Thursday, January 19, 2006

பைபிளைப் பற்றி ஒரு முன்னுரை

கிறீஸ்துவ மதத்தின் சாராம்சம்: உன்னைப் போல் உன் எதிரியையும் நேசி என்பதுதான்.

ஏசு கிறீஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலங்களில் அவர் இஸ்ராயேல் மக்களுக்கு, குறிப்பாக யூத இனத்தை சார்ந்தவர்களுக்கு கூறிய போதனைகள், அவர் தன் இனத்தைச் சார்ந்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு, அவருடன் அவருடைய பணியில் பங்கு கொண்டிருந்த பண்ணிரு சீடர்களில் ஒருவராலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, கசையடி பட்டு, சிலுவை சுமந்து, இரு கள்வர்களிடையில் சிலுவையில் தொங்க விடப்பட்டு, மரித்த மூன்றாம் நாள் உயிருடன் உயிர்த்தெழுந்து அவருடைய சீடர்களுக்கு பலமுறை தோன்றி, நாற்பது நாட்கள் கழித்து விண்ணகம் சென்றதை அடங்கியதுதான் பைபிள்.

கிறீஸ்துவர்கள் பார்வையில் இப்புத்தகம் 'நற்செய்தி'என்றும் அழைக்கப் படுகிறது. அதாவது இறைவன் தன் ஒரே மகனாகிய இயேசு கிறீஸ்துவை தன் மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கவே அனுப்பினார் என்பது கிறீஸ்துவர்களின் நம்பிக்கை.

குறிப்பு: இது நான் டிசம்பர் மாதம் பதிந்த இடுகையின் மறுபதிப்பு.

அன்புடன்,
டிபிஆர்.

62 comments:

G.Ragavan said...

ஆகா! ஜோசப் சார். தொடங்கீட்டீங்க. ரொம்ப சந்தோசம்.

// உன்னைப் போல் உன் எதிரியையும் நேசி என்பதுதான். //

என்ன அற்புதமான கருத்து சார். இதுதான் இன்றைக்குத் தேவையானது. அன்பு வாழ வைக்கும் என்று எல்லாரும் உணர வேண்டும். அதற்கு உங்களது இந்தப் பணி காரணமாக இருக்கட்டும்.

Vetrivel said...

Just have a look at this before you start reeling out all your bible fables:

http://www.medmalexperts.com/POCM/getting_started_pocm.html

tbr.joseph said...

வாங்க வெட்றிவேல்,

I still do not know why you gave me this address.

Most of what is stated in the site is nothing but pure rubbish.

Religion is one thing which we don't look with our brain, but with our heart.

What you believe is something which you may not understand.

The college degrees we earn in this world would not be enough to see thro' God and his teachings, which ever religion we belong to!

So long as we remember this we would be happy and peaceful in our life.

நிலா said...

Joseph,

I have lots of questions on this topic. Keen on the series

ஜோ / Joe said...

ஜோசப் சார்,

//உன்னைப் போல் உன் எதிரியையும் நேசி என்பதுதான்.//

இதை இயேசு சொல்ல மட்டும் செய்யவில்லை .செய்தும் காட்டினார்.

தன் உயிர் பிரியுமுன் தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக அவர் இறைவனிடம் மன்றாடுகிறார் "தந்தையே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் ..இவர்களை மன்னியும்".

tbr.joseph said...

வாங்க நிலா,

உங்களுடைய எந்த வித கேள்வியானாலும் எனக்கு தெரிஞ்ச வரை பதிலளிக்கிறேன்..

tbr.joseph said...

வாங்க ஜோ,

நீங்க சொன்னது நூத்துல ஒரு வார்த்தை..

ஆனால் நாம் எந்த அளவுக்கு அதை கடைபிடிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது பிரச்சினையே..

நம்மால் முடிந்த வரை இதை செய்ய முடிந்தால் போதும்..

குமரன் (Kumaran) said...

ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் மேலும் படிக்க.

சிறில் அலெக்ஸ் said...

பைபிள் பத்தி புதுசா சொல்லுறதுக்கு என்ன இருக்கு? அதை மத புத்தகமா பார்க்காம ஒரு சாதாரண புத்தகமாக வாசித்துப்பாக்க வழி செய்யலாம். உங்கள்முயற்சி அதை நோக்கி இருந்தால் நல்லது. 'இயேசு சொன்ன கதைகள்' என்ற பதிவைத்துவங்கலாம் என்றிருந்தேன். உங்கள் முயற்சிக்கு வழ்த்துக்கள்.

இராமநாதன் said...

ஜோசஃப் சார்,
வாழ்த்துகள் புது பதிவிற்கு. பைபிளை நான் படித்ததில்லை. உங்கள் மூலம் கொஞ்சமாவது அறிய முடியுமென்று நினைக்கிறேன்.

மற்றபடி சிலர் இங்கு கொடுத்துள்ள சுட்டி போன்ற விஷயத்தை மறந்துவிடுங்கள். எல்லா கடவுள்களை, மதங்களை, நூல்களை பற்றியும் மாற்றுக்கருத்துகள் இருக்கத்தான் செய்யும். அவற்றிற்கு ஒவ்வொன்றாக பதிலளித்துக்கொண்டிருப்பது காலவிரயமே. என்னைப் பொருத்தவரை (நான்) முருகன் (என்று சொல்பவன்) என் நண்பன். என்னைப் பற்றி முற்றிலும் அறிந்தவன். என்னை என்னைப் புரிந்து மட்டுமே ஜட்ஜ் செய்பவன். அவன் கற்பனை கதாபாத்திரம் என்று மற்றவர் கூறினாலும், என்னளவில் அவன் ஒரு சிறந்த counsellor மற்றும் guide (நாஸ்தீகர்கள் சொல்வதுபோல் என் மனசாட்சியின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்). அதுவே எனக்கு முக்கியம். அதுபோல அவரவர்க்கு அவரவர்களின் இஷ்ட தெய்வம். அது ஜீசஸாகட்டும், அல்லாவாகட்டும், ருத்ரனாகாட்டும்.

இத்தகைய personal-ஆன விஷயங்களுக்கு, அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காதவரைக்கும், விளக்கம் கொடுக்க வேண்டிய எந்த அவசியமுமில்லை என்பதே என் கருத்து.

எல்லாம் தெரிந்தவர் போல் சுட்டிகளை அள்ளிக் கொடுக்கும் ஆசான்களுக்கென்றே ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்..

He, the first Origin of this creation, whether he formed it all or did not form it, Whose eye controls this world in highest heaven, he verily knows it, or perhaps he knows not.

சிந்தித்துப் பார்த்தால் அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும். இதுவே நம்மைப் பொருத்தவரை உண்மை. அதாவது நமக்கு முற்றிலுமாக எல்லா விடயங்களும் தெரியாது. அது சாத்தியமுமில்லை. ஏனென்றால் அவனொருவனே உண்மையை அறிவான்.

குமரன் (Kumaran) said...

இராமநாதன்,

என்ன இப்படி பாடிக்கிட்டு இருக்கீங்களா?

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்...

பொருத்தமான எடுத்துக் காட்டு ரிக்வேதத்திலிருந்து. இராகவனைக் காணோம் அருணகிரி என்ன சொன்னார்ன்னு சொல்றதுக்கு... :-)

இராமநாதன் said...

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே!

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே.

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 15

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46

அப்படீன்னு எனக்குத் தெரிஞ்சவரக்கும் கந்தர் அனுபூதியில் சொல்லிருக்கார். இராகவன் தான் இதுக்கெல்லாம் சுப்ரீம் கோர்ட்.

இராமநாதன் said...

அருணகிரி சொன்னதும் ஜோசஃப் சார் சொல்றதும் ஒண்றாகவே இருப்பதாக படுகின்றது.

