக்கனமாக இருக்கிறோம். கஞ்சப் பிரபு என்ற பட்டப் பெயரும் கிடைக்கிறது.
3.     நேர்மையாக இருக்கிறோம்.. கிடைத்த பட்டப் பெயர் பிழைக்கத் தெரியாதவன்.
4.     கள்ளங்கபடு இல்லாமல் இருக்கிறோம்.. ஏமாளி என்கிறது இவ்வுலகம்..

இவை மாற்றப் படவேண்டியவைதானா?

சரி.. இவற்றுள் எவற்றை நான் மாற்றிக்கொள்ள வேண்டும்? மாற்றாமலே இருந்துவிட்டால் என்ன?

முன்னவற்றை மாற்றி பின்னவற்றை மாற்றாமல் இருப்பின் இவ்வுலகில் வாழ முடியுமா என்ன?

முடியும் என்ற குரலும், நிச்சயம் முடியாது என்று ஒரு குரலும் நமக்குள்ளிருந்தே ஒலிக்கிறது..

முடியும் என்பது இறைவனின் குரலும்.. முடியாது என்பது சாத்தானின் குரலும்..

மாற்ற தேவையானவை  இருப்பவர்களிடம் மாற்ற  தேவையில்லாதவைகள் இருக்க வாய்ப்பில்லை.

மாறாக, மாற்றம் தேவையில்லாதவைகள் இருக்கும் சிலரிடம் சில மாற்ற தேவையுள்ளவைகளும் இருக்க வாய்ப்புண்டு..

நம்மில் பலர் இவ்வகையைச் சார்ந்தவர்கள்..

ஆகவே மாற்ற தேவையுள்ளவற்றை மாற்றுவோம்.. தேவையில்லாதவற்றை முடிந்தமட்டும் அப்படியே வைத்திருப்போம்..

சிந்திப்போம்..


Wednesday, September 27, 2006

Idle mind is Devil's Workshop

‘நேரம் போகவில்லை போரடிக்குது’ இது சாதாரணமாக நாம் தினமும் கேட்கும் பேச்சு.

Idle mind is Devil’s workshop என்பது ஆங்கிலப் பழமொழி.

ஒரு குட்டிக் கதை..

ஒரு வயதான முனிவர் நாள் முழுவதும் தன்னுடைய ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதுண்டு. அந்த ஆசிரமத்தில் சேர்ந்து சில மாதங்களே ஆன ஒரு இளம் துறவி அவரைப் பார்த்து தானும் தியானம் செய்ய முயற்சித்தார்.

ஆனால் அவரால் தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு மேல் தியானத்தில் மனதை ஒருநிலைப் படுத்த முடியாமல் ஏதேதோ சிந்தனைகள் மனதைப் போட்டு அலைக்கழிப்பதை உணர்ந்தார்.

இவரால் மட்டும் எப்படி நாள் முழுவதும் தியானத்தில் நிலைத்திருக்க முடிகிறது என்று வியந்துபோய் அவர் தியானத்திலிருந்து விடுபடும் நேரத்தில் கேட்க வேண்டும் என்று மணிக்கணக்காய் அதே நோக்கத்துடன் அவருக்கு முன்னர் அமர்ந்து காத்திருந்தார்.

இவர் தன் எதிரில் காத்திருப்பதை எப்படியோ ஞான திருஷ்டியில் உணர்ந்த முனிவர் கண் விழித்து தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த இளம் துறவியைப் பார்த்து, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

இளம் துறவி, ‘எப்படி சாமீ நீங்க மட்டும் நாள் முழுசும் தியானத்துல ஈடுபடறீங்க? என்னால முழுசா பத்து நிமிஷம் கூட கண்ணெ மூடிக்கிட்டு ஒக்கார முடியலையே?’ என்றார்.

அதற்கு முனிவர், ‘நீ ஏறக்குறைய போன ரெண்டு மணி நேரமா கண்ணெ தொறந்துக்கிட்டு நா முளிப்பேனான்னே காத்துக்கிட்டிருந்தே, சரியா?’ என்றார்.

இளம் துறவி ஆமாம் என்று தலையை அசைத்தார்.

‘அப்போ வேற ஏதாச்சும் நினைவுகள் உன்னை திசை திருப்புச்சா?’

