Tuesday, January 17, 2006

பைபிள் என்பது என்ன?

பைபிள் என்பது என்ன?

என்னுடைய ‘தினசரி பைபிள் சிந்தனைகள்’ என்ற தொடரை எழுதுவதற்கு முன் இந்த கேள்வியை கேட்டு அதற்கு பதிலும் கூறலாம் என்று நினைக்கிறேன்.

பழைய வேதாகமம், புதிய வேதாகமம் என்று இரு முக்கிய பகுதிகளைக் கொண்டது பைபிள். வேதாகமம் என்றால்? சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இறைவன் மனிதனோடு கொண்ட உறவின் வரலாற்றைப் பற்றி உரைக்கும் நூலே வேதாகமம்.

ஆங்கிலத்தில் இதை Testament என்கிறார்கள்.

Testament என்றால்?

நிரூபிக்க உதவும் சாட்சியம், அதாவது, ஒரு நிகழ்ச்சியை நேரில் பார்த்த அல்லது பிறர் மூலம் கேள்விப் பட்ட ஒரு நபரின் சாட்சியம் என்று கூறலாம்.

ஆக, பைபிளில் அடங்கியுள்ளவை எல்லாமே யேசுபிரானின் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நடந்தவற்றை நேரில் கண்டு எழுதப்பட்டவைதான்.

பைபிள் அடங்கியுள்ளவை யாவும் ஆதிகாலம் துவங்கி இறைவன் செய்தவைகளுக்கு சாட்சியங்களாய் திகழ்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்..

இதில் பழைய வேதாகாமம் என்பது இறைவன் இஸ்ராயேல் மக்களுக்கு அதாவது யூதர்களுக்கு, செய்தவைகளையும் இறைமகன் யேசுவின் வருகைக்கு அவர்களை தயார் செய்தவற்றையும் பற்றி சொல்கிறது..

இவை கி.மு 1400 வருடத்திலிருந்து கி.மு. 400ம் வருடத்திற்கு இடையிலான காலக்கட்டதில் எழுதப் பட்டிருக்கலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.

இயேசு பிரானின்  தோற்றம் (பிறப்பு), வாழ்க்கை, போதனைகள், சேவைகள், அதனால் இஸ்ராயேல் மக்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள், பின்பு அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் இவற்றைப் பற்றியெல்லாம் அவருடன் இருந்த சீடர்களால் எழுதப்பட்டவற்றை அடங்கியதுதான் புதிய வேதாகம்.

இவை சுமார் கி.பி.50லிருந்து இரண்டாவது நூற்றாண்டு இறுதிக்குட்பட்ட காலங்களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இவற்றை எழுதி வைத்தவர்கள் பெரிய சொல் வித்தகர்களோ, அல்லது சரித்திர ஆசிரியர்களோ அல்ல என்பதுதான். நம்மைப் போன்ற சாதாரண, அத்தனை படிப்பறிவில்லாத நபர்கள்..

அவர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் தங்களுக்கு தெரிந்த மொழியில், நடையில் எழுதி வைத்தவைதான் இவைகள். ஆனால் அவர்கள் தாமாக எழுதவில்லை, தூய ஆவியின் (கடவுள் பிதா, சுதன், தூய வி என மூன்றாட்களாய் இருக்கிறார்.. ஆயினும் மூவரும் ஒருவரே என்பதுதான் கிறீஸ்துவ மதத்தின் மிக முக்கியமான தேவ ரகசியம் என கருதப்படுகிறது..) தூண்டுதலால்தான் என்பது கிறீஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை!

இத்தகைய இறைவனின் தூண்டுதலால் எழுதப்பட்டவையாக கருதப்பட்டவை மட்டுமே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை இறை தூண்டுதலால் எழுதப்பட்டவையாக கருதியவர்களும் அதே தூண்டுதலுக்குள்ளானவர்களே என்பதும் காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை..

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் கலவையே இன்று பைபிள் என்று அழைக்கப்படும் புத்தகம். தமிழில் இவற்றை நற்செய்தி என்றும் அழைக்கின்றனர்.