கொண்டோடி said...

//கிறீஸ்துவ மதத்தின் சாராம்சம்: உன்னைப் போல் உன் எதிரியையும் நேசி என்பதுதான்.//


"அயலானையும்" என்றல்லவா கேள்விப்பட்டேன்.
;-)

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பர் ஜோஸப்,

இப்புதிய பதிவு ஒரு சிலருக்கேனும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.
"பிறரையும் தன்னைப் போல் நேசி" என்பதும் "//உன்னைப் போல் உன் எதிரியையும் நேசி என்பதுதான்.//" என்பதும் ஒன்றுதான்.

இறைவன் ஏகன். நாமங்கள் வேறு வேறு. இனிப்பு எனும் சுவை ஒன்று; அதுதான் லட்டு, ஜாங்கிரி, பொங்கல் எனும் உருவத்தில் உள்ளே செல்கிறது.

ஆறுகள் பலவாயினும் சேருமிடம் ஆழிதான்.

தொடர்க! வாழ்க!

G.Ragavan said...

இராமநாதன், சொல்றதெல்லாம் சொல்லீட்டு கடைசீல என்னைய சுப்ரீம் கோர்ட்டுன்னு வேற சொல்லீட்டீங்க. சுப்ரீம் கோர்ட்டு அருணகிரி. நான் district magistrate.

நான் இந்தப் பதிவை ஜோசப் சாரிடம் கேட்டதற்குக் காரணம் தெரிந்து கொள்வதே. பைபிளைப் படித்ததில்லை. அது சொல்லும் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் தமிழ்க் கருத்துகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் மட்டுமே. வேறெந்த உள்நோக்கமும் இல்லை.

டாவின்சி கிரெயில் என்பது ஒரு fiction book பற்றிய பதிவு. படித்த புத்தகம். அது தொடர்பாகத் தேடுகையில் கிடைத்த ஒரு விஷயத்தைப் பதிவாகப் போட்டேன். அவ்வளவே. இன்னும் சொல்லப் போனால் அந்த புக்கைப் படித்த பிறகுதான் எனக்கு ஏசுவின் மீதும் ஈடுபாடு வந்தது.

ஜோ / Joe said...

ராகவன்,
இணையத்தில் பைபிள் தமிழில் ஆன்லைலில் இருக்கிறது..தேவையெனில் படிக்கவும்

http://www.tamilbible.com

tbr.joseph said...

வாங்க குமரன்,

உங்க ஆவல் வீண்போகாது என்று நம்புகிறேன். வாரம் மூன்று நாட்கள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க சிறில்,

பைபிள் பத்தி புதுசா சொல்லுறதுக்கு என்ன இருக்கு? //

நிச்சயமா இல்லை.

அதை மத புத்தகமா பார்க்காம ஒரு சாதாரண புத்தகமாக வாசித்துப்பாக்க வழி செய்யலாம். //

ஒரு புத்தகத்தை சாதாராண புத்தகமாகவோ அல்லது புனித புத்தகமாகவோ பார்ப்பது அவரவருடைய மனதைப் பொறுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் என்னுடைய பாணியில் பைபிளில் கூறுவதை திரித்துக் கூறாமல், சாராம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு எனக்கு தோன்றியதை எழுதுவதுதான் என் நோக்கம்.

நான் கூறப்போவது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்றில்லை..

யார் வேண்டுமானாலும் மறுத்துக் கூறலாம்.

tbr.joseph said...

He, the first Origin of this creation, whether he formed it all or did not form it, Whose eye controls this world in highest heaven, he verily knows it, or perhaps he knows not.

ஏனென்றால் அவனொருவனே உண்மையை அறிவான். //

சூப்பர்ப் இராமநாதன்..

எனக்கு மதத்தில் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்களுக்கு ஏற்ற எடுத்துக்காட்டு..

மதங்களில் எனக்கு நம்பிக்கையிருக்கிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை.. நான் கடவுளை, பரமாத்மாவை, என்னைப் படைத்த இறைவனை நான் நம்புகிறேனா என்பதுதான் கேள்வி. என்னுடைய பதில். ஆம், நிச்சயமாய் நம்புகிறேன்..

எனக்கு மேலே என்னை ஆட்டிப்படைக்கும் சக்தி உண்டு என்பதை முழுமையாய் விவாதத்திற்கு இடமின்றி நம்புகிறேன், விசுவசிக்கிறேன்..

நான் எந்த மதத்தைச் சார்ந்தவனானாலும் இறைவன் ஒன்றுதான் என்பதையும் முழுமையாய் விசுவசிக்கிறேன்..

இதை ஒத்துக் கொள்ளாதவர்களிடம் தர்க்கிப்பதில் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை.. and I don't normally get upset when I go thro' such statements.. maybe I was little emotional when I saw the site suggested by vetrivel. When I went thro' my response to his comments I felt sorry.

tbr.joseph said...

குமரன்,

இராமநாதன் is multitalented personality. அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி..

இந்த பதிவுக்கு பேரு மட்டும்தான் என் பைபிள்.. இதுல யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் எழுதலாம், பாடலாம்.. அது பிறருடைய மனதை புண்படுத்தாதவரை..

Samudra said...

//உன்னைப் போல் உன் எதிரியையும் நேசி என்பதுதான்.//

Those who see all creatures in themselves

And themselves in all creatures know no grief.

How can the multiplicity of life
Delude the one who sees its unity?

- isa

tbr.joseph said...

வாங்க கொண்டோடி (உங்க பேருக்கு என்ன அர்த்தங்க?)

"அயலானையும்" என்றல்லவா கேள்விப்பட்டேன்.//


நீங்க சொல்றது literal meaning. நான் சொன்னது என்னுடைய interpretation.

tbr.joseph said...

வாங்க ஞானவெட்டியான்,

ஆறுகள் பலவாயினும் சேருமிடம் ஆழிதான்.//

நூத்துல ஒரு வார்த்தைங்க.. 'சம்மதம்'கற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன் என்றுதானே. அதுல இருக்கற 'மதம்'கற சொல்லும் அதுபோல்தான்..

மதங்களின் பெயர்கள் எல்லாம் மனிதர்களின் படைப்பு..

ஆனால் இறைவனை வழிபடவேண்டும் என்பதுதான் என் குறிக்கோள்.. எல்லா மதத்தினரின் குறிக்கோளும்..

tbr.joseph said...

வாங்க சமுத்ரா,

How can the multiplicity of life
Delude the one who sees its unity?//

You are absolutely right.

பரஞ்சோதி said...

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தலைப்பு.

நீங்க தொடங்கியமைக்கு நன்றி அண்ணா.

பைபிள் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும், அதுக்காகவே ஞாயிறு வகுப்புகளுக்கு சென்றதுண்டு.

தொடர்ந்து கொடுங்க.

tbr.joseph said...

நான் இந்தப் பதிவை ஜோசப் சாரிடம் கேட்டதற்குக் காரணம் தெரிந்து கொள்வதே. பைபிளைப் படித்ததில்லை. அது சொல்லும் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் தமிழ்க் கருத்துகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவும் மட்டுமே. வேறெந்த உள்நோக்கமும் இல்லை.//

சரியாய் சொன்னீர்கள் ராகவன், என்னுடைய நோக்கமும் அது மட்டுமே..

நான் என்னுடைய மதத்தைப் பற்றி மட்டும் அறிந்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பிற மதங்களும் இறைவனைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதை அறிந்து கொள்ள ஆசைப் படுகிறவன்..

நீங்களும், இராமநாதனும், குமரனும் எழுதிய, எழுதுகின்ற இறைவனைப் பற்றிய பல பதிவுகளையும் மிகவும் ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.. என்னவென்று பின்னூட்டம் போடுவதென தெரியாமல் விட்டிருக்கிறேன்.. அவ்வளவுதான்..

tbr.joseph said...

