Thursday, January 19, 2006

சொர்க்கம் என் பரம்பரைச் சொத்தா?

நான் என்னுடைய வங்கியின் சென்னை மத்திய கிளையில் துணை மேலாளராக இருந்தபோது எல்லா சனிக்கிழமைகளிலும் சென்னை அடையாறு பெசண்ட் நகரிலிருந்து அன்னை வேளாங்கன்னி ஆலயத்துக்கு செல்வது வழக்கம்.

சென்னை பாரிமுனையிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக பெசண்ட் நகர் செல்லும் பேருந்தில் பயணம் செய்வேன். அப்படித்தான் ஒரு நாள் நான் பாரிமுனையில் நின்றுக் கொண்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

சிறிது நேரத்தில் ஒருவர் பேருந்தில் ஏறினார். அவருடைய வலது தோளிலிருந்து ஒரு ஒலிபெருக்கி தொங்கியது. இடது தோளில் புத்தகங்கள், கையேடுகள் கொண்ட ஒரு பெரிய ஜோல்னா பை.. கண்களில் லென்ஸ் கண்ணாடி.. ஒரு அறுபது, அறுபத்தைந்து வயது தோற்றம்.. கோபப் பார்வை.. (ஜோ.. இதெல்லாத்தையும் எப்படி சார் ஞாபகம் வச்சிருக்கீங்கன்னு கேக்காதீங்க.. ஏன், எப்படீன்னு எனக்கே தெரியலை.. எழுத ஆரம்பிச்சதும் தானா அவரோட உருவம் கண் முன்னால வருது..).. எதுக்கு, யார் மேல் கோபம் என்று அவர் பேச ஆரம்பிச்சதும்தான் தெரிந்தது..

‘உங்களுக்கு மோட்ச ராஜ்ஜியம் வேணுமா, வேணாமா?’ என்றார்..

எனக்கு தூக்கிவாரிப் போட்டது.. ஆனால் பேருந்திலிருந்த யாருமே அவரைக் கண்டுக் கொள்ளவில்லை.. தினமும் இவருடைய பேச்சைக் கேட்டிருப்பார்கள் போலத் தெரிந்தது..

அவர் மேற்கொண்டு, ‘என் வழியாலென்றி மோட்ச ராஜ்ஜியத்தில் யாரும் பிரவேசிக்க முடியாது..’ என்று இயேசு கிறீஸ்து வேதாகமத்தில் கூறியிருந்த பல வாக்குகளையும் மேற்கோள் காட்டி தான் சொல்ல வந்ததை நியாயப்படுத்தினார்..

என்னைத் தவிர வேறு யாருமே அவர் இருந்த திசையைக் கூட பார்க்காமல் ஜன்னல் வழியே சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்தில் ஏறியும் அவர் இறங்கவுமில்லை. தான் கூறிக் கொண்டிருந்ததை நிறுத்தவுமில்லை.. ஓட்டுனர் அவரைக் கண்டுகொள்ளாமல் தன் இருக்கையில் ஏறி அமர்ந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்ய.. நடத்துனர் அவருடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

அதாவது பொறி, கடலை, பேப்பர், பாசிமணி இத்யாதி, இத்யாதிகளை பேருந்தில் விற்பவரை எப்படி நடத்துவார்களோ அப்படித்தான் அவரும் நடத்தப் பட்டார்..

இதில் வேடிக்கை என்னவென்றால் பேருந்து புறப்படும் நேரத்தில் தன் ஜோல்னா பையிலிருந்த புத்தகங்களை இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என விற்க முயற்சித்ததுதான். யாரும் வாங்கவில்லை.. நானும்தான்..

‘நீங்க எல்லாருமே நேரா நரகத்துக்குதாம்யா போவீங்க.’ என்ற சாபத்துடன் அவர் இறங்கிச் செல்ல... பேருந்து புறப்பட்டுச் சென்றது.. என்னுடன் பேருந்தில் அமர்ந்திருந்தவர்களை அவருடைய கடைசி சாபம் பாதித்தா என்று அவர்களைப் பார்த்தேன்.. Nobody simply bothered!

வெட்றிவேல் அவர்கள் என்னுடைய பதிவில் இது சம்பந்தமாக இட்ட பின்னூட்டத்திற்கு இதுதான் என் பதில்..

இவரையும் இவரைப் போல் இம்மாதிரி முட்டாள்தனமான போதனைகளை எவரும் கண்டுக் கொள்வதில்லை...

பைபிளிலும் சில இடங்களில் இது போன்ற அறிக்கைகள் உள்ளன.. இல்லையென்று சொல்ல வரவில்லை.. ஆனால் அது எந்த நோக்கத்தில், யாரைப் பற்றி சொன்னதாக வருகின்றன என்று புரிந்துக் கொள்ளாமல் இவரைப் போன்றவர்கள் அவற்றை சான்றாக எடுத்துக் காட்டி போதிப்பதுதான் வேதனை..

நான் ஒன்றும் பைபிளைக் கரைத்துக் குடித்தவனில்லை.. நான், ஏன், ஏறக்குறைய என்னைப் போன்ற கத்தோலிக்க கிறீஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் யாருமே பைபிளை மனப்பாடம் செய்வதில் குறியாய் இருப்பதில்லை..

கத்தோலிக்க கிறீஸ்துவர்கள். 'பிரிந்து சென்ற சகோதரர்கள்' என வர்ணிக்கும் சிலர்தான் இதை தவறு என்று தெரியாமல் செய்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை..

ஆனால் இதற்கு நேர் எதிராக பைபிளில் காணப்படும் சில வாக்குகளை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1. மத்தேயு:8.11: ‘கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர்* வந்து விண்ணரசில் ...உடன் பந்தி அமர்வார்கள். அரசின் மக்களோ வெளியிருளில் தள்ளப்படுவர்..’

2. மாற்கு:10.14-15: ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் ஏனனில் கடவுளின் அரசு இத்தகையோரதே.. கடவுளின் அரசைக்# குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது..’

3.  சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய கடிதம்:2:16: கடவுளின் திருச்சட்டத்தைப் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்களாவார்கள். கடவுளின் திருச்சட்டத்தைப் பெற்றிராத புறவினத்தார்* அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகவே நிறைவேற்றும்போது .. அவர்களுக்கு திருச்சட்டம்$ இல்லாத போதிலும் அவர்கள் உள்ளமே (அச்)சட்டமாய் அமைகிறது.

* பலர், புறவினத்தார் - கிறிஸ்துவை பின்பற்றாதவர்கள் என பொருள் கொள்ளலாம்.