இளம் துறவி அட! ஆமாம்.. என்று நினைத்தார். ‘இல்லையே’ என்றார்.

முனிவர் புன்னகையுடன், ‘அதுதான் ரகசியம். வெறுமனே மனசுல ஒன்னையும் நினைச்சிக்காம தியானம் செய்ய முடியாது. நாம என்ன செய்யணும்னு நினைச்சிக்கிட்டு தியானத்த துவங்குறமோ அதையே மனசுல நிலைப்படுத்தணும்.. அப்படி செய்யறப்போ நீ கண்ண மூடணும்னு கூட அவசியமில்ல.. ஒன்னால தியானத்துல ஆழ்ந்து போக முடியும்.. மனசு வெறுமனே இருந்தா அதுல இறைவன் மட்டுமில்ல.. சாத்தானும் வந்து ஒக்காந்துக்க வாய்ப்பிருக்கு.. பின்னவன் வர்றதுக்கு முன்னால முன்னவர் உன் மனசுல வந்து ஒக்காந்துரணும்.. போ.. நீ மனசுல யாருக்கு இடம் குடுக்கறதுன்னு தீர்மானிச்சப்புறம் தியானத்த துவங்கு.. எந்தவித தடங்கலும் இல்லாம மணிக்கணக்கா, ஏன் நாள் கணக்கா ஒன்னால தியானத்துல ஆழ்ந்து போயிற முடியும்.’ என்று கூறிவிட்டு மீண்டும் தன்னுடைய தியானத்துக்கு திரும்பினார்.

ஆம் நண்பர்களே காலியாய் கிடக்கும் நம் மனசுக்குள் முதலில் நுழைய முயல்வது சாத்தானே.. அது எந்த குறுகிய வாசலிலும் நுழைந்துவிடும்..

ஆனால் இறைவனை வரவழைக்க நம் இதய வாசலை விரிய திறந்து வைக்க வேண்டும்..

வைப்போமா?

Tuesday, September 26, 2006

இருப்பதும் இல்லாததும்

“உனக்கு கிடைத்திருப்பவற்றைக் குறித்து நன்றியோடு இரு. கிடைக்காதவற்றைப் பற்றி கவலையுறாதே”

ஆம் நண்பர்களே..

இறைவனின் பிம்பங்களாக படைக்கப்பட்டிருக்கும் நாம் அவருக்கு இருக்கும் தீர்க்கதரிசனம்(Prophecy)என்ற கொடையைத் தவிர மற்ற எல்லா நன்கொடைகளையும் பிறப்பிலேயே பெற்றிருக்கிறோம்.

சாந்தம், தாழ்ச்சி, பாகுபாடில்லாமல் எல்லோரையும் நேசிக்கும் பண்பு, பொய் கூறாமை இவை எல்லாவற்றையும் நாம் பிறக்கும்போது கொண்டிருந்தோம்..

நாளடைவில் இவ்வுலகை, அதில் உள்ளவர்களை அறிந்துக்கொள்ளும் வயதை அடைந்தவுடன் இக்குண நலன்களை ஒவ்வொன்றாக இழந்துப் போனோம்.

ஆகவேதான் நமக்கு எத்தனை வசதி வாய்ப்பு கிடைத்தாலும் போதாது, போதாது என அலைந்து நம் நிம்மதியைக் கெடுத்துக்கொள்கிறோம்.

நமக்கு என்ன தேவை, எப்போது தேவை என்பது இறைவனுக்கு தெரியும். அந்த நேரம் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்ல¨.

ஆனால் அதே சமயம் நாம் விரும்பும் இலக்கை அடைய முயற்சி செய்யாமல் இறைவன் கொடுப்பார் என்று மெனக்கெடாமல் காத்திருக்க வேண்டும் என்பதல்ல இதற்குப் பொருள்.

நாம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நம்மால் நாம் விரும்புவதை அடைய முடியாமல் போகும்போது சோர்ந்து போகலாகாது.

கையிலிருக்கும் ஒரு பறவை புதரில் இருக்கும் இரு பறவைகளுக்கு மேல் என்பது பழமொழியல்ல எல்லா காலத்துக்கும் ஏற்ற புது மொழி.