வாங்க பரஞ்சோதி தம்பி,

நீங்க பைபிள் வகுப்புகள்ல படிச்சா மாதிரி இதுல நான் எழுதப் போறேனான்னு தெரியலை..

ஏன்னா நான் பைபிள்ல எக்ஸ்பர்ட்டுன்னு இல்லை..

ramachandranusha said...

ஜோசப் சார்,
ராகவன் சொன்னதை வழி மொழிந்துவிட்டுக் கேட்கிறேன்.
டாவின்சிகோர்ட் புதினத்தைப் படித்தப்பொழுது, ஒரு சின்ன கெட்டுகெதரில் கிறிஸ்துவ தோழிகளிடம் சில கேள்விகளைக் கேட்டேன்.
ஒருத்தி, பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண் உண்டு, புதிய ஏற்பாடு திருத்தப்பட்டு, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னம் காட்டு என்று இருக்கும். இயேசுநாதரை
கடவுளாய் சித்தரித்தது புதிய ஏற்பாடு என்றாள். ப.ஏ பல ஞானிகள், அதில் ஏசுவும் ஒருவர். கொஞ்சம் தயக்கமாய் சொன்னதால், மேற்கொண்டு கேள்வி கேட்க தயக்கமாய் இருந்தது.
எந்த மதத்தைப் பற்றிய பேச்சு என்றாலும், இது ஒன்றே உண்மையான மதம் என்ற மெய்சிலிர்ப்போ அல்லது வாய்க்கு வந்த அவதூறு சொல்வது மட்டுமே நான் பார்த்தது.
மதங்களிலும், கடவுள்களாய் சித்தரிக்கப்படுவதிலும் எனக்கு எள்ளளவு நம்பிக்கையும் இல்லை. ஆனால் கடவுளர்கள், (இந்தக்காலத்தினரை சொல்லவில்லை, ) மக்களை நல்வழிப்படுத்த படாதப் பாடு பட்டிருக்கிறார்கள். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று காந்தி
சொன்னதைப் போலவும் ஆல்மைட்டி, காட் என்றாலும் ஓரே பொருள்தான். அதன் பொருளை நான் படைப்பில், இயற்கையில் காண்கிறேன்.
செல்ல வேண்டிய இடத்திற்கு வேறு வேறு பாதைகள் போடப்பட்டுள்ளன. என் பாதை உயர்ந்தது, அவனுடையது மட்டமானது
என்று எள்ளி நகையாவது தவறு என்பது என் எண்ணம்.
என் கேள்விகள் உங்களுக்கும் ஏதாவது சங்கடத்தை எழுப்பினால், மன்னிக்கவும்.

Anonymous said...

மாசுகோ தம்பி இராமநாதன் மற்றும் என்னை எதிர்த்து இங்கே பின்னூட்டமிட்ட இதர பாகன்மார்க்கும் வெற்றிவேல் விண்ணப்பித்துக் கொள்வது:

நீங்க சொன்னமாரி ஏகம்சத்துனு இருக்குவேதம் சொல்லுவது, யாவரும் கேளிர்னு சங்கப்புலவர் சொல்லுவது எல்லாம் நம்மளைப் போல பாகன்களுக்கு மட்டுமே அப்ளிகபிள் தம்பிங்களா.

நீங்க எல்லாப்பாதையும் இறைவனை நோக்கியே அப்படின்னு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டிருந்தாலும் கிறித்துவருங்க அப்படிச் சொல்ல மாட்டாங்கக. சொல்ல முடியாது. ஏன்னாக்கா ஏசுவே ஒரே வழி. சொர்க்கத்துக்கு இவங்க கிட்டதான் தனி பாஸ்போர்ட் இருக்குது.

அந்த ரூட்பஸ்ஸை மிஸ் பண்ணிட்டன்ன நரகந்தான். அதுவும் எப்படி? நிரந்தர நரகம்.

அப்படி நம்பிக்கை வைக்கிலன்னா நீ கிறுத்துவனே இல்ல.

இத ஜோஸப் சாரோ மில்டன் தம்பியோ நேராச் சொல்ல மாட்டாங்க. தருமிசார் சொல்லலாம். இல்லாட்டி தெரிஞ்ச பாதிரியைக் கேட்டுப் பாருங்க.

இதை அடிப்படையா வெச்சுத்தான் இவனுங்க ஒவ்வொரு நாடா சொவ்ல் ஹர்வெஸ்டிங் நடத்திக்கிட்டிருக்காங்க.

நிறைய எழுதலாம். ஜோஸப் சாரையோ, ஜோமில்டனை மாதிரி நல்ல மனிதரையோ புண்படுத்த வேண்டாமின்னு நிப்பாட்டுறன்.

மேலும் விளக்கம் வேணுமின்னா இந்த முகவரிக்கு மயில் அனுப்புங்க:
vetrivelsaravanan@yahoo.com

ஆனா இத மட்டும் படிச்சுறுங்க:

WHY I AM NOT A CHRISTIAN

I am not a Christian, because Christianity is based on
the Bible, and I find the Bible to be anything but the
Word of God. If a book really were inspired by God, it
would be intelligible, consistent, and moral, and not
the muddled, contradictory, immoral mess the Bible is.


Here's a very basic contradiction:

The Bible emphatically claims the end is near. "The
end of all things is at hand" (1 Pet 4:7), "the time
is near" (Rev. 1:3), "the time is short" (1 Cor 7:29),
"in these last days" (Heb 1:2), "watch therefore" (Mt
25:13), "he will not tarry" (Heb 10:37), "I come
quickly" (Rev. 22:20).

Is it not abundantly clear that the Bible writers
expected the world to end in their generation? But
it?s 2,000 years later; the world continues. Clearly
the Bible was wrong; the end was not near. The Bible
did not speak the truth.

But Christians have no problem rationalizing away the
very plain meaning of the passages I cited.

If God wrote a book, it would not contradict known
scientific facts:
Rabbits do not chew the cud, camels do not have
undivided hooves, ostriches are not cruel parents, and
the earth is not flat, held up by pillars. (Lev 11:6,
11:4, Job 39:13-16, 1 Sam 2:8).

If Biblical writers are inspired to make such
blundering errors about physical reality, why should
we trust their claims about spiritual reality?

A God-inspired book would teach that men and women,
though different, are equal in value, with equal
rights. The Bible does not teach that:

Lev 27:3-5 values a man at 50 shekels, a woman at 30.

Genesis 3:16 establishes the woman?s role as
subordinate. "And thy desire shall be unto thy husband
and he shall rule over thee."

If God wrote a book, its teachings on divorce and
remarriage would be consistent and humane, not
contradictory and oppressively judgmental. In 2 Sam
5:13, divorce is OK. In Mk 10:11, it?s not. In Mt
19:9, it?s not, except for sexual immorality. Where is
the consistency? This is divine guidance? I don?t
think so.

I know people who have found happiness in a good
second marriage. I?m happy for them. But Jesus brands
them as adulterers. (Mk 10:11)

A real book of God would not present obviously
mythological stories as literal truth, such as the
Noah?s ark story. Nor would these stories include
malignant lessons such as: every human being on the
planet, with the exception of Noah?s family, deserved
to drown, and animal suffering on a massive scale is
irrelevant.

Myths teach lessons. Those are horrible and false
lessons.

A real book of God would not contain prophecies that
failed:

According to the Bible, Hazor and Tyre were supposed
to be destroyed and put out of existence (Jer 49:33,
Ezk 26:21), but they are easily found in any atlas.
They continue to exist.

Nor would a real book of God claim fulfillments for
prophecies which were clearly talking about unrelated
events:

The virgin birth prophecy (Isa 7:14): Jesus?s birth
could not be a sign to King Ahaz, as the prophecy
claimed it would be, because Jesus wasn?t born until
hundreds of years after King Ahaz died!