பைபிளில் அடங்கியுள்ள எல்லா பகுதிகளும் அவை எழுதப்பட்ட காலங்களில் வசித்த  இறையருள் பெற்றவர்களால்  அர்ச்சிக்கப் பட்டவையாகவும் கருதப்படுகின்றன.

ஆகவேதான் பைபிள் இன்றும் கிறீஸ்துவர்களால் ஒரு புனித புத்தகமாகக் கருதப்படுகிறது..

சரி. இனி பழைய வேதாகமம் என்ன சொல்கிறதென சுருக்கமாக பார்ப்போம்..

அதற்கு முன் ஒரு வார்த்தை..

நாம் எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும்  அவற்றில் சொல்லப்படுபவற்றை ஆழமாய் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புகின்ற மனது வேண்டும். இல்லையா?

இறை படைப்பின் நோக்கங்களையெல்லாம் ஆராயத் துவங்கினால் அதற்கு முடிவே இருக்காது..

மனிதனின் படைப்பின் துவக்கம், தீயவனின் (சாத்தான்) சோதனையால் இறைவனின் கோபத்திற்காளாகி தொல்லைகள் அனுபவித்தது, மக்களினத்தின் தலைவராக ஆபிரகாம் ஏற்படுத்தப்படுவது இஸ்ரயேலரின் துவக்க வரலாறு ஆகியவற்றைக் கூறுகிறது.. ஆதியாகமம்,

தங்கள் சொந்த நாடுகளை விட்டு பல நூற்றாண்டுகளாக எகிப்தில் தங்கியிருந்த இஸ்ராயேல் இனத்தவர் கடவுளுடைய மக்களென தேர்ந்தெடுக்கப்படுதல், அவர்கள் குடியேறிய நாட்டில் துன்புறுத்தப்பட்டு, கடவுளால் மீட்கப்பட்டு, அவர்களுக்கென இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு மோயீசன் தலைமையில் பயணமாய் புறப்பட்டு செல்வது (இதைத்தான் Ten Commandments என்ற ங்கிலப் படத்தில் இயக்குனர் செசில் பி. டிமெல் மிக தத்ரூபமாக எடுத்திருந்தார்) அதற்கடுத்த யாத்திராகமம். ஆகமம் என்றால் மத ஆசாரத்துடன் புனிதமென கருதப்படும் நூல்கள் எனலாம்.

அதைத் தொடர்ந்து சுமார் 42 ஆகமங்களில்  யூத மக்களை ஆண்ட சவுல், சாமுவேல், தாவீது, எனும் அரசர்கள், அவர்கள் ஆட்சிக் காலத்தில் யூத மக்களிடையே தோன்றிய பல தீர்க்கதரிசிகள், இறைவாக்கினர்கள் என இறைமகன் எனப்படும் இயேசுபிரான் பிறப்புவரை நடந்தவை யாவும் எழுதப்பட்டுள்ளன..

புதிய வேதாகமம்

இயேசுபிரானின் பன்னிரு சீடர்களாக அவருடன் இருந்த மத்தேயு, அருளப்பர், மற்றும் சீடர்களில் இயேசுபிரானால் தலைவராக தெரிந்துக் கொள்ளப்பட்ட சீமோன் எனும் இராயப்பரின் சீடரான புனித மாற்கு, இறுதியாக யூத குலத்தைச் சாராமல் பிறகு மனந்திரும்பி பவுல் எனப்படும் புனித சின்னப்பருடன் (இவரும் மனந்திரும்பியவர்தான்) வேதாகமப் பணியில் ஈடுபட்ட  புனித லூக்காஸ் ஆகிய நால்வர் தனித்தனியாக எழுதி நான்கு முக்கிய புத்தகங்களைக் கொண்டதுதான் புதிய வேதாகமம்!