எப்போதுமே வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் நமக்கு மேலே இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டிருப்பீர்கள். அவர்கள் அடைந்த வெற்றிகளை நமக்கு முன்னோடியாக வைத்து அவற்றை அடைய பாடுபடவேண்டும் என்பதும் உண்மைதான்.

ஆனால் அது நமக்கு தேவையானதொன்றா அல்லது அந்த இலக்கை அடைவது நமக்கு சாத்தியம்தானா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து செயல்பட வேண்டும் என்பதும் உண்மை.

இருப்பதைக் கொண்டு திருப்தியடைந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பது உண்மை.

ஆனால் இல்லாததை நினைத்தே வாழ்ந்துக்கொண்டிருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பது மட்டுமல்ல இருப்பதையும் அனுபவிக்க முடியாதவர்களாகிவிடுவோம் என்பதும் உண்மைதான்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

Monday, September 25, 2006

முயற்சி செய்வோம்

“முயற்சி செய்து தோல்வியுறுவது முயற்சி செய்யாமலிருப்பதை விடவும் மேலானது”

இது இன்றைய சிந்தனை.

இது நம்முடைய குடும்ப மற்றும் அலுவலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆன்ம வாழ்வுக்கும் பொருந்தும்..

இறைவன் இருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம்.

ஆனால் அந்த இறைவனை நம்முடைய வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிறோமா?

குறைந்த பட்சம் அதற்கு முயற்சியாவது செய்திருக்கிறோமா என்று கேட்டால் இல்லை என்று பதில் வருகிறது.

இவ்வுலக வாழ்வில் நமக்கு பிரச்சினைகள் ஏராளம், ஏராளம்..

அதை தீர்க்கவே அன்றாடம் போராட வேண்டியிருக்கிறது.

இதில் இறைவனைப் பற்றி சிந்திக்க எங்கே நேரம்?

நாம் நேரம், காலம் என்று சொல்லும்போதே இறைவனைத்தான் குறிப்பிடுகிறோம்.

நம்மில் பலரும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிவுறும்போது நமக்கு நேரம் சரியில்ல போலருக்கு என்று சலித்துக் கொள்கிறோம்.

இது மனித இயல்பு. அதில் தவறேதும் இல்லை..

ஆனால் நம்மில் பலரும் தோல்வியைக் கண்டு சோர்ந்து போகிறோம்.

முயற்சி செய்து செய்து தோற்பது முயற்சியே செய்யாமலிருப்பதை விடவும் மேலானது.

உண்மைதான்..

இறைவனின் கட்டளைகளை அப்படியே இம்மியளவும் பிறழாது கடைப்பிடிப்பதென்பது நம்மால் முடியாது..

இறைவனின் கட்டளைகளில் மூன்று முக்கிய கட்டளைகள் இவை.

பொய் சொல்லாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பிறரைக் குறை கூறாதிருப்பாயாக..

இந்த மூன்றையும் நம்மால் செய்யாமலிருக்க முடியுமா என்ன?

ஆனாலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை..

Friday, September 22, 2006

மனசு

மனசுக்குள் மத்தாப்பு, மனசுக்குள் மழைக்காலம் என்றெல்லாம் திரைப்படங்களுக்கு பெயர் சூட்டுகிறார்கள்.

ஆனால் இந்த மனசு நம் உடலில் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அவர்களுக்கு விடை தெரியுமோ என்னவோ?

இறைவன் எங்கே இருக்கிறார் என்பவர்களுக்காவது இதற்கு விடை தெரியுமா?

இமய மலையின் அடிவாரத்தில் ஒரு ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

உளவியல் ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவர் ஒருவர் அப்பாதை வழியாக செல்ல நேர்ந்தது.

கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்த ஞானியைப் பார்த்ததும் வியப்புடன் அவர் கண் விழிக்கும் வரை எதிரே இருந்த ஒரு பாறையில் அமர்ந்து காத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஞானி தன் எதிரில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்து புன்முறுவலுடன், ‘என்ன தம்பி பார்க்கிறாய்?’ என்றார்.

அவன் தயக்கத்துடன், ‘இல்லை சாமி எதற்காக கண்களை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தீர்கள்? என்றார்.