The Bethlehem prophecy (Mic 5:2-6): the messiah in
question here was supposed to deliver the Jews from
the Assyrians. Jesus had nothing to do with the
Assyrians.

The Judas betrayal prophecy (Ps 41:4-9): the speaker
calls himself a sinner, so this passage cannot be
referring to Jesus, who is supposed to be a sinless
person.

These are not predictions miraculously fulfilled; they
are simply correlations deliberately drawn by the
writers. The New Testament writers just pull out what
they want from the Old Testament, point out
similarities, and allege there is an overall divine,
prophetic pattern to it.

The fact that many of their claimed fulfillments do
not match the original predictions accurately, betrays
their subjectivity, and shows them to be rank
propagandists. A liberal minister I talked to, who is
not impressed with Biblical prophecy, put it best. He
said, "Yeah, well, we could write it that way too, if
we wanted to, couldn?t we?"

Exactly.

A book of God wouldn?t favor one group of people over
all others. "The Lord hath chosen thee to be a special
people above all people that are on the face of the
earth. (Dt. 7:6) There?s your basic recipe for war ?
people thinking they?re special to God, with God-given
rights over other people and their land.

Question: Is the spiritual more important than the
physical? "Oh, absolutely," the Christian would
respond. Then, I would ask the Christian: Why does
your God say in Leviticus 21:16-23, that physically
handicapped people "must not? approach the altar, and
so desecrate My sanctuary."?

That?s not God talking. That?s stupid humans talking.
The real God judges people by their behavior, by their
character, not their physical defects.

Slavery is a categorical evil, yet the Bible supports
it. It tells slaves to obey their masters "in all
things" (Titus 2:9), "just as you would obey Christ"
(Ephesians 6:5). Does that sound like good advice to
you? Is that a message supporting human dignity? The
Bible gives the Hebrews permission to buy slaves, and
to keep their children as possessions. (Lev 25:44-46)
Are human beings property? The Bible values the life
of a slave as less than the life of a free man.
(Exodus 21:29-32) Would the real God teach such a
thing? Of course not.

Any book that supports the institution of slavery is
morally bankrupt.

A real book of God would not preach hatred toward gay
people, calling their relationships an "abomination",
and prescribing the death penalty for them in the Old
Testament. (Lev 20:13)

That kind of intolerance, for people who are simply
different from the majority, in a morally neutral
aspect, is an indication, not of God?s morality, but
of people?s bigotry.

"Happy shall he be that taketh and dasheth thy little
ones against the stones." (Ps 137:9)

"Put to death men and women, children and infants,
cattle and sheep." (1 Samn 15:3)

"God said to the others, Follow him through the city
and kill, without showing pity or compassion.
Slaughter old men, young men and maidens, women and
children." (Ezekiel 9:5-6)

"Behold, I will corrupt your seed and spread dung upon
your faces." (Malachi 2:3) That?s the Biblical God
speaking!

Here?s Moses speaking?"Now therefore kill every male
among the little ones, and kill every woman who has
known a man intimately. But keep alive for yourselves
all the young girls who have not known a man
intimately." (Numbers 31:17-18)

Is this the morality of the real God? ? Or of
barbarians claiming to speak for God?

A book of God would not hold people responsible for
the sins of someone else. (2 Kg 5:27) In fact,
Christian theology (original sin and the atonement) is
based on this same cockeyed concept of guilt: We are
responsible for Adam?s sin, and we are redeemed by
Jesus?s death. (Rom 5:19) That is morally and
theologically ridiculous. I have nothing to do with
what an alleged Adam did thousands of years ago. And
Jesus could die a thousand deaths and that would not
mitigate whatsoever the responsibility I have for any
crimes I commit.

Everyone is responsible for their own actions. That?s
what a real book of God would teach.

Guilt mongering, and then offering third-party
redemption, is but a control technique for one group
of people over another.

A real book of God would provide a better answer to
the problem of evil than the Book of Job, which answer
amounts to, "You have no right to ask, you puny
human."

It would not hold up an atrocious character such as
David as a man after God?s heart. (Acts 13:22) David
was a voyeur, an adulterer, a murderer.

Cal Thomas, a conservative Christian columnist, wrote
an article praising David?s righteous repentance
compared to President Clinton?s waffling repentance.

First of all, Clinton never murdered somebody, as
David did.

And secondly, Clinton?s sexual ethics that so outrage
Christians, were standard operating procedure for
David: 2 Sam 5:13 "And David took more concubines and
wives from Jerusalem." Somehow, for conservative
Christians, Clinton is dirt, but David and Solomon
with their numerous wives and concubines, are
righteous.

A real book of God would not regard obedience as a
greater virtue than understanding. Obedience is not an
intrinsic virtue, as Genesis would have us believe.
Obedience to what?! That?s the question. The world is
full of ideologies and alleged Gods demanding people?s
allegiance. The key is using discernment to decide
which God or ideology is worthy of that allegiance.

Nor would a real book of God regard belief as a
greater virtue than good behavior. It?s easy to
believe. It?s hard to behave well consistently. Nor
would it value simple-minded credulity so highly. (Jn
20:29) "Blessed are those who have not seen yet
believe." I say blessed are those who use reason,
compassion, and good judgment ot make decisions, not
blssed are those prone to sheep-like behavior.

A real book of God would have a mature understanding
of forgiveness and not demand the killing of an animal
(!), or a blood sacrifice. That is such a primitive
concept! The very essence of Christian theology ?
Jesus being killed for our sins ? is just so
spiritually primitive and obtuse.

People need to grow up. A power so great and awesome
as God is not going to have the small-minded,
egotistical, barbaric mind-set of the Biblical God.

A real book of God would have a spokesperson teaching
realistic ethics, and not Jesus making utopian
statements, advising people to forgive endlessly, to
take no thought for the morrow, and not to resist
evil. (Mt 18:22, Mt 6:26-34, Mt 5:39-42)

If you think I?m misunderstanding Jesus, foolishly
misinterpreting these passages, that that?s not what
Jesus meant, I say I am in fact interpreting these
passages properly. You are distorting them, forcing
them to make sense, even though, as written, they do
not make sense? because you presuppose Jesus would
only teach sensible things.

The trouble with Christian hermeneutics is that they
presuppose sensibleness and divine wisdom, and a
verdict of nonsense is a priori prohibited. The
Christian always asks, "How do we make sense of this
passage?" He never asks, "Does this passage make
sense?" But the honest meaning of a passage is what
the words actually say and what the writer intended,
not what you?d like it to mean, or what you think
ought to be there, or what would make sense if the
words were a little different.

A real book of God would inspire us to work for the
ideals of humanity, rather than to trust in wishful
thinking and the efficacy of prayer. In Mt 17:20 Jesus
says "And all things, whatever you ask in prayer,
believing, you will receive." That?s not true. That?s
not reality. That?s not how the real God works.

Jesus is just selling dreams.

A real book of God would never, ever teach a concept
such as Hell, a place or state of eternal, ongoing,
punishing, for only one lifetime of evil, never mind
just because a person won?t believe screwy theology.

Jesus says in John 3:18 "He who does not believe is
condemned already." He says in Mt 25:41 "Depart from
me, you cursed into the everlasting fire."

Hell is the single worst and most immoral doctrine of
Christianity. It is the greatest failing of Jesus as
an alleged spokesperson for God. A God who allows the
Holocaust of WWII is a God that makes one think, and
question, and doubt, and search for faith. But a God
who has a Hell is clearly, obviously, unambiguously, a
monstrously cruel God, not a loving God.

What is wrong with the Christian brain that you cannot
understand this simple logic? A God who tortures any
creature FOREVER, is not a loving God!

I believe in a God of ultimate justice. Eternal
annihilation for evil people makes sense to me. But
Hell does not. In no way is that a rational God, a
just God, or a loving God.