# கடவுளின் அரசு - கவனிக்க, கிறீஸ்துவர்களின் அரசு என கூறவில்லை. கடவுளின் அரசை சொர்க்கம், விண்ணகம், மோட்சம் என கொள்ளலாம்

$ கடவுளின் திருச்சட்டம் -  இங்கும் கிறீஸ்துவின் சட்டம் என குறிப்பிடப்படவில்லை. கடவுளின் சட்டம், வழிமுறை என்னவாயிருக்கும்? உன்னை நீ அன்பு செய்வதுபோல் பிறரையும் அன்பு செய், நல்லவனாய் இரு, பாவம் செய்யாதே என்பதுதானே.. இதை அவரவர் மனசாட்சியின்படி கடைப்பிடிப்போர் சொர்க்கம் அடைவது உறுதி.

இன்னும் இது போன்ற பல அத்தாட்சிகளை பைபிளிலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் எண்பிக்க முடியும். நேரமின்மையால் இத்துடன் நிறுத்துகிறேன்..

இதற்கு எதிர்மறையாக வாதாட வேண்டுவோருக்கும் பைபிளில் சான்றுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது..

அதுதான் பைபிளின் சிறப்பம்சம்.. பைபிள் கூறப்பட்டுள்ளவை யாவுமே கடவுளின் வார்த்தையென்று பொருள்கொள்வது கடினம்.. கடவுளின் வார்த்தையை பலரும், அவருடைய சீடர்கள், சீடர்களின் சீடர்கள் அவரவர் கேட்டபடி, பொருள் கொண்டு எழுதியுள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

கடவுளின் அரசான சொர்க்கத்தில் நுழைய ஒரு நல்ல மனிதனாய், ஆன்ம சுத்தியுடன் வாழ வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை நியதி..

சொர்க்கமா? அப்படியொன்று இருக்கிறதா என்றால்.. அங்கு சென்று பார்த்துவிட்டுத்தான் சொல்ல முடியும்.

வெட்றிவேல் பின்னூட்டத்தில் மிக்லோஸ் ஜாக்கோ என்பவர் எழுதியிருந்த சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் எல்லாவற்றையும் மறுத்துக் கூற முடியும். ஆனால் அதற்கு நான் முயலப்போவதில்லை:

கீழே குறிப்பிட்டிருந்தவற்றிற்கு மட்டும் பதில் கூறுகிறேன்.

it not abundantly clear that the Bible writers
expected the world to end in their generation? But
it?s 2,000 years later; the world continues. Clearly
the Bible was wrong; the end was not near. The Bible
did not speak the truth.

But Christians have no problem rationalizing away the
very plain meaning of the passages I cited.

பைபிளில் குறிப்பிட்டிருப்பது இவ்வுலகின் அழியும் காலமல்ல.  இறுதி நாட்கள்  என்பதை நம் ஒவ்வோருவரின் மரணதருவாய் எனவும் பொருள் கொள்ளலாம். அதிலும் கூட இத்தனை வருடங்களுக்குள் காலம் அழிந்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாய் எனக்கு தெரியவில்லை..

சரித்திர ஆசிரியர்கள் கிறீஸ்துவுக்கு முன் இரண்டாயிரம் ஆண்டுகள்தான் உலகம் இருந்ததெனவும் வாதிடுவதில்லை. இரண்டாயிரம் வருடங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.. கிறீஸ்து பிறப்பதற்கு முன் இரண்டாயிரம் வருடங்கள் இருந்ததாகவும் ஆகவே கிறீஸ்து பிறந்ததிலிருந்து இரண்டாயிரம் வருடத்திற்குள் உலகம் அழிந்துவிடும் என்று பொருள் கொண்டுவிட்டு அடடா இன்னும் உலகம் அழியவில்லையே.. ஆகவே பைபிளில் கூறப்பட்டுள்ளதெல்லாம் பொய் என்று வாதிட்டால் அதற்கு முடிவே இருக்காது..

வாதம் அர்த்தமுள்ளதாய் இருந்தால் பதில் கூற முயலலாம். அது பிடிவாதமாயிருந்தால் அதற்கு பதில் கூற விழைவது விழலுக்கு இறைத்த நீர் போலத்தான்.

அதற்காகத்தான் நான் எப்போதும் சொல்வதையே மீண்டும் சொல்கிறேன்.

மதம் மனித மனதைச் சார்ந்தது.. மனித மூளையை அல்ல.43 comments:

G.Ragavan said...

ஜோசப் சார். எந்த ஒன்றையும் நல்லதெனவும் கெட்டதெனவும் வாதிட முடியும். Turn Coat என்ற விளையாட்டே இதை வைத்து உண்டே. வலைப்பூக்களிலும் மதச் சண்டைகள் உண்டே. ஒருவரையொருவர் குறைத்துக் குரைப்பது.

நமக்கு இதெல்லாம் வேண்டாம். நம்ம வேலைய நம்ம பாப்போம்.

G.Ragavan said...

தப்பா turn coat-ன்னு போட்டுட்டேன். சரியாப் படிச்சுக்குங்க. quote

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இதுவும் நம்முடைய கடமைகள்ல ஒன்னுதான் ராகவன்..

வாதங்கள் வரும்.. வரவேண்டும்..

இந்த மாதிரியான விளக்கப் பதிவுகள் இனி வராது..

பைபிள் சிந்தனைகள் மட்டுமே இடுவதாக உத்தேசம்..

Don't feel bad for what vetrivel wrote about you. Such comments will hurt you only if you want to get hurt.

Brush it aside.

நாம வேலை செய்யற இடத்துல நாம சொல்றதையெல்லாமா கேட்டுக்கறாங்க? அது போலத்தான் இதுவும்.

நான் preach பண்றேன்னு நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..

tbr.joseph said...

ஒருவரையொருவர் குறைத்துக் குரைப்பது.//

நான் சொன்னது அப்படியா இருக்கு ராகவன்.. Does it look like that?

G.Ragavan said...

// Don't feel bad for what vetrivel wrote about you. Such comments will hurt you only if you want to get hurt. //

நிச்சயமாக இல்லை சார். கொஞ்ச நாள் முன்னாடி அப்படி இருந்தேன். இப்பல்லாம் அப்படியில்லை. அவர் ஒன்னும் தப்பாச் சொல்லலையே. உள்ளதத்தான சொன்னார். அருணகிரியோட தமிழ் எனக்குக் கொஞ்சமாத்தானே தெரியும்.

// //ஒருவரையொருவர் குறைத்துக் குரைப்பது.//
நான் சொன்னது அப்படியா இருக்கு ராகவன்.. Does it look like that? //

ஜோசப் சார். நான் சொன்ன வரிகள் எனக்கும் இல்லை. உங்களுக்கும் இல்லை. நமது நண்பர் கூட்டத்தில் எவரையும் இல்லை. பொதுவாக வலைப்பூக்களில் நடக்கும் விதங்களைச் சொன்னேன். சார், உங்களை எதுவும் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பெயரைப் போட்டுச் சொல்வேன் சார். நான் எப்பொழுதும் உங்களது அடுத்த பதிவிற்குக் காத்திருப்பன். :-)

ஆரோக்கியம் said...

ஜோஸப் சார், யார் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும்... நீங்கள் தொடர்ந்து பதியுங்கள்.