‘எனக்குள்ளிருக்கும் இறைவனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.’

மாணவனுக்கு சிரிப்பு வந்தது. ‘இறைவனா? அதுவும் உங்களுக்குள்ளேயா? என்ன சாமி ஜோக் அடிக்கறீங்க? கடவுள் என்பதே ஒரு பொய். அது சாமியாருங்க பிழைக்க உபயோகப்படுத்தும் ஒரு கற்பனை. இதுல.. நீங்க பேசிக்கிட்டிருந்தீங்கன்னு சொன்னா எப்படி சாமி நம்பறது?’

அவனுடைய குரலிலிருந்த கேலி ஞானியை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. இவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தார்.

‘சரி தம்பி. நான் கேட்பதற்கு பதில் சொல். நீயோ ஒரு இளைஞன். இதுவோ என்னைப் போன்ற ஞானிகள் வந்து தியானம் செய்யும் மலையடிவாரம். உனக்கு இங்கு என்ன வேலை?’ என்றார்.

‘நான் ஒரு உளவியல் ஆய்வாள மாணவன். ஓய்வில்லாத வேலை. யாருடனும் பேசாமல் புத்தகத்தையே பார்த்து பார்த்து போரடித்து சற்று மன ஆறுதலுக்காக இங்கே வந்தேன். வந்து மூன்று நாட்களாகின்றன. இன்றுதான் கடைசி நாள். நாளை மீண்டும் என்னுடைய ஆய்வுக்கு திரும்ப வேண்டும்..’

ஞானி பதில் பேசாமல் சிரித்தார்.

இளைஞனுக்கு கோபம் வந்தது. ‘எதுக்கு சாமி சிரிக்கிறீங்க?’

‘மன ஆறுதல்னு சொன்னீங்களே? அந்த மனசு எங்கருக்குன்னு ஒங்களுக்கு தெரியுமா?’

இளைஞன் என்ன பதில் சொல்வதென தெரியாமல் மவுனமாயிருந்தான்.

‘ஒங்க ஒடலும் மனசும் சோர்ந்திருந்தப்போ இப்படி செஞ்சா என்னன்னு தோனியிருக்கும். அதான் புறப்பட்டு வந்துட்டீங்க? சரிதானே?’

ஆமாம் என்று தலையை அசைத்தான் மாணவன்.

‘அதாவது ஏதோ ஒன்னு உங்களுக்குள்ளருந்து இந்த யோசனையை சொல்லியிருக்கு? சரிதானே?’

ஆமாம் என்று மீண்டும் தலையை அசைத்தான் மாணவன்.

‘இப்ப மட்டுமல்ல.. நீங்க ஒவ்வொரு முறை தவறு செய்யறப்பவும் இந்த மாதிரி செய்யறது சரியில்லைன்னு ஒரு குரல் கேட்டிருக்கும். சரிதானே?’

'ஆமாம்’

‘நீங்க யாருக்காவது உதவி செய்யப் போயி வம்புல மாட்டிக்குறப்ப ஒனக்கு இது தேவையான்னு குரல் கேக்குமே?’

'ஆமாம்.’

‘அது யாரோட குரல்னு எப்பவாவது யோசிச்சதுண்டா?’

‘இல்லை’

‘அதுதான் தம்பி கடவுள். உங்களுக்குள்ள இருக்கறது கடவுளாருந்தா தப்பு செய்யும் போதெல்லாம் செய்யாதேன்னு சொல்லி குரல் வரும்.. சாத்தானாருந்தா பேசாம இருக்கும். நீங்க இப்ப கடவுளே இல்லைன்னு சொன்னீங்களே அது நீங்க ஒங்க படிப்பையும், ஆராய்ச்சியையும் வச்சி சொன்னது. ஒங்களுக்குள்ளருந்து தினம் நொடிக்கொருதரம் வர்ற குரல் யாருடையதுன்னு ஒங்க படிப்ப வச்சி ஆராய்ஞ்சி கண்டு பிடிங்க. அப்புறம் தெரியும் கடவுள் இருக்காரா இல்லையான்னு.. போய்ட்டு வாங்க.’

ஞானி மீண்டும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து போக சற்று நேரம் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தன் வழியில் சென்றார் அந்த இளைஞர்.