A real book of God would reveal a God of compassion,
understanding, and justice, not the egotistical,
jealous, vengeful character we find in the Bible. (Ex
20:5, Nahum 1:2, Zephaniah 3:8)

The essence of its God would be reason and compassion,
not egotism and a desire to dominate and control.
Those are characteristics that reflect a man-made God.

In short, if God wrote a book, you can be damn sure
the Bible ain?t it.

I think the real God speaks to us through common sense
and a good heart, and can only be deeply dishonored by
a book like the Bible?

And, if you are a Christian and you?re thinking, "Oh,
he?s taking a lot of those quotes out of context." ? I
have no respect for you. None at all. Unless you write
to me and explain what the context is which changes
the very plain meaning of those quotes. Any Christian
who uses that horse-manure "out of context" defense,
without making the effort to explain how the context
invalidates my statements, is a person without
integrity.

I am a theist. A 95% theist, a 5% agnostic. I have a
little doubt about God, because there is so much
natural evil in the world, and because, try as we
might, we humans cannot know there is a God. We cannot
get tangible evidence or proof. We can only be
convinced by the weight of reason and plausible
interpretations of the world we find ourselves in, and
we must live by a faith in God rather than a knowledge
of God.

But, if there is a God, as I believe there is, I have
no doubt, not one iota of doubt that He is ashamed of
Christians for the nonsense they believe to come from
Him.

I am a modern theist.

Barbarians from thousands of years ago are not going
to dictate to me what God is like. I have too much
respect for the Real God.

By Miklos Jako

tbr.joseph said...

வாங்க உஷா,

நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம் உஷா.

நிச்சயம் விசனப்படமாட்டேன்.

நீங்க கேட்டத நீங்க சொல்லப் போறீங்க.. நான் நெனக்கறத நான் சொல்லப் போறேன்..

இதுல வருத்தப் பட என்ன இருக்கு..

tbr.joseph said...

வாங்க வெட்றிவேல்..

நீங்க கஷ்டப்பட்டு முகமூடி போட்டுக்கிட்டு வந்து உங்க ப்ளாக் விலாசத்த தரீங்க..

உங்க பின்னூட்டத்த டெலீட் பண்ணப் போறதில்லை.. ஆனாலும் உங்க கருத்துக்கு நான் இன்னைக்கி மாலைக்குள்ள தனிப் பதிவா என் பதிலை சொல்றேன்..

உங்க கருத்து உங்களுடையது.. அதை மதிக்கிற பக்குவம் எனக்கும் இருக்கு, ஜோவுக்கும் இருக்கு.. இதுல தருமிசார் எங்க வந்தார்னுதான் தெரியலை..

அவரே இதுக்கு பதில் சொல்லட்டும்..

ஜோ / Joe said...

//மில்டன் தம்பியோ நேராச் சொல்ல மாட்டாங்க//
அண்ணா,
மில்டன் தம்பியை மில்டனை விட அதிகமா தெரிஞ்சு வச்சிருபீங்க போல..ம்.நடக்கட்டும்..நடக்கட்டும்

tbr.joseph said...

வெட்றிவேல்..

ஜோ பதில் சொல்லிட்டார்.

பாத்தீங்களா? அவரும் கோபப்படலை..

G.Ragavan said...

// நான் எந்த மதத்தைச் சார்ந்தவனானாலும் இறைவன் ஒன்றுதான் என்பதையும் முழுமையாய் விசுவசிக்கிறேன்..

இதை ஒத்துக் கொள்ளாதவர்களிடம் தர்க்கிப்பதில் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை.. //

ஜோசப் சார். இதை நானும் ஒப்புக் கொள்கிறேன். கடவுள் என்பதைப் பலர் பலவிதமாக வழிபடுகிறார்கள். வழிபடுகின்றவர்களுக்கா வழிபடுகின்ற முறையில் கடவுள் வருவார் என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன். இதற்கு ஏதாவது புத்தகத்தில் வரியைக் காட்டினால்தான் ஒத்துக் கொள்வேன் என்று யாராவது சொன்னால்....வணக்கம் போட வேண்டியதுதான்.

உஷா சொன்னது போல, பழைய புதிய ஏற்பாடுகள் பற்றி விசாரிக்கையில் சரியான முறையில் விடை கிடைக்கவில்லை. அதனால் தொடர்ந்து கேட்கவும் தர்மசங்கடமாக இருந்தது. சரி. அந்தக் கதை இப்பொழுது எதற்கு. நீங்கள்தான் இந்தப் பதிவுகளைத் தொடங்கி விட்டீர்களே.

G.Ragavan said...

// நீங்களும், இராமநாதனும், குமரனும் எழுதிய, எழுதுகின்ற இறைவனைப் பற்றிய பல பதிவுகளையும் மிகவும் ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.. என்னவென்று பின்னூட்டம் போடுவதென தெரியாமல் விட்டிருக்கிறேன்.. அவ்வளவுதான்.. //

ஜோசப் சார். நீங்கள் தயங்கவே வேண்டாம். உங்கள் மனதில் பட்டதை அங்கே கேட்கலாமே. சொல்லலாமே. நானோ, குமரனோ, இராமநாதனோ தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. தர்க்கம் பண்ணுகின்றவர்களும் நமக்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா. தங்களுடையதே சிறந்து என்று நிலைநாட்ட விரும்புவது ஒரு வகை. ஆனால் நாங்கள் மூவரும் எழுதுவதும், ஞானவெட்டியான் எழுதுவதும்....எங்களிடம் இது இருக்கிறது என்று சொல்ல மட்டுமே. உங்களிடம் இருப்பதை நீங்கள் காட்டுங்கள்....என்ற வகையில் மட்டுமே.

பக்கத்து வீட்டில் வடக்கத்தியர் இருந்தால், நாம் சாம்பாரைக் கொடுத்து பாலக் பனீர் வாங்குவது போலத்தான். சாம்பாரே பெரிது...பாலக் பனீர் மட்டம் என்று தர்க்கிக்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆகையால் நாங்கள் ஏதேனும் கருத்திட்டாலும் அது தெளிவு கொள்வதற்கு என்று மட்டுமே கொள்க. அதே போல நீங்களும் உங்கள் கருத்துகளை இடுக.

Vetrivel said...

ஜோஸப் சார்,
நான் கிறித்துவன் இல்ல. கிறித்துவத்த ஏத்துக்காத பாகன் தமிழன். எனக்கு சொர்க்கத்துல இடங்கிடைக்குமா அதமட்டும் முதல்ல கன்பர்ம பண்ணுங்க. மத்தபடி என் கோவம் ஒங்கமாதிரி நல்லவங்க மேல இல்ல. மூலக்கு முல்ல நின்னு பாவிகளே பாவிகளேன்னு கடவுள விக்கறங்களப் பாத்துப் பாத்து உண்டான கோவம் இது.

tbr.joseph said...

வாங்க வெட்றிவேல்..

சொல்ல வந்தத நேரடியா உங்க பேர்லயே சொல்லலாமில்லே.

சரி அது போட்டும்..

உங்க கோபம் நியாயமானதுதான்..

அதுக்கு நான் விளக்கமா பதில் சொல்லலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ள தனி பதிவாவே போடறேன்..

அதுசரி.. சொர்க்கம் என்பதென்ன கிறீஸ்துவங்க inherited propertyஆ?
அதெல்லாம் ஒன்னுமில்லை..

G.Ragavan said...

வெற்றிவேலின் பின்னூட்டத்திலிருந்து ஒரு சிறு கருத்து.

ஒவ்வொரு மதத்தின் மீதும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தலாம். எல்லா மதங்களும் அந்தந்தக் கடவுளை வணங்கினால்தான் பிழைக்க முடியும். இல்லையென்றால் சொர்க்கம் கிடைக்காது. நரகந்தான் என்று சொல்கின்றன.