துளசி கோபால் said...

டி.பி.ஆர். ஜோ,

இங்கேயும் 'சனிக்கிழமை அட்வெண்ட்டிஸ்ட்டு'ங்க வீட்டுக்கு வந்து பேஜார் பண்ணுவாங்க.
வந்த புதுசுலே இப்படி வந்த ரெண்டு லேடீஸை மரியாதை நிமித்தம் உள்ளே கூப்புட்டு உக்காரவச்சேன்.
அவுங்க சொல்ரதையெல்லாம் சொல்லிட்டு ச்சின்னதாபுஸ்தகம் விக்க ஆரம்பிச்சாங்க.
50 செண்ட்தான். ஒரு தருமம்னு நானும் விடாம வாங்கிக்கிட்டு இருந்தேன்.

ஒரு சமயம் வீட்டுலெ விருந்தாளி வராங்கன்னு சமையலில் மும்முரமா இருந்தேன். அப்ப
வந்தாங்க. வேலையா இருக்கேன்னு சொன்னதும் போனவுங்க, மறுபடி வரவே இல்லை.

மதம் எதான்னா என்ன? மனுஷன் மனுஷனா இருந்தாப் போதாதா?

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
சும்மா நச்சுன்னு இருக்கு.

எனக்கும் இது போல் ஏற்பட்ட அனுபவம் பற்றி ஒரு பதிவு போடலாமென்றிருக்கிறேன்.

பெரியண்ணன் said...

"எனக்கும் இது போல் ஏற்பட்ட அனுபவம் பற்றி ஒரு பதிவு போடலாமென்றிருக்கிேன்."

தம்பி ஜோ, சீக்கிரமே போடுங்க!

tbr.joseph said...

உங்களை எதுவும் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பெயரைப் போட்டுச் சொல்வேன் சார். //

உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும் ராகவன். எதையும் மறைத்துச் சொல்லத் தெரியாத ஒரு நல்ல உள்ளம் படைத்த இளைஞன்.

தன்னை குறை சொல்லும் ஒருவருடைய கருத்தையும் மதிக்கும் உள்ளம் உங்களுக்கு இருக்கு.

I am really proud of you young man.

tbr.joseph said...

வாங்க ஆரோக்கியம்,

உங்க வாழ்த்துக்கு நன்றி..

இனி வரும் இடுகைகள் நிச்சயம் வாதங்களை தூண்டாத வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்.

tbr.joseph said...

வாங்க துளசி,

எனக்கும் இப்படி பலமுறை நடந்துள்ளது..

என்ன செய்வது.. மதத்தையும் மார்க்கெட்டிங் செய்கிறார்கள்..

பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

நன்றி, உங்க பாரதியார் கெட்டப் சூப்பரா இருக்கு.

எனக்கும் இது போல் ஏற்பட்ட அனுபவம் பற்றி ஒரு பதிவு போடலாமென்றிருக்கிறேன்//

நிச்சயம் போடுங்க.

Vetrivel said...

ஜோசப் சார்,

முதல்ல ஒண்ணைத் தெளிவு படுத்தணும். நான் ஒட்டுமொத்தமா எல்லா கிறித்துவங்களயும் தாக்க வரலை. நான் திட்றது கிறித்துவன்ற பேர்ல உலகம் முழுக்க நம்ம தமிழ்க்கலாசாரம் போல பரவியிருந்த பாகன் இனத்தயெல்லாம் அழித்தொழிப்பு செஞ்சுவர வெறிபிடித்த ஆளுங்களைத்தான்.

உங்கள மாதிரி, தம்பி ஜோவை மாதிரி கிறித்துவத்தைச் சரியா புரிஞ்சுக்காத நல்லவங்க பலர் இருக்கத்தான் இருக்கீங்க. நீங்க இந்த மண்ணின் மைந்தருங்க. என்னதான் மதம் மாறியிருந்தாலும் சூழலோட பாதிப்பு இருக்கத்தான செய்யும். ஆனா சொர்க்கம் எல்லாருக்கும் பொது, அதில தனிப்பட்ட குத்தகைன்னு எதுவும் யாருக்கும் கிடையாது, கிறித்துவத்தை ஏத்துக்காத தமிழ்சனங்க நரகத்தீயில வேவமாட்டாங்கன்னு உங்களால உங்க சர்ச்சுலய போய் சொல்ல முடியாது. வெணுமின்னா சொல்லிப்பாருங்க, அப்புறம் உங்கள சாத்தானோட கையாளுன்னு உங்க பங்குச்சாமியாரே முத்திரை குத்திடுவாரு.

பஸ்ஸில ஏதோ ஒரு பைத்தியக்காரனைப் பாத்ததைச் சொன்னீங்க. அது மாதிரி ஆயிரக்கணக்கில நான் பாத்திட்டுருக்கன். சந்துக்குச் சந்து கையில ஒரு மைக்க வச்சுகிட்டு போறவன் வரவன எல்லாம் பாவிகளே பாவிகளேன்னு கூப்பிட்டிக்கிட்டிருவங்களக் கண்டாலே எனக்கு ஆத்திரம் பொத்துக்கிட்டு வரும். சட்டையப்பிடிச்சு யாரடா பாவிங்கற, மானிடராய்ப் பிறப்பதரிதுன்னு பாடின மண்ணுல, தீதும் நன்றும் பிறர்தர வாரான்னும், அவரவர் கருமமே பெருமைக்கோ சிறுமைக்கோ கட்டளைக்கல்னும் ஆயிரம் ஆயிரம் வருசமா வாழ்ந்துக்கிட்டிருக்கிற மண்ணில, ஏண்டா இந்த மாதிரி பொய்யைப் பரப்பறீங்கன்னு செவுள்லய ரெண்டு அறை விடணுமின்னு தோணும். வன்முறைல எனக்கு நம்பிக்கை கிடையாததால போங்கடான்னு போயிருவன்.

அப்புறம் அந்த பஸ்ஸில யாரும் அந்தப் பைத்தியக்காரன கண்டுக்கலன்னு சொன்னீங்களே அதுக்கு திராவிட இயக்கங்களுக்குதான் நன்றி சொல்லோணும். எங்க அப்பா தீவிரமான திமுக அனுதாபி.ஆனா நாத்திகர் கிடையாது. முருகபக்தரு. அம்மா மட்டும் நைஸா அதிமுகவுக்கு வோட்டுப் போடுவாங்க. அத விடுங்க. எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு. வேலா, திமுககாரனுங்க கிறுத்துவனையோ முசுலீமையோ பிறமதத்துக்காரனையோ திட்டமாட்டாங்க. ஆனா என்னிக்கும் மதம் மாறமாட்டாங்க. நம்ம தமிழினப் பெருமைய விட்டுக் கொடுக்க மாட்டாங்க. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஏதோ இந்துக்களுக்குத் துரோகம் பண்ணிட்டதா இந்துமுன்னணிக்காரங்க சொல்றாங்களே, ஆனா அதே பெரியாராலத்தாண்டா இன்னிக்கு தமிழ்நாட்டில பெரும்பான்மையா மதம் மாறாம இந்துக்களா இருக்காங்கன்னு. இது எனக்கே புரிய ரொம்ப நாளாச்சு.

tbr.joseph said...