வழியெல்லாம் ஞானி கூறியதைப் பற்றிய சிந்தனையே தொடர்ந்தது.

நாம் மனசாட்சி என்று சொல்கிறோமே அதைத்தான் நான் கடவுள் என்று நம்புகிறேன்.. அவரைத் தான் தினமும் வழிபடுகிறேன்.

நான் என்ன நான், நாம் எல்லோருமேதான்.. கடவுள் எங்கே என்று கேட்பவர்களும்தான்.

சிந்திப்போம்..Thursday, September 21, 2006

வெளித்தோற்றம்

நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வெளித்தோற்றத்தை வைத்துத்தான் எடைபோடுகிறோம்.

சற்று எடுப்பாக உடை உடுத்தியிருந்தால் அவனை ‘ரொம்ப ஷோ காட்டுறான் பார்’ என்பார்கள். எளிய கோலத்தில் இருந்தால் ‘சரியான கஞ்சப் பய. பதவிக்கேத்தா மாதிரி ட்ரெஸ் பண்றானா பார்’ என்பார்கள்.

சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடப்பேன் என்றால் ‘சரியான பயந்தாங்குள்ளி, பிழைக்கத் தெரியாதவன், வளைந்துக் குடுக்க தெரியாதவன்.’ என்பார்கள். ப்ராக்டிக்கலாக நடந்துக்கொள்ள முயன்றால் ‘ஃப்ராடு பய. எவ்வளவு வாங்கினானோ யாருக்குத் தெரியும்.’ என்பார்கள்.

இது இன்று நேற்றல்ல, காலங்காலமாய் நடந்து வந்ததுதான்.

ஏசுவுக்கு முன் வந்த ஞானிகளும், தீர்க்கதிரிசிகளும் உண்ணா நோன்பிருந்து இறைவனுடைய வார்த்தைகளைப் போதித்தபோது பைத்தியக்காரர்கள் என்று புறக்கனித்தார்கள். ஏசு தன்னுடைய சீடர்களுடன் சேர்ந்து ரொட்டி துண்டுகளையும் மீன் துண்டுகளை தானும் உண்டு தன்னுடைய போதனைகளை கேட்க திரண்டு வந்தவர்களும் பகிர்ந்தளித்தார். அவரை போசனப் பிரியன் என்றார்கள்.

ஆக ஒருவருடைய வெளித்தோற்றத்தையும் அவருடைய சொல்லையும், செயலையும் வைத்தே நாம் ஒருவரை எடைபோடுகிறோம்.

ஏனெனில் உள்ளத்தில் மறைந்திருக்கும் எண்ணங்களை நம்மால் அறிய முடிவதில்லை.

இறைவனால் மட்டுமே அது இயலும்.

நான் நல்லாவன் என்று நம்மால் யாரை வேண்டுமானாலும் நம்ப வைக்க முடியும்.

சிலரை பல நேரங்களிலும் பலரை சில நேரங்களிலும் ஏமாற்ற முடியும், ஆனால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பது உண்மையாயிருக்கலாம்.

ஆனால் இறைவனை, நம் உள்ளத்தை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்திருக்கும் இறைவனை, ஏமாற்றவே முடியாது..

இறைவன் என்றொருவர் இல்லையென்று வேண்டுமானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளலாம்..

ஆனால நம்மால் இறைவனை ஏமாற்ற முடியாது..

சிந்திப்போம்..

Wednesday, September 20, 2006

உறவுகள்

என்னுடைய நண்பர் ஒருவருடைய ஒரே மகனுக்கு கடந்த வருடம் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

மகன் ஓரு பி.காம் பட்டதாரி. ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா. மருமகளோ பி.ஈ பட்டம் பெற்றவர். ஒரு பல்நாட்டு நிறுவனத்தில் கணினி பொறியாளர்.  பெற்றோருக்கு ஒரே பெண் என்றாலும் தன் பெற்றோரால் வரதட்சணைக் கொடுக்க முடியவில்லையென்ற என்ற ஒரே காரணத்திற்காக தன்னை விட குறைவாக படித்திருந்த, வருமானம் உள்ளவரை திருமணம் செய்துக்கொண்டவர்.