பொதுவாக நான் அருணகிரியின் பாடல்களில் இந்த மாதிரிப் பார்த்ததில்லை என்றாலும் ஒரு இடத்தில் தடுமாறிப் போனேன். கீழிருக்கும் பதிவைச் சென்று பார்க்க.

http://iniyathu.blogspot.com/2005/11/blog-post.html

கோழிக்கொடியனடி பணியாமல் வாழக் கருதும் மதியிலிகாள்.......இதற்கு எப்படிப் பொருள் கொள்வது.......அதற்காக முருகனை மனதில் நினைத்து கீழக்கண்டவாறு எழுதினேன்.

முருகனடி பணிந்தால்தானா இப்படி? வேறு தெய்வங்களை வணங்குகின்றார்களே அவர்களுக்கு? எல்லா தெய்வங்களும் ஒன்றே. உங்கள் மனதிலுள்ள தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். "கோழிக் கொடியனடி" என்ற சொல்லை மட்டும் எடுத்து விட்டு, உங்கள் மனதிலுள்ள இறைவனடி என்று போட்டுப் பாருங்கள். இதுவரை நான் விளக்கியது மாறாமல் அப்படியே வரும்.

ஆகையால் ஏசு என்றோ அல்லா என்றோ முருகன் என்றோ அம்பாள் என்றோ வருகின்ற இடங்களில் எந்தப் பெயரைப் போட்டுப் படித்தாலும் பொருள் ஒன்றாகத்தான் வரும்.

ஜோ / Joe said...

ராகவன்,
//ஆனால் நாங்கள் மூவரும் எழுதுவதும், ஞானவெட்டியான் எழுதுவதும்....எங்களிடம் இது இருக்கிறது என்று சொல்ல மட்டுமே. உங்களிடம் இருப்பதை நீங்கள் காட்டுங்கள்....என்ற வகையில் மட்டுமே.//

ஏங்க!ஏன் நீங்க என்னையும் சேத்துக்கல்ல? இதெல்லாம் அநியாயம் .

Btw,எனக்கொரு தனி மடல் இட முடியுமா (djmilton at gmail.com)?

tbr.joseph said...

எல்லா தெய்வங்களும் ஒன்றே. உங்கள் மனதிலுள்ள தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். //

ரொம்ப சரி ராகவன். நானும் என்னுடைய பிற மத வாடிக்கையாளர்களின் வீட்டு மற்றும் வர்த்தக விழாக்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது அவர்கள் தீபாரதனை காட்டிவிட்டு தட்டில் கற்பூரத்துடன் என்னிடமும் நீட்டுவார்கள். நான் கர்த்தரை மனதில் நினைத்துக்கொண்டு கண்ணில் ஒற்றிக் கொள்வேன். திருநீற்றை நெற்றியில் இட்டுக் கொள்வேன்.. அதேபோல்தான் இஸ்லாமியம், ஏன் ஜெயின், பஞ்சாபியர், ஃபார்ஸி என எத்தனையோ மத சடங்குகளில் எந்தவித சங்கடங்களும், மனக்குத்தலும் இல்லாமல் கலந்துக் கொண்டிருக்கிறேன்..

தெய்வம் என் மனசில்தான்.. முகத்தில் அல்ல..

ஜோ / Joe said...

// எனக்கு சொர்க்கத்துல இடங்கிடைக்குமா அதமட்டும் முதல்ல கன்பர்ம பண்ணுங்க. மத்தபடி என் கோவம் ஒங்கமாதிரி நல்லவங்க மேல இல்ல. மூலக்கு முல்ல நின்னு பாவிகளே பாவிகளேன்னு கடவுள விக்கறங்களப் பாத்துப் பாத்து உண்டான கோவம் இது. //

வெற்றிவேல் அண்ணே!,
உங்கள சொல்லி குற்றமில்ல .அந்த மாதிரி பாவிகளே-ன்னு சொல்லி உங்கள எரிச்சல் படுத்திருக்காங்க .உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ? சில குறிப்பிட்ட கிறிஸ்தவ சபைக் காரர்கள் ,வேண்டுமென்றே கத்தோலிக்க கிறிஸ்தவர் வீட்டுக்கு முன்னால நின்ணும் இப்படி சொல்லுவாங்க .அவங்கள்ள சில பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் நரகத்துக்கு போவாங்கண்ணு தான் சொல்லுவாங்க .

எனக்கு தெரிஞ்சத நான் சொல்லுறேன் .அண்ணே! கடவுள் ஒண்ணும் ஞானஸ்நானம் வாங்குனவங்கள கணக்கெடுக்குற அக்கவுண்டண்ட் இல்ல .அவர் மனிதர்களை எந்த மதத்துக்காரன் என்று பார்பதில்லை .தான் விரும்புகிற அற வழியில் ,யார் யார் மனித நேயத்தோடு நடக்கிறார்கள் அல்லது நடக்கவில்லை என்று தான் அவர் பார்க்கிறார் .

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர் .ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" -இயேசு.

எளிய மனத்தோடு இருங்கள் .உங்களுக்கு இறைவனின் ராஜ்ஜியம் உண்டு.

tbr.joseph said...

ஜோசப் சார். நீங்கள் தயங்கவே வேண்டாம். உங்கள் மனதில் பட்டதை அங்கே கேட்கலாமே. சொல்லலாமே. நானோ, குமரனோ, இராமநாதனோ தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை//

ஐயோ ராகவன்.. நான் சொன்னத நீங்க தவறா நினைச்சிக்கீட்டீங்க..

நான் சொல்ல வந்தது வேற.. நீங்க எழுதுனதுக்கு மறுப்பு சொன்ன என்னைக்குமே நினைச்சதில்லே.. எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தாலும் அத எப்படி express பண்றது அல்லது அதுல என்ன கேள்வி கேக்கறதுன்னு புரியாமத்தான் பேசாம இருந்துருக்கேன். இருந்தாலும் உங்களோட சில பதிவுகள்ல பாராட்டி என் சந்தோஷத்தை தெரிவிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.. சரிதானே..

Vetrivel said...

ராகவன்,
அருணகிரியாரை முழுக்கப் படியுங்க. அவர் எங்கயாவது ஒரே ஒரு பிறவிதான் மறுப்பிறவிகிடையாதுன்னு சொல்லி இருக்காரா? இல்ல இந்த ஒரு பிறவியில முருகன நம்பாதவங்க நிரந்தரமா மீளவே முடியாத நரகத்தீயில வெந்துகிட்டிருப்ப்பாங்கன்னு எங்கியயவது பயம்உறுத்துராரா? நம்ம சமயத்தோட சாரத்த சரியாப் புரிங்சுக்காம உளரத முதல்ல நிறுத்துங்க. இதுல்ல திருப்புகழ்ல தப்பு கன்டுபிடிக்க வந்திட்டாரூ. அரகுற ஞானத்தாலவர அபாயம் எப்படி பாத்தீங்களா?

G.Ragavan said...

// ராகவன்,
அருணகிரியாரை முழுக்கப் படியுங்க. அவர் எங்கயாவது ஒரே ஒரு பிறவிதான் மறுப்பிறவிகிடையாதுன்னு சொல்லி இருக்காரா? இல்ல இந்த ஒரு பிறவியில முருகன நம்பாதவங்க நிரந்தரமா மீளவே முடியாத நரகத்தீயில வெந்துகிட்டிருப்ப்பாங்கன்னு எங்கியயவது பயம்உறுத்துராரா? //

வெற்றிவேல். அருணகிரி ஒரு தமிழ்ப் பெருங்கடல். அதோட கரைல நிக்கிறவன் நான். அந்தக் கடல் எனக்குச் சொல்றதத்தான் நான் சொல்றேன்.