கிறித்துவத்தை ஏத்துக்காத தமிழ்சனங்க நரகத்தீயில வேவமாட்டாங்கன்னு உங்களால உங்க சர்ச்சுலய போய் சொல்ல முடியாது. வெணுமின்னா சொல்லிப்பாருங்க, அப்புறம் உங்கள சாத்தானோட கையாளுன்னு உங்க பங்குச்சாமியாரே முத்திரை குத்திடுவாரு.//

இல்லேன்னு பொய் சொல்ல மாட்டேன் வெற்றிவேல்..

காந்தி சொன்னது ஞாபகமிருக்கா..

நான் கிறீஸ்துவத்தை நேசிக்கிறேன், மதிக்கிறேன். ஆனால் கிறீஸ்துவர்களையல்ல..

நாம மதக் கோட்பாடுகளைப் பற்றி மட்டும்தான் பேசுகிறோம். தனி நபர்களையல்ல..

எந்த ஒரு தனி மனிதனாலயும், அவனுடைய பேச்சினாலயும் எந்த ஒரு மதமும் வளர்ந்ததுமில்லை, அழிந்ததுமில்லை..

அதே மாதிரி யாருமே முழுசா ஆஸ்திகனுமில்லை முழுசா நாத்திகனுமில்லை..

அதை நாம எல்லோருமே புரிஞ்சிக்கிட்டா சரி.

முத்து(தமிழினி) said...

சார்,

தலைப்பு நச்சுன்னு இருக்கு...இன்னும் முழுதாக படிக்கவில்லை....படிச்சுட்டு சொல்றேன்...

ஜோ / Joe said...

//கிறித்துவத்தை ஏத்துக்காத தமிழ்சனங்க நரகத்தீயில வேவமாட்டாங்கன்னு உங்களால உங்க சர்ச்சுலய போய் சொல்ல முடியாது. வெணுமின்னா சொல்லிப்பாருங்க, அப்புறம் உங்கள சாத்தானோட கையாளுன்னு உங்க பங்குச்சாமியாரே முத்திரை குத்திடுவாரு.//

வெற்றிவேல் அண்ணே,
நீங்க எந்த காலத்துல இருக்கீங்க .சினிமால வற்ர எப்பவும் கையில பைபிளும் செபமாலையும் வச்சுகிட்டு"மே காட் பிளஸ் யூ மை சைல்ட்"-ன்னு சொல்லுற பாதர்-ல்லாம் இப்போ கிடையாது .நான் இந்தியாக்கு வந்தா உங்கள வேணா எங்க பங்கு சாமியார் கிட்ட கூட்டிட்டு போய் ,நீங்க கேட்ட கேள்விய கேப்போம் .சரியா?

ஜோ / Joe said...

//இல்லேன்னு பொய் சொல்ல மாட்டேன் வெற்றிவேல்.. //

ஜோசப் சார்,
உண்மையிலயே நீங்க பாதர் கிட்ட இந்த கேள்விய கேட்டுருக்கீங்களா? கண்டிப்பா யாரும் நீங்க நினைக்குற மாதிரி சொல்ல மாட்டாங்க .அப்படி சொன்னா அவர் கண்டிப்பா பத்தாம் பசலி தான்.நான் பல பேரு கிட்ட கேட்டிருக்கேன்.அதை வச்சு தான் சொல்லுறேன்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

நீங்க சொல்றதும் உண்மையா இருக்கலாம் ஜோ..

என் குடும்பத்திலேயே இரண்டு குருமார்கள் இருக்கிறார்கள் என்பதால் சொல்கிறேன்..

இன்னும் சிலர் பழமைவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறை குருக்கள் நீங்கள் சொல்வதுபோல் முற்போக்கு எண்ணங்களுடன் இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் ஒரு கத்தோலிக்கரை திருமணம் செய்துக்கொள்ள யாரும் மதம் மாறத்தேவையில்லை.. இதிலிருந்தே வெற்றி வேல் சொல்வது ஒரு பொதுவான கருத்து என்பது தெளிவாகிறது.

ஜோ / Joe said...

//உங்கள மாதிரி, தம்பி ஜோவை மாதிரி கிறித்துவத்தைச் சரியா புரிஞ்சுக்காத நல்லவங்க பலர் இருக்கத்தான் இருக்கீங்க.//

வெற்றிவேல் அண்ணே,
என்ன கிண்டலா! சென்ற மாதம் நான் இந்தியாவுக்கு சென்ற போது கூட ,ரோமில் சென்று தியாலஜியில் டாக்டர் பட்டம் பெற்ற எங்கூர் கார பாதரிடம் நீண்ட நேரம் இது குறித்தெல்லாம் கேட்டறிந்தேன் .அவருடைய சிந்தனை என்னோடு ஒத்துப்போனது. அவர் என்ன கிறிஸ்துவத்தை அறியாதவரா?

tbr.joseph said...

வெற்றிவேல் அண்ணே,
என்ன கிண்டலா! //

அடடே விடமாட்டிங்க போலருக்கே ஜோ..

வெற்றிவேல் ஏதோ தமாஷா சொன்னா..

ஜோ / Joe said...

//இன்னும் சிலர் பழமைவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறை குருக்கள் நீங்கள் சொல்வதுபோல் முற்போக்கு எண்ணங்களுடன் இருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் ஒரு கத்தோலிக்கரை திருமணம் செய்துக்கொள்ள யாரும் மதம் மாறத்தேவையில்லை.. இதிலிருந்தே வெற்றி வேல் சொல்வது ஒரு பொதுவான கருத்து என்பது தெளிவாகிறது.//

உண்மைதான் .கத்தோலிக்க திருச்சபை பல்வேறு முறை தன்னுடைய நிலைப்பாடுகளிலிருந்து மாறி வருகிறது என்பதை நீங்களும் அறிவீர்கள் .நான் சொல்லுவது என்னுடைய கருத்து மட்டுமல்ல .கத்தோலிக்க திருச்சபையின் கருத்துக்களும் கூட .ஞானஸ்நானம் வாங்கியவர்கள் தான் மோட்சம் செல்ல முடியும் என்ற பத்தாம் பசலிக் கருத்துகளிலிருந்து கத்தோலிக்க திருச்சபை எப்போதோ வெளியே வந்து விட்டது .அதனை அறியாத சில பாதிரிகளும் ,மக்களும் இருப்பது அவர்கள் திருச்சபையை புரியாதிருப்பதாகத் தான் அர்த்தம்.

ஜோ / Joe said...