என்னுடைய நண்பரோ ஐந்திலக்க ஊதியத்துடன் படித்த மருமகளாயிற்றே என்ற காரணத்திற்காக வரதட்சி¨ணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று அந்த சம்மந்தத்திற்கு ஒத்துக்கொண்டவர்.

‘அவ என்னெ விட படிச்சிருக்காப்பா. நல்ல வேலையிலயும் இருக்கா. என்னெ விட சம்பளமும் கூட. இப்ப இல்லன்னாலும் என்னைக்காவது பிரச்சினை வரும்பா.. நா சொல்றத கேளுங்க.’ என்று வாதாடிய மகனை சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.

மகன் நினைத்தது போலவே பிரச்சினை வெடித்தது. நீ பெரிசா நான் பெரிசா என்ற ஈகோ பிரச்சினை. அதுவும் ஒரு வருடத்திற்குள்ளாகவே.  இரு குடும்பத்தாரும் எத்தனை முயன்றும் இளம் தம்பதியர் இருவரும் பிரிவதென தீர்மானிக்க, ‘இப்படியொரு முடிவோட எங்களோட வந்து மட்டும் இருக்கலாம்னு நினைக்காதே.’ என்ற தன் பெற்றோருடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் விடுதியொன்றில் தங்குவதென தீர்மானித்தார் அப்பெண்.

இந்த பிரிவுக்கு என்ன காரணம்?

யோசித்துப் பார்க்கிறேன்..

கணவன்-மனைவி உறவு மட்டுமல்ல மனித உறவுகள் எல்லாமே நீ எனக்கு இதை செய்தால் நான் உனக்கு இதை செய்வேன். அல்லது நீ நான் நினைத்ததுபோல் நடந்துக்கொண்டால்தான் நான் நீ நினைப்பதுபோல் நடந்துக்கொள்வேன்.. என்கின்ற அடிப்படையில்தான்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் அந்த உறவையே அறுத்தெறியவும் நம்மில் பலரும் தயங்குவதில்லை.

மனித உறவுகளில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரை அவருக்காகவே நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஆனால் இறைவன் அப்படியல்ல. என்னை எனக்காகவே என்னுடைய எல்லா குற்றம் குறைகளோடு ஏற்றுக்கொள்கிறார். ‘என் கிட்ட வர்றதுக்கு உனக்கு எந்தவித தகுதியும் தேவையில்லை.’ என்கிறார்..

நமக்கு எத்தனையோ எதிர்பார்ப்பு இருக்கலாம்.. ஆனால் அவருக்கு?

நம்முடனான அவருடைய உறவு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.

அதுவே நிரந்தரமான உறவும்கூட..

சிந்திப்போம்..

Tuesday, September 19, 2006

இறையன்பு!

வாரி விடப்படாத தலை, அம்மைத் தழும்புகள் கொண்ட முகம், வழிகின்ற மூக்கு, அழுக்கேறிய உடல், மண்ணிலே விளையாடும் கரங்கள், உடம்பில் ஒட்டு துணி இல்லாத ஒரு குழந்தை!

குடிசைகளும் குப்பைகளும் நிறைந்து சாக்கடை நீர் தெருவெங்கும் ஓடுகின்ற சேரிப்பகுதி. இது போதாதென்று குப்பைத் தொட்டியில் கிடக்கும் எச்சில் இலைக்காகப் போட்டி போட்டுக்கொண்டு உறுமலுடன் மோதுவதற்கு தயாராகின்ற இரண்டு நாய்கள்..

இதைக் கண்டு “அம்மா” என்று வீறிடுகிறது குழந்தை. குடிசைக்குள்ளே சமையல் செய்து கொண்டிருந்த தாய் குழந்தையின் அழுகுரல் கேட்டு வெளியே ஓடி வருகிறாள். அழுகின்ற குழந்தையை அப்படியே வாரி அணைத்து, ‘வாடி என் கண்ணே, என் ராசாத்தி.’ என்று முத்த மழை பொழிகிறாள்..

பிறர் கண்ணுக்கு பார்ப்பதற்கு அருவருப்பான கோலத்துடன் தோன்றுகிற குழந்தை பெற்றவளுக்கு செல்லம்! வாரி அணைத்து முத்த மழை பொழியும் அத்தாய்க்கு குழந்தையின் உடல் மீது படிந்திருக்கும் தூசி தெரியவில்லை..