அதுவுமில்லாம நீங்க என்னோட பின்னூட்டத்தையே சரியாப் புரிஞ்சிக்கலை. பின்னூட்டத்தோட முதல்லயே இப்பிடி சொல்லீருக்கேன். "பொதுவாக நான் அருணகிரியின் பாடல்களில் இந்த மாதிரிப் பார்த்ததில்லை". அதுக்கப்புறம்தான் என்றாலும் போட்டு..கடைசீல அருணகிரி என்ன நெனச்சிருப்பாருன்னு நான் நெனச்சதச் சொல்லீருக்கேன். அருணகிரிய குறை எங்கே சொன்னேன்? சொன்னத முழுசாப் படிங்க. கொடுத்திருக்குற லிங்குலயும் படிங்க.

// நம்ம சமயத்தோட சாரத்த சரியாப் புரிங்சுக்காம உளரத முதல்ல நிறுத்துங்க. இதுல்ல திருப்புகழ்ல தப்பு கன்டுபிடிக்க வந்திட்டாரூ. அரகுற ஞானத்தாலவர அபாயம் எப்படி பாத்தீங்களா? //

மொதல்ல நான் சொல்லீருக்கிறது கந்தர் அலங்காரச் செய்யுள். திருப்புகழ் அல்ல. ரெண்டாவது அதுல நான் தப்பும் கண்டுபிடிக்கலை. சரியாக் கண்டுபிடிக்கிறது எப்படீன்னுதான் சொல்லீருக்கேன்.

மெய்ஞானத்தைத் தவிர எந்த ஞானமும் அரைகுறையே. அந்த மெய்ஞானத்தையும் முருகந்தான் எனக்குக் கொடுக்கனும். அருணகிரியே மதச்சண்டைல என்னைய மாட்டி விட்டுராதன்னு (கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு உளதோ) பொலம்பும் பொழுது.....நான் ரொம்பச் சின்னப் பையங்க. எங்கிட்ட ரொம்ப எதிர்பாக்காதீங்க.

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பர் ஜோ,

தாங்கள் "அன்புடன்" குழுமத்திலுள்ள ஜோ தானே? அப்படியாயின்,
அன்புத்தம்பி ஜோ,

//"எளிய மனத்தோர் பேறுபெற்றோர் .ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" -இயேசு.

எளிய மனத்தோடு இருங்கள் .உங்களுக்கு இறைவனின் ராஜ்ஜியம் உண்டு.//

இத்தோடு, " என்னை நோக்கிப் பாருங்கள். இரட்சிக்கப் படுவீர்கள்."
இந்த வாக்கியத்தையும் சேர்த்துக் கொள்வோமே.

எந்த வசனமாயிருந்தாலும், ஆயத்துக்களாயிருந்தாலும், பாக்களாயிருப்பினும்,
அதனுட்பொருள் காண்பது "அறிவு".

கூறாமலேயே, என்னைப் புரிந்துகொண்ட தம்பிகள் இராகவன், குமரனுக்கு நன்றி(என் பெயரையும் சேர்த்ததற்காக.
நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

ஜோ / Joe said...

//தாங்கள் "அன்புடன்" குழுமத்திலுள்ள ஜோ தானே? அப்படியாயின்,
அன்புத்தம்பி ஜோ//
ஞானவெட்டியான் ஐயா,
நான் அந்த குழுமத்தில் இல்லை.இருந்தாலும் உங்கள் தம்பி என்பது உண்மை.

ஞானவெட்டியான் said...

அன்புத் தம்பி ஜோ,

நன்றி. என் தம்பியானவுடன் உறவு வட்டம் விரிவடைகிறது.

கொண்டோடி said...

முதலில் எந்த வாதத்திலும் "கிறிஸ்தவம்" என்று பயன்படுத்துவதை நிறுத்துவது நன்று. கிறிஸ்தவம் என்பது ஒரு மதமில்லை. அது மதங்களின் கூட்டு. தங்களுக்குள்ளேயே ஏராளமான முரண்களையும் சண்டைகளையும் வைத்திருக்கும் மதங்களின் தொகுதி. ஆகவே கத்தோலிக்கமென்றோ எக்காளத்தொனியென்றோ அப்போஸ்தலிக்கத் திருச்சபை என்றோ தென்னிந்தியத் திருச்சபை என்றோ சரியான பெயர்களைப் பயன்படுத்துவதுதான் விவாதங்களுக்குச் சிறந்தது.

மற்ற மதத்தினர் நரகத்துக்குப் போவார்களென்று கத்தோலிக்கம் சொல்வதில்லை. ஆனால் பிற கிறிஸ்தவ மதங்கள் சில வெளிப்படையாகவே சொல்கின்றன. மேலும் உலக அழிவின் காலம் பற்றி கத்தோலிக்க விவிலியத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. 2000 ஆம் ஆண்டு உலகமழியும் என்று விவிலியத்திற் சொல்லப்பட்டதாகப் பலர் முன்பு சொன்னார்கள். எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று காட்டுங்கள் பார்க்கலாமென்றால் யாருக்கும் பதில் தெரியாது. சும்மா செவி வழியாகப் பரவிய ஒரு வதந்திதான் அது. உலக அழிவின் காலத்தை விவிலியத்தாற் சொல்ல முடியாது. சொல்லியிருந்தால் விவிலியம் இவ்வளவுகாலம் நம்பகத்தன்மையோடு இருந்திருக்க முடியாது.
-------------------------

வெற்றிவேலின் தர்க்கம் ஓரளவுக்குச் சேறு பூசுவது போலிந்தாலும் நியாயமான சந்தேகளைக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, விவிலியத்தின் தொடக்கம் புனைவுதான். குறைந்தபட்சம் பழைய ஏற்பாட்டின் தொடக்கம் புனைவுதான். இதை கத்தோலிக்கமும் ஏற்றுக்கொள்கிறது. சொல்லப்பட்ட சம்பவங்களை வைத்து வாதிடுவதும், அது சொல்லும் அறிவுரைகளை வைத்து உரையாடுவதும் (அதில் வாதிடுவதற்கு எதுவுமில்லை) நிரம்பவே வித்தியாசமானது. ஜோசப் எந்த நோக்கத்தில் இதைத் தொடங்கினாரோ தெரியாது. ஆனால் விவிலியத்தின் மீதான அத்தனைக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதோ விவிலியத்தை நியாயப்படுத்துவதோ இயலவே இயலாது. பல இடங்களில் "விசுவாசம்" என்ற சொல்லை வைத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.

இருந்தாலும் வாசிப்பதற்கு சுவாரசியாமான பொழுதுபோக்காக இவ்விவாதம் இருக்குமென்று நம்புகிறேன், (எனக்கு) விவிலியத்தைப்போலவே.
-----------------------------
என் பெயர் விளக்கத்தைப் பிறகு பார்ப்போமே ஜோசப். (இப்படிச் சொல்வதாலேயே அது ஏதோ முக்கியமானதென்று நினைக்க வேண்டாம்.)

இராமநாதன் said...

வெற்றிவேல் அண்ணா,
நீங்கள் சொல்வது புரிகிறது. நான் சொல்லுவது என்னவென்றால் எல்லா மதங்களிலும் இதுபோன்ற கேள்விகள் எழுப்ப முடியும் என்பதுவே. வேதங்களைப் பற்றியும் ஸ்மிரிதிகளைப் பற்றியும் எழுப்பபடாதா கேள்விகளா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இப்புத்தகங்களை literal ஆக கொள்ளாமல், நம் மனசாட்சியிற்கேற்ப எப்படி interpret செய்வது என்பதே முக்கியம். அவை infallible அல்ல என்று புரிந்துகொண்டாலே பிரச்சனை முடிந்துவிடும். வேதங்கள், குரான், பைபிள் எல்லாவற்றிலும் நிறைய பிழைகள், கொடுமைகள் இருக்கின்றன என்று தெரியும். ஆனால், அவற்றை கடவுளின் செய்தியை அறியாமல் திரித்த மக்களின் புரிந்துகொள்ளலில் இருந்த பிழையே என்றுதான் கருதமுடியும் என்று நினைக்கிறேன்.