வெற்றிவேல் அண்ணே,
நானும் கூட உங்கள் போல பல இடங்களில் எரிச்சல் பட நேர்ந்திருக்கிறது ."நீ ஒரு கிறிஸ்தவன் .எப்படி தமிழனாக முடியும்?" என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள் ."உனக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம் .நீ கிறிஸ்தவனாச்சே ?" என்ரு கேட்டவர்கள் இருக்கிறார்கள் .அறியாமையிலிருக்கும் இந்த சிலருக்காக நான் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களை தவறாக நினைக்க முடியுமா ? இந்துக்களில் பெரும்பான்மையினர் எவ்வளவு விசால மனமும் ,பொறுமையும் கொண்டவர்கள் என்று எனக்குத் தெரியும் .அதனால் இந்த ஒரு சிலரை வைத்து ஒட்டு மொத்த இந்துக்களையும் நான் எடை போடுவதில்லை.

டி ராஜ்/ DRaj said...

சார்: இன்னிக்கு தான் இந்த பதிவ படிச்சேன். ரொம்ப வெளிப்படையா எழுதியிருக்கீங்க. என் தந்தை தான் படித்த கத்தோலிக்க கல்விகூடங்களில் நானும் படிக்கவேண்டுமென்று விரும்பியவர். நானும் பல கிறுஸ்துவ நிறுவனங்களில் (SDA Schools, and Jesuit Institutions) படித்தவன். நீங்கள் சொன்னது போல சில கருப்பு ஆடுகள் (எல்ல இடத்திலும் இருப்பது போல) இருக்கத்தான் செய்கிறார்கள். தனது சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நல்லது செய்யவேண்டுமென்ற கோட்பாடுடையவர்கள் பலரும் உண்டு அதே சமயத்தில் மற்ற மத மாணவர்களை பரிவுடன் நடத்திய பாதிரியார்களும் உண்டு.

tbr.joseph said...

ஞானஸ்நானம் வாங்கியவர்கள் தான் மோட்சம் செல்ல முடியும் என்ற பத்தாம் பசலிக் கருத்துகளிலிருந்து கத்தோலிக்க திருச்சபை எப்போதோ வெளியே வந்து விட்டது .அதனை அறியாத சில பாதிரிகளும் ,மக்களும் இருப்பது அவர்கள் திருச்சபையை புரியாதிருப்பதாகத் தான் அர்த்தம்.//

உண்மைதான் ஜோ. ஒத்துக்கறேன்.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

தனது சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நல்லது செய்யவேண்டுமென்ற கோட்பாடுடையவர்கள் பலரும் உண்டு //

அவர்களும் மனிதர்கள்தனே ராஜ். நமக்கு இருக்கும் எல்லா ஆசாபாசங்களும், உணர்வுகளும் அவர்களுக்கும் உண்டே. பாதிரியார்களை கடவுள்கள் என்று நினைத்த காலமெல்லாம் போய்விட்டது.

அதனால்தான் சொல்கிறேன். மதம் என்பது அதைச்சார்ந்த மனிதர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

முத்து(தமிழினி) said...

joe,

//கத்தோலிக்க திருச்சபை பல்வேறு முறை தன்னுடைய நிலைப்பாடுகளிலிருந்து மாறி வருகிறது என்பதை நீங்களும் அறிவீர்கள்//

well said...

a progressive religion should behave this way....

முற்போக்கு எண்ணம் உள்ள பலரும் தங்கள் சாதி , மதம் என்று வரும்போது சிறுமைகளை நியாயப்படுத்த முயன்று அசிங்கப்படுவதை பார்த்துள்ளேன். நீங்கள் நன்றாக சொல்லி உள்ளீர்கள்.

Vetrivel said...

ஜோ தம்பி,

இப்பத்தான் உங்கள் மண்ணின் மைந்தருன்னேன். அதுக்குள்ள நீங்க உரோமாபுரியிலிருந்து வாங்கற அங்கீகாரத்தைப் பத்திப் பெருமப் படறீங்க. என்னத்தச் சொல்றது. இப்பம் கிறித்தியன் தியாலஜின்ன்னா என்ன, நீங்க புரிஞ்சிக்கிட்டது என்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க. உங்க நம்பிக்கையை நான் குத்தம் சொல்லல. அதுல தப்பும் இல்ல. ஆனா என்னைப் பொறுத்தவரை கிறித்துவமோ இசுலாமோ லாலிபாப் பூச்சாண்டி தியாலஜிதான். அதுக்குமேல அதுல புரிஞ்சுக்க என்ன இருக்குன்னு சொல்லுங்க.

கடவுள் திடீர்னு ஒருநா காலைல எந்திரிச்சு நாஸ்தா பண்ணி வாயத் தொடச்சுட்டுக்கிட்டு அதுக்கப்புறம் ஆறுநாள்ல ஓவர்டைம் பண்ணி உலகத்தைப் படைச்சுட்டுப் போயிட்டதாவும், அப்புறம் வந்த ஜனங்க கடவுள் யாருன்னு தெரியாம முழிச்சிட்டிருக்கையில ஒரு கன்னிப்பொண்ணுக்குப் பொறந்து வந்த தேவமைந்தன் அடையாளம் காட்டியதாச் சொல்லி அப்புறம் அவரையே கடவுள் ஆக்கிட்டீங்க. அவரை ஏத்துக்கிட்டா சொர்க்கம். இல்லாக்காட்டி நிரந்தரமா நரகம். அவ்ளொதானே? என்னா நீங்க ரெண்டாயிரம் வருசமா சொர்க்கத்துக்குப் பாஸ்போர்ட் வச்சுருக்க சோல் ஏஜெண்டின்னா, இசுலாமியருங்க 1500 வருசமா வாங்கி வச்சுருக்காங்க. விவேகாந்தர் சொல்றாப்பல அரேபியாவில ஏதோ ஒண்ணு ரெண்டு சித்தருங்க அதனாலதான் அவங்க காணாததக் கண்டதப் போலக் கொண்டாடறாங்க, நம்ம நாட்டில ஊருக்கு ஊரு இறைத்தூதருங்க, சித்தருங்க நெறஞ்சிருக்காங்க. தமிழ்த்திருநாட்டில தோணாத இறைத்தூதருங்களா?

முதல்ல உலகம் படைக்கப்பட்டு எத்தன வருசம் ஆச்சுன்னு விஞ்ஞானபூர்வமா யோசிக்க ஆரம்பிச்சாலே உங்க ஜெனெசிஸ் தியாலஜியெல்லாம் பணால் ஆயிடும். அப்புறம் தமிழ்ல கூர்தல்னு சொல்றாங்களே அதுக்கு என்னா விளக்கமின்னு தமிழ் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுப் பாருங்க.

குமரன் (Kumaran) said...

சார். நான் இந்தப்பதிவையும் இதில் வரும் பின்னோட்டங்களையும் படிச்சேன். பைபிள்ல இருந்து குறை சொல்ல ஆரம்பிச்சோம்னா அதுக்கு ஏத்த மாதிரி புராணங்களில இருந்தும் நிறைய எடுத்து உடலாம். தேவையில்லாத ஒரு விவாதம் நடக்கிறதோ என்று தோன்றுகிறது.