பத்து மாசம் சுமந்து, வேதனையோடு பெற்று, தன் குருதியையே பாலாக்கி, அமுதூட்டி வளர்க்கும் தாய்க்கல்லவா தெரியும் குழந்தையின் அருமை!

பத்து மாசம் சுமந்து பெற்ற தாயுடைய அன்பே இத்தகையதென்றால் நமக்கு தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக, நண்பனுக்கு உற்ற நண்பனாக நம்மை அன்றாடம் காக்கும் இறைவனுடைய அன்பு எத்தகையதாக இருக்க வேண்டும்!

கள்வன், காமுகன், குடிகாரன், கொலைகாரன், கொள்ளையடிப்பவன் இப்படி மற்றவர் கண்களுக்கு பொல்லாதவர்களாக, போக்கிரிகளாக, அயோக்கியர்களாக, கயவர்களாக தெரிபவர்களையும் பாகுபாடின்றி பராமரித்து வழி நடத்திச் செல்லும் இறைவனின் அன்பை நான் உணர்ந்திருக்கிறோமா?

சிந்திப்போம்..

Monday, September 18, 2006

அன்பிற்காக வாழ்வோம்

வானதூதர் (Angel) ஒருவர் ஒரு கையில் தீப்பந்தமும் மறுகையில் தீயை அணைக்கும் அடைப்பானையும் வைத்துக்கொண்டு மேகத்தினூடே விரைகிறார். இதைப் பார்த்த ஒரு பெண், ‘எதற்காக இவை இரண்டையும் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்.

‘என் வலது கையில் இருக்கும் தீப்பந்தத்தைக் கொண்டு சொர்க்கத்தை எரித்துவிடப்போகிறேன்.’ என்கிறார் வானதூதர்.

அப் பெண் வியப்புடன், ‘அப்படியா? சரி, இந்த தீப்பந்தம் எதற்கு?’ என்கிறார் வானதூதருடைய இடக்கையில் இருந்த அடைப்பானைச் சுட்டிக்காட்டி.

‘இதைக் கொண்டு நரகத்தில் இருக்கும் நெருப்பை அணைத்துவிடப் போகிறேன்.’

அப் பெண் வாயடைத்துப் போய் நிற்கிறார். பிறகு, ‘ஏன் இப்படிச் செய்யப் போகிறீர்கள்?’ என்கிறார்.

வானதூதர் சோகத்துடன், ‘மக்களில் பெரும்பாலோர் நரகத் தீய்க்கு அஞ்சியும், சொர்க்கத்தின் சுகத்தை நினைத்துமே நல்லவர்களாக வாழ முயல்கிறார்களே தவிர, கடவுளின் மேல் கொண்ட உண்மையான, மேன்மையான அன்பிற்காக வாழ்வதில்லை.’ என்கிறார்.

உண்மைதான்.

இந்த அவசர உலகில் நல்லவனாக, பிறரன்பு உள்ளவனாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது?

‘இவ்வுலகில் நீ இழக்கும் எல்லாவற்றிற்கும் பன்மடங்கு மேலான சுகத்தை அளிக்கும் நோக்கத்துடன் உனக்கு நான் தரும் பரிசுதான் சொர்க்கம். அந்த முடிவில்லா வாழ்வை தரும் பரிசுக்கு தகுதியுடையவனாக நீ இருக்க வேண்டாமா?’ என்று நம்மை கேட்கிறார் இறைவன்.

இதற்காக மட்டுமாவது மனிதன் நல்லவனாக பிறர் சிநேகம் உள்ளவனாக வாழ மாட்டானா என்று நினைக்கிறார் இறைவன்..

நியாயம் தானே?

'இந்த அவசர உலகில் என்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும், என்னுடைய இன்பத்திலும், துன்பத்திலும் எனக்கு தோழனாக, ஆறுதலாக நின்ற என் நண்பர்களையும் நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லாத எனக்கு இறைவனைப் பற்றி சிந்திக்க எங்கே நேரம்?' என்கிறோம் நாம்..

இது நியாயம்தானா?

சிந்திப்போம்

********