மேலும் நீங்கள் கூறுவதுபோல் கிறிஸ்துவர் அல்லாதோருக்கு மோக்ஷம் கிடையாது என்ற கூற்று இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் பரவலான ஒன்றாக இருந்திருக்கலாம். அது இப்பொழுது முக்கியமில்லை. ஏனெனில் அவர்களின் புரிந்துகொள்ளல் அவ்வளவே. Religion is Flexible. தம் மதம் சொல்வது ஒன்றே தான் dogma என்று கூறுவோர்கள் தான் உண்மையை அறியாதவர்கள்.

tbr.joseph said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கொண்டோடி.

இனிவரும் பதிவுகளில் கருத்தில் கொள்வேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

tbr.joseph said...

நீங்க சொல்றது ரொம்ப சரி இராமநாதன்.

ரொம்பவும் தெளிவா சொல்லியிருக்கீங்க.

வாழ்த்துக்களும் நன்றியும்.

Anonymous said...

Ramanath an,


why you are unnecessarily bringing Quran here? what is the agenda of all you. Islam beleives that Jesus(pbuh) was a Prophet and not God as beleived by christians. But they are not throwing mud on other religions. it has become a habbit in thamizhmanam to always target muslims and islam.

Anonymous said...

those who came tthrough kyber,bolan and those who came from england are grouping up against the orginal inhabitants of this country.

fools cant wipe out God's religion from india. Islam would only spread more and more.

By the way I am a Hindu and not a muslim(otherwise many are here to accuse muslims for anything and everything).

Masilamani

tbr.joseph said...

அநாமதேயம்னு ஆரம்பிச்சிட்டு கடசியில மாசிலாமனின்னு போட்டுக்கறீங்க.

மொதல்ல உங்க ஐடண்ட்டியில தெளிவா இருங்க. அப்புறம் கமெண்ட் அடிக்கலாம்.

tbr.joseph said...

Did Ramanathan say anything wrong about Muslims?

I don't think so.

Vetrivel said...

ஜோசப் சார்,

முதல்ல ஒண்ணைத் தெளிவு படுத்தணும். நான் ஒட்டுமொத்தமா எல்லா கிறித்துவங்களயும் தாக்க வரலை. நான் திட்றது கிறித்துவன்ற பேர்ல உலகம் முழுக்க நம்ம தமிழ்க்கலாசாரம் போல பரவியிருந்த பாகன் இனத்தயெல்லாம் அழித்தொழிப்பு செஞ்சுவர வெறிபிடித்த ஆளுங்களைத்தான்.

உங்கள மாதிரி, தம்பி ஜோவை மாதிரி கிறித்துவத்தைச் சரியா புரிஞ்சுக்காத நல்லவங்க பலர் இருக்கத்தான் இருக்கீங்க. நீங்க இந்த மண்ணின் மைந்தருங்க. என்னதான் மதம் மாறியிருந்தாலும் சூழலோட பாதிப்பு இருக்கத்தான செய்யும். ஆனா சொர்க்கம் எல்லாருக்கும் பொது, அதில தனிப்பட்ட குத்தகைன்னு எதுவும் யாருக்கும் கிடையாது, கிறித்துவத்தை ஏத்துக்காத தமிழ்சனங்க நரகத்தீயில வேவமாட்டாங்கன்னு உங்களால உங்க சர்ச்சுலய போய் சொல்ல முடியாது. வெணுமின்னா சொல்லிப்பாருங்க, அப்புறம் உங்கள சாத்தானோட கையாளுன்னு உங்க பங்குச்சாமியாரே முத்திரை குத்திடுவாரு.

பஸ்ஸில ஏதோ ஒரு பைத்தியக்காரனைப் பாத்ததைச் சொன்னீங்க. அது மாதிரி ஆயிரக்கணக்கில நான் பாத்திட்டுருக்கன். சந்துக்குச் சந்து கையில ஒரு மைக்க வச்சுகிட்டு போறவன் வரவன எல்லாம் பாவிகளே பாவிகளேன்னு கூப்பிட்டிக்கிட்டிருவங்களக் கண்டாலே எனக்கு ஆத்திரம் பொத்துக்கிட்டு வரும். சட்டையப்பிடிச்சு யாரடா பாவிங்கற, மானிடராய்ப் பிறப்பதரிதுன்னு பாடின மண்ணுல, தீதும் நன்றும் பிறர்தர வாரான்னும், அவரவர் கருமமே பெருமைக்கோ சிறுமைக்கோ கட்டளைக்கல்னும் ஆயிரம் ஆயிரம் வருசமா வாழ்ந்துக்கிட்டிருக்கிற மண்ணில, ஏண்டா இந்த மாதிரி பொய்யைப் பரப்பறீங்கன்னு செவுள்லய ரெண்டு அறை விடணுமின்னு தோணும். வன்முறைல எனக்கு நம்பிக்கை கிடையாததால போங்கடான்னு போயிருவன்.

அப்புறம் அந்த பஸ்ஸில யாரும் அந்தப் பைத்தியக்காரன கண்டுக்கலன்னு சொன்னீங்களே அதுக்கு திராவிட இயக்கங்களுக்குதான் நன்றி சொல்லோணும். எங்க அப்பா தீவிரமான திமுக அனுதாபி.ஆனா நாத்திகர் கிடையாது. முருகபக்தரு. அம்மா மட்டும் நைஸா அதிமுகவுக்கு வோட்டுப் போடுவாங்க. அத விடுங்க. எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு. வேலா, திமுககாரனுங்க கிறுத்துவனையோ முசுலீமையோ பிறமதத்துக்காரனையோ திட்டமாட்டாங்க. ஆனா என்னிக்கும் மதம் மாறமாட்டாங்க. நம்ம தமிழினப் பெருமைய விட்டுக் கொடுக்க மாட்டாங்க. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஏதோ இந்துக்களுக்குத் துரோகம் பண்ணிட்டதா இந்துமுன்னணிக்காரங்க சொல்றாங்களே, ஆனா அதே பெரியாராலத்தாண்டா இன்னிக்கு தமிழ்நாட்டில பெரும்பான்மையா மதம் மாறாம இந்துக்களா இருக்காங்கன்னு. இது எனக்கே புரிய ரொம்ப நாளாச்சு.

Vetrivel said...

தம்பி இராமநாதா, நேத்து என் இமெயிலத் தப்பாக் கொடுத்திட்டேன். இந்த அட்ரெஸுக்கு அனுப்பி வையுங்க. vetrivelsaravanan@yahoo.co.in

எல்லார்க்கும் வணக்கம். வர்ட்டா!

முத்து(தமிழினி) said...

oseph sir,

போகிற போக்கில் சேறு வீசுற ஆள் இல்ல இந்த வெற்றிவெல்...லாஜிக்கலாத்தான் பேசுறார்..இவரை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்...சரியான பதில்களையும் கொடுங்கள்......

tbr.joseph said...

வாங்க முத்து,

இந்த வெற்றிவெல்...லாஜிக்கலாத்தான் பேசுறார்..//


இருக்கலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. ஆனால் சொல்கின்ற முறைதான் சற்று கரடுமுரடாக இருக்கிறது..

ஜோ / Joe said...

முத்து,
ஜோசப் சாரோட இன்னொரு பதிவுல வெற்றிவேல் அண்ணனுக்கு என் பதில்கள சொல்லியிருக்கேன்

ashok said...

wonderful attempt...

Post a Comment