இராமநாதன் said...

வெற்றிவேல் அண்ணாவுக்கு அனுப்பிச்ச மெயில இங்கேயும் போட்டுடறேன் (அவரும் மற்றவர்களும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க என்ற நம்பிக்கையில்),

Dear Vetrivel,
I too have my reservations against Christianity and Islam. However, I
dont subscribe to the view that God's Word will speak ill about other
religions. Coz if he Does, then he isnt a God anymore.

Paganism like ours and Western religions do have their differences.
Nevertheless, I stick to my view that Bible or Quran's case against
infidels were added on much later or twisted to their own agenda by
certain bigotists.

Thanks & Regards
---

ஜோசஃப் சார்,
இராகவன் மற்றும் உஷா அக்கா சொன்னது போல எனக்கும் சந்தேகங்கள் உண்டு. அவற்றை கேட்டால் தர்மசங்கடம் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள். எனக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உங்களையும், ஜோவையும் போல பொறுமையான ஒருவரிடத்து கேட்கும்போது உணர்ச்சிவசப்படாமல் இதுகுறித்து நிதானமான பதில்கள் கிடைக்குமென்பது என் நம்பிக்கை.

நன்றி

நல்லடியார் said...

//மதம் மனித மனதைச் சார்ந்தது.. மனித மூளையை அல்ல//

சகோ.ஜோசப்,

ஈரடியில் ஒரு நெத்தியடி கொடுத்திருக்கீங்க!
(மனம் என்பது இதயமா? மூளையா? என்ற தனிவிவாதமும் உண்டு. யாரவது இந்த சந்தேகத்தையும் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்!)

//எந்த நோக்கத்தில், யாரைப் பற்றி சொன்னதாக வருகின்றன என்று புரிந்துக் கொள்ளாமல்//

இதே போல்தான் குர்ஆனில் ஓரிரைக் கொள்கைய நிராகரிப்போரைப் பற்றி விளிக்கும் இடங்களில் காஃபீர்/குஃபார் (நிராகரிப்பாளர்/கள்) என்று சொல்லப்பட்டதை எடுத்துக் கொண்டு, இந்துக்களையெல்லாம் குர்ஆன் காஃபீர் என்று விளிக்கிறது என்று நேசமாகவும் ஆரோக்கியமற்றும் திரிப்பவர்களுளர்.

அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக. (குர்ஆன் 50:45)

tbr.joseph said...

அன்புள்ள ஜோவுக்கு,

நீங்க தனி மெய்யிலில் கேட்ட கேள்விக்கு பின்னூட்டத்திலேயே பதில் தருகிறேன்.

எந்த ஒரு விஷயத்திலும் வாதமும் பிரதிவாதமும் இருப்பது சகஜம். அதில் வாதம் செய்வோர் இருவரும் மற்றவர்களுடைய வாதத்தில் இருக்கும் கருத்தை மட்டும் எதிர்க்கவோ, ஏற்றுக்கொள்ளவோ செய்யலாம். அதில் சம்பந்தப் படாதவர்களையெல்லாம் இழுத்து விமர்சிப்பது சரியா என்று தெரியவில்லை. அத்துடன் வாதங்கள் எல்லைக் கடந்து பிடிவாதங்களாக மாறும்போதுதான் பிரச்சினையாகிறது. அதனால் மனக்கசப்பும் ஏற்படுகிறது.

அதை வாதிடுவோர் இருவரும் புரிந்துக் கொன்றால் போதும். வேறொன்று, நாம் எத்தனை தெளிவாக நம் கருத்தை எடுத்துச் சொன்னாலும் மற்றவர் பிடிவாதத்துடன் வீம்புக்கு வாதிட்டுக் கொண்டிருந்தால் நம் வாதத்தை நிறுத்திக் கொண்டு விலகிவிடுவதுதான் நல்லது என்றும் நினைக்கிறேன். மற்றபடி நீங்களும் வெற்றிவேலும் என்னுடைய பதிவில் வாதிடுவதற்கு எனக்கெந்த சங்கடமும் இல்லை..

வாதிடுங்கள்.. ஆனால் அது ஒரு அளவோடு இருந்தால் எல்லோருக்குமே நல்லது. அவ்வளவுதான்..

tbr.joseph said...

வாங்க குமரன்,

பைபிள்ல இருந்து குறை சொல்ல ஆரம்பிச்சோம்னா அதுக்கு ஏத்த மாதிரி புராணங்களில இருந்தும் நிறைய எடுத்து உடலாம். //

உங்களுடைய இந்த கருத்தும் விவாதத்தை மேலும் கூட்டலாம்..

என்னுடைய பார்வையில் வாதங்கள் சம்மந்தப் பட்ட எல்லோருக்கும் ஏதாவது ஒரு நன்மையைப் பயக்கும் என்றால் அதில் தவறில்லை..

புராணங்களும் சரி, பைபிளும் சரி, நாம் எழுதி வைத்த்வை இல்லையே.அதனால் நம்மைப் போன்றோர் நம் பார்வையில் பட்டதை நம் அறிவுத்திறனுக்கு ஏற்றார்போல் எழுதும்போது சிலருக்கு அது தவறாகப் படலாம். அதில் தப்பேதும் இல்லை. என்னுடைய கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தால் I am an hypocrite.
வெற்றி வேல் ஒரு கருத்தைச் சொன்னார், ஜோ அதற்கு மறு கருத்தை அவருடைய பாணியில் சொன்னார். சிலர் முன்னவரையும் சிலர் பின்னவரையும் ஆதரித்தார்கள்..

நடக்கட்டும் பார்ப்போம் எவ்வளவு தூரம் செல்கிறார்களென்று.. அநாகரீகமாய் யாராவது வாதிட்டால் அவர்களுடைய கருத்தை நீக்கிவிட்டு போகிறேன்.. அவ்வளவுதானே..

tbr.joseph said...

வாங்க இராமநாதன்,

இராகவன் மற்றும் உஷா அக்கா சொன்னது போல எனக்கும் சந்தேகங்கள் உண்டு. அவற்றை கேட்டால் தர்மசங்கடம் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள். எனக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உங்களையும், ஜோவையும் போல பொறுமையான ஒருவரிடத்து கேட்கும்போது உணர்ச்சிவசப்படாமல் இதுகுறித்து நிதானமான பதில்கள் கிடைக்குமென்பது என் நம்பிக்கை.//

நிச்சயம் கேளுங்க.. இதுக்கெல்லாம் கோச்சிக்கிட்டா எனக்கு மன முதிர்ச்சி இல்லையென்று அர்த்தம்..

எனக்கு எவ்வளவு தெரியுமோ அந்த அளவுக்கு பதில் சொல்றேன்..

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.. சாரி, சூரியன் FM கேக்கறதால வந்த வினை!

tbr.joseph said...