அத்துடன் இயேசுபிரான் உய்ர்த்தெழுந்து வின்னகம் சென்றபின் ஆரம்பகால கிறிஸ்துவர்களின் வாழ்க்கைமுறை (இவர்கள் கிறிஸ்துவர்கள் என பெயரிடப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்) அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எழுதிய கடிதங்கள்.. இறுதியில் யோவான் எனப்படும் அருளப்பர் எழுதிய உலகின் இறுதிநாட்கள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி சூசகமாக தெரிவித்தவை என்பவையும் அடங்கியுள்ளன..

பழைய வேதாகமம், புதிய வேதாகமம் ஆகிய இரு பாகங்களிலும் இருப்பதையெல்லாம் எழுதுவதென்பதல்ல என் நோக்கம்..

இவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை இணைத்து இறைவன் நம்முடைய நன்மைக்காக கூறப்பட்டுள்ளவற்றை தினமொரு சிந்தனையாக சுருக்கமாக, எளிய நடையில் எழுத வேண்டும் என்பதுதான் என் ஆவல்.

தினமும் எழுத முடியாவிட்டாலும் வாரத்தில், அதாவது திங்கள், புதன், வெள்ளி என மூன்று நாட்கள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

அன்புடன்,
டிபிர். ஜோச·ப்
  

12 comments:

G.Ragavan said...

மிக்க நன்றி ஜோசப் சார். இதுக்குதான் இத்தனை நாள் எதிர் பாத்துக்கிட்டேயிருந்தேன். நல்லதொரு அறிமுகம் உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகப் போவதில்லை என்றே தெரிகிறது.

எல்லா மதங்களிலும் புனித நூல்கள் இறையருளால் எழுந்தன என்று சொல்லும் நம்பிக்கை கிருத்துவர்களிடம் இருப்பது சரியே. நம்பினால்தானே தெய்வம்.

நீங்கள் குறிப்பிடும் Ten Commandments படம் நானும் பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு முன்பு. அதில் மோசஸ் ஒரு மலையுச்சி சென்று ஞானம் பெறுவதாக வரும். அந்த மலையுச்சி எங்கிருக்கிறது? அதற்குப் பெயர் என்ன? அந்த மலையுச்சி கடவுள் வாழுமிடம் என்று கிருத்துவர்களாலோ யூதர்களாலோ நம்பப் படுகிறதா?

இவைகளைத் தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன் சார்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

அதற்குப் பெயர் என்ன? அந்த மலையுச்சி கடவுள் வாழுமிடம் என்று கிருத்துவர்களாலோ யூதர்களாலோ நம்பப் படுகிறதா?

இவைகளைத் தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன் சார்.//


கண்டிப்பா ராகவன். முழு விவரத்துடன் ஒரு தனி பதிவு போடறேன்.

தேவ் | Dev said...

Joseph sir,
Let me wish u success on ur new blog on Bible.

Ragavan,
That mountain is called mt.Sinai.
(Joseph sir spologies for intruding)

tbr.joseph said...

வாங்க தேவ்,

That mountain is called mt.Sinai.
(Joseph sir spologies for intruding) //

You are welcome to contribute.

I would never consider this as intrusion.

Thank you for the information. I thought of writing the full story.
Your info is sufficient for now.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
உங்கள் புதிய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

மதம் சார்ந்த விடயங்கள் குறித்து எழுதும் போது வரும் தர்மசங்கடங்களையும் ,இடையூறுகளையும் அறிந்து ,அவைகளைத் தாண்டி ,விவிலியத்தின் அடிப்படையில் சில தர்மங்களை ,கருத்துக்களை உங்கள் பாணியில் சொல்ல இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

நானும் உங்களிடமிருந்து விவிலியத்தின் புதிய பரிமாணங்களை அறிய காத்திருக்கிறேன்.

வருக! வருக!!

நல்லடியார் said...

ஜோசப் சார்,

உங்கள் தெளிவான விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

tbr.joseph said...

வாங்க ஜோ,

நானும் உங்களிடமிருந்து விவிலியத்தின் புதிய பரிமாணங்களை அறிய காத்திருக்கிறேன்.//


உங்களுடையவும் கோ.ராகவன் போன்றவர்களுடைய எதிர்பார்ப்புகