Tuesday, January 31, 2006

இது விவாத மேடையல்ல!

நான் இப்பதிவைத் துவக்கி இன்றுடன் இரண்டு வாரங்கள் நிறைவடைகின்றன.

இப்பதிவின் நோக்கத்தை மிகவும் தெளிவாக முதல் இடுகையிலேயே கூறியிருந்தேன்.

மேலும் இப்பதிவின் தலைப்பிலும் (Mast)குறிப்பிட்டுள்ளேன்.

ஒரு மதத்தைப் பற்றி எழுதும் நேரத்தில் நான் எத்தனைக் கவனமாக என் இடுகைகளைக் கையாள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் இதுவரை இட்டிருக்கிறேன்.

இப்பதிவு நான் சார்ந்த கத்தோலிக்க கிறீஸ்துவத்தின் சிறப்புகளை மட்டும் எடுத்துரைக்கவே துவக்கியுள்ளேன் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்.

இதை நான் துவக்கிய நாளிலிருந்தே சிலர் வேண்டுமென்றே பின்னூட்டங்கள் வழியாகவும், தனி மின்னஞ்சல்கள் வழியாகவும் தேவையற்ற விவாதங்களை (விதண்டா வாதங்கள் எனவும் கூறலாம்) சர்ச்சையைத் தூண்டும் விதமாக எழுதி வருகின்றனர்.

அவர்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். You are barking at the wrong tree!!

உங்களுடைய கேள்விகள் நிச்சயம் பதிலளிக்கப்படும். அவை நியாயமானதாக இருக்கும் பட்சத்தில். அதாவது உங்களுடைய ஐயப்பாடுகளை நிவர்த்திச் செய்ய உதவும் பட்சத்தில்..

மற்றபடி கிறீஸ்துவ, இஸ்லாமிய, யூத மதங்களை ஒப்பிட்டுப் பார்த்து இதில் எது சிறந்தது என்றோ, அல்லது எது மோசமானதென்றோ கேட்கப்படும் கேள்விகளுக்கு நிச்சயம் என்னிடமிருந்து பதில் வராது என்பது மட்டுமல்ல அத்தகைய கேள்விகள், பின்னூட்டங்கள் என்னுடைய பதிவிலும் இடம் பெறாது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இது ஆன்மீக தளம், விவாத மேடையல்ல!

அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

4 comments:

-L-L-D-a-s-u said...

ஜோசப் சார்...

இந்த பதிவின் தொடர்பில்லாத கேள்விதான் .. ஆனாலும் உங்களிடம் கேட்க தோன்றியது?


நானும் ஒரு கத்தோலிக்கன் தான்.. ஆனால் கத்தோலிக் என்றால் என்ன அர்த்தம் (I mean, literal meaning) என்றே தெரியாதவன் .. டிக்ஸ்னரியில் பார்த்தால் 'Follower of christ ' என்று உள்ளது .. அப்படியென்றால் 'கிறிஸ்தவன்' என்ற பதமே போதுமே.. கத்தோலிக்க கிறிஸ்தவன் எதற்கு? அதிலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பதில் 'ரோமன்' சேர்ந்ததிலுள்ள அரசியலும் தெரிய ஆசை.. நீங்கள் விளக்குவீர்களா?

'ரோமன் ' அரசியலை தருமியிடம் எதிர்பார்க்கலாம் ;)

tbr.joseph said...

வாங்க தாஸ்,

நீங்க கேட்ட கேள்விக்கு சரித்திர ஆசிரியர்கள்தான் பதில் கூற வேண்டும்.

வேண்டுமானால் கீழ்காணும் தளத்திற்கு சென்று பாருங்கள்.

கத்தோலிக்கன்

G.Ragavan said...

ஜோசப் சார். சில விஷயங்களை ஒதுக்கி விடுங்கள். அவைகளின் மீது நமது கவனம் போனால்...நாம் செய்ய வேண்டியவைகள் மீது கவனம் குறையும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சில விஷயங்களை ஒதுக்கி விடுங்கள்//

ரொம்ப சரி. இல்லன்னா பைத்தியம் பிடிச்சிரும். சிலபேர் எழுதறத படிக்கும்போது are they really seriousனு தோணும். என்ன பண்றது? அதான் உலகம்..

Post a Comment