வாங்க நல்லடியார்,

அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக. (குர்ஆன் 50:45) //

ரொம்ப அருமையான வசனங்கள்.
சென்னையில தமிழ் குர்ஆன் எங்க கிடைக்கும்? சொல்லுங்களேன்.

நல்லடியார் said...

சென்னையில் மண்ணடி ஏரியாவில் அல்லது திருவல்லிக்கேனி பகுதியில் பெரும்பாலான இஸ்லாமிய புத்தகக் கடைகளில் கிடைக்கிறது.

உங்களின் போஸ்டல் அட்ரஸை எனக்கு மெயிலிட்டால் என் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறேன்.

என் மெயில் nalladiyarATgmailDOTcom

Vetrivel said...

குமரன் & இராமநாதன்,

திரும்பச் சொல்றன். நான் இங்க ஜோஸப்சார், ஜோ தம்பி இவங்களோட நம்பிக்கைய மதிக்கறன். அதில எந்த விதத்திலயும் யாரும் தப்பு சொல்ல முடியாது. அவரோட நம்பிக்கையை அவரோட வலைப்பதிவுல எழுதறாரு. அவர் ஏசுவைப் பத்தி, அவர் பிரார்த்தனையினால பலனடைஞ்சதைப்பத்தின்னு எழுதட்டும். அதில நான் சொல்ல ஒண்ணும் கிடையாது. ஆனா இதுக்கு பைபிளை ஆதாரமா வெச்சுக்கிட்டு அதுக்கு வேதாகமம்னு ராபர்ட் டிநொபிலி மாதிரி விளக்க வந்தாருன்னா அதுக்கு மறுப்பக்கத்தோட பதிவையும் நான் இங்க போடறது ஒரு பாகன்ற முறைல என் கடமை. இல்லாக்காட்டி இன்னிக்கு ஆப்பிரிக்காவுல பழங்குடிங்க சொல்ற மாதிரி அவங்க பைபிளோட வந்தாங்க. இன்னிக்கு பைபிள் எங்க கையில, நாடு அவங்க கையிலன்னு ஒரு நிலம கண்டிப்பா வரும். அது எப்பவோ எங்கயோ நடந்ததுன்னு இராமநாதன் சொல்றாப்பல ரெண்டாயிரம் வருசம் முன்னாடி அப்படி, இப்ப மாறிப்போச்சுன்னுல்லாம் சொல்றது கண்ணி மூடிக்கிட்டி இருட்டு வந்திரிச்சுன்னு சொல்றாப்பலதான். ஆஸ்திரேலியாவிலேயும், நியுசிலாந்துலும், அமெரிக்காலயம் குருவி சுடுறாப்பல பழங்குடி மக்களைச் சுட்டுத் தள்ளிப்புட்டு இன்னிக்கு வெள்ளைக்காரக் கிறித்துவநாடாக்கிப்புட்டது நடந்து நாளாகலை. இப்பத்தான். இதப்பத்திதான் டான்பிரௌனோட அடுத்த புத்தகம் வரப்போவுது. தவறாம படிங்க. சரி மிச்சம் இருக்கற பிரதேசம் இவங்க கட்டம் போட்டு தாக்குதல் நடத்திகிட்டிருக்கற பிரதேசம் எதுன்னு தெரியுமா? பத்துநாற்பது பலகணின்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? பாத்துக்குங்க.

http://en.wikipedia.org/wiki/10/40_Window

http://www.ad2000.org/1040broc.htm

http://www.1040window.org/

Of the world's 50 least evangelized countries, 37 are within The 10/40 Window. Yet those 37 countries comprise 97% of the total population of the 50 least evangelized countries! Such a fact leaves no doubt that our challenge in reaching the unreached must center on the core -- The 10/40 Window.

If we take seriously the mandate to preach the gospel to every person, to make disciples of all peoples, and to be Christ's witnesses to the uttermost part of the earth, we must recognize the priority of concentrating our efforts on The 10/40 Window. No other area is so blatantly in need of the truth that salvation is only in Jesus Christ.

A third reason we must focus on The 10/40 Window is evident in the fact that it contains three of the world's dominant religious blocs. The majority of those enslaved by Islam, Hinduism, and Buddhism live within The 10/40 Window.

Viewing the map on page three from left<> to right, the Muslim world can be seen most prominently in a wide band across the north of Africa into the Middle East, a bloc representing over 700 million. On the right side of the map is the Buddhist world, encompassing the whole of China.

From its center in The 10/40 Window, Islam is reaching out energetically to all parts of the globe; in similar strategy, we must penetrate the heart of Islam with the liberating truth of the gospel. We must do all in our power to show Muslims that the highest prophet described in the Koran is not Mohammed, but Jesus Christ. And that He is not only the greatest prophet, but the Son of God Himself who died and resurrected in order that millions of Muslims may be saved.

10/40 Window Facts: Projected populations by the year 2000 AD: 1.1 billion Muslims; 1.0 billion Hindus; and 600 million Buddhists.

Overwhelmed with poverty and ravaged by disease, India is victimized even more severely by the spiritual blindness of Hinduism. To a nation in which fattened cows roam freely among emaciated humans, we must proclaim the truth that Jesus came to give us life, and give it abundantly.

Although officially an atheistic country since the Marxist revolution of the late 1940s, China is nevertheless influenced deeply by its Buddhist roots. Some scholars, in fact, consider China's true religion to be combination of atheism and Buddhism. In actuality, religion in China is a hodgepodge which includes folklore, mysticism, animism, and occult practices. Regardless of how one may assess the situation, the fact remains that 1.2 billion Chinese are in desperate need of Jesus Christ. They represent the largest identifiable bloc within The 10/40 Window.

A fourth reason we must focus on The 10/40 Window is because the poor are there. Of the poorest of the poor, more than eight out of ten live in The 10/40 Window. On average, they exist on less than $500 per person per year. Although 2.4 billion of these people live within The 10/40 Window, only 8% of all missionaries work among them.

தேவ் | Dev said...

எனக்குத் தெரிஞ்சதை இந்தப் பதிவில்ல போட்டுருக்கேன் பாருங்க
http://chennaicutchery.blogspot.com/2005/12/blog-post_22.html
வாதங்கள் ..விவாதங்கள் கடவுள் விஷயத்தில் உதவாது... சுற்றினால் தான் பூமி.. நம்புனாத் தான் சாமி.. இது தான் நம்ம கட்சி.

tbr.joseph said...

வாங்க தேவ்,

நீங்க சொன்னதுதான் சரி.. இது வறட்டு விவாதம் பண்றவங்களுக்கு புரிஞ்சா சரிதான்.

உங்க பதிவை படித்தேன் தேவ். மிகவும் அருமையான கற்பனை..

வாழ்த்துக்கள்.

arunagiri said...

மதம் என்ற விஷயம் தனிமனித ஆன்ம பலத்திற்கு உதவும் வாழ்வு நெறி. இயேசு கிறித்து நகமும் சதையுமாய் இருந்து தண்ணீரில் நடந்து, சிலுவையில் உயிர் விட்டு, மீண்டும் நகமும் சதையுமாய் உயிர்த்தெழுந்தவர் என்பதை விட இயேசுவின் போதனைகளில்தான் உண்மையான இறைமை உள்ளது என்பது என் கருத்து.

இதைச் சொல்லக் காரணம் உள்ளது. Literal-ஆக மதப் புத்தகங்களையோ, கதைகளையோ நம்புவது, உண்மை அர்த்தத்தை விட்டு விட்டு அடையாளங்களைப் பிடித்துக்கொண்டு தொங்கும் அபத்தங்களாக மத நம்பிக்கைகள் உருமாற வழிவகுக்கும் என நம்புகிறேன். இந்த literalism பெரும்பான்மை இந்திய கிறித்துவர்களிடம் மிகக்குறைவு என்பதும் என் எண்ணம். "பைபிளிலும் சில இடங்களில் இது போன்ற அறிக்கைகள் உள்ளன.. இல்லையென்று சொல்ல வரவில்லை.. ஆனால் அது எந்த நோக்கத்தில், யாரைப் பற்றி சொன்னதாக வருகின்றன என்று புரிந்துக் கொள்ளாமல் இவரைப் போன்றவர்கள் அவற்றை சான்றாக எடுத்துக் காட்டி போதிப்பதுதான் வேதனை.." என்ற உங்கள் கருத்து அதனை உறுதி செய்வதகவே உள்ளது. ஆனால் மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில், literalismதான் இன்று கிறித்துவம்.

வேறு விதமாகச் சொல்லப்போனால், நாளையே இயேசு நீரில் நடக்கவில்லையென்றோ, சிலுவையில் இறந்து உயிர்த்தெழவில்லை என்றோ (ஒரு பேச்சுக்கு) முடிவானாலும்கூட, பெரும்பான்மை இந்திய கிறித்துவர்கள் "so what" என்று சொல்லி விட்டு வழக்கம்போல் church-க்குப் போவார்கள், அவர்களது நம்பிக்கை இதனால் மரித்து விடாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நம் நாட்டில் abstract-ஆக இறையைக் காணும் மரபு பண்டைக்காலம் தொட்டு உண்டு. இதனால்தான் நதியிலும், மரத்திலும், மலையிலும் கடவுளைக் காண முடிந்தது; வாடிய பயிரைக்கண்ட போதும் வாட முடிந்தது.

ஆனால், இப்படி ஒரு கண்டுபிடிப்பு நடந்தால் அமெரிக்காவில் அது ஒரு பெரும் கிளர்ச்சியையே ஏற்படுத்தி விடும். இந்தக்கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் பெரும் தொல்லைக்குள்ளாவார்கள் என்பது உறுதி. இதனால்தான் பரிணாமம் என்பது அமெரிக்காவில் இன்றும் மிகக் கடுமையாக மதவாதிகளால் எதிர்க்கப்படுகிறது- பல மாநிலங்களில் பள்ளிகளில் பரிணாமம் கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்த புதிதில் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய விஷயம் இது. ஏனெனில் இந்தியாவில் எந்த கிறித்துவரும் பரிணாமத்தையும் பைபிளையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பிக்கொண்டு நான் பார்த்ததில்லை. இதனால்தான் விங்யானத்தில் முன்னேறிய அமெரிக்காவில் பரிணாமத்துக்குத் தடை; "மூட நம்பிக்கை" நிறைந்த நம் நாட்டில் அப்படி இல்லை! மிகச்சாதாரணமாக நீங்கள் எழுதி விட்ட "பைபிள் கூறப்பட்டுள்ளவை யாவுமே கடவுளின் வார்த்தையென்று பொருள்கொள்வது கடினம்.." என்ற உங்கள் கருத்து இங்கே blasphemy-யாகவே பார்க்கப்படும்.

Retrogressive or progressive religion என்றெல்லாம் மதத்தினைப் பெயர் சூட்டுவதும் வகைப்படுத்துவதும் அர்த்தமற்றது என்பதனை மேற்கூறிய உதாரணமே புலப்படுத்தும். இந்தோனேசியா மற்றும் சவுதி அரேபியா இரண்டுக்குமே இஸ்லாம்தான் மதம்; நபிதான் இறைதூதர்; அல்லாதான் கடவுள்; குர்-ஆன்தான் புனித நூல்; ஆனாலும் இரு நாடுகளும் கடைப்பிடிக்கும் இஸ்லாத்தில் எத்தனை வேறுபாடு! இதனை retrogressive-ஆ progressive-ஆ எப்படி வகைப்படுத்துவீர்கள்?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நாளையே இயேசு நீரில் நடக்கவில்லையென்றோ, சிலுவையில் இறந்து
உயிர்த்தெழவில்லை என்றோ (ஒரு பேச்சுக்கு) முடிவானாலும்கூட, பெரும்பான்மை இந்திய கிறித்துவர்கள் "so what" என்று சொல்லி விட்டு வழக்கம்போல் church-க்குப் போவார்கள், அவர்களது நம்பிக்கை இதனால் மரித்து விடாது என்றே நினைக்கிறேன்.//

உண்மைதான். இந்திய கிறிஸ்துவர்களுடைய மத நம்பிக்கை ஆழமானது. மதத்தை அளவுக்கு மீறி ஆராய்வதில் அர்த்தமில்லை என்பதை நன்றாகவே உணர்ந்தவர்கள். இதில் வேறொன்றையும் கவனிக்கவேண்டும். இந்திய கிறிஸ்துவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில், பல தலைமுறைகளுக்கு முன்னர், இந்துக்களாய் இருந்தவர்கள்தானே. ஆகவே நீங்கள் கூறுவதுபோலவே நம்மால் ஒரு மரத்தையோ, பசுமாட்டையோ நம்பிக்கையுடன் தொழமுடியுமென்றால்....இதனை retrogressive-ஆ progressive-ஆ எப்படி வகைப்படுத்துவீர்கள்?//

கஷ்டம்தான்.

arunagiri said...

"இந்திய கிறிஸ்துவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில், பல தலைமுறைகளுக்கு முன்னர், இந்துக்களாய் இருந்தவர்கள்தானே".

இதனால்தான் பிரிட்டிஷ் அரசு இந்திய கிறித்துவர்களையும் இந்திய முஸ்லீம்களையும் "Hindoo Christians" "Hindoo muslims" என்றே தனியாக வகைப்படுத்தியது. பாரதியும் அப்படியே தனது கட்டுரைகளில் எழுதினார், இம்மண்ணைச் சார்ந்தவர் என்ற கருத்து வெளிவரும் வகையில்.

sivagnanamji(#16342789) said...

tbj, enquire at seethakkadhi centre.
a standard authenticated tamil translation was sold in the book exibition

Post a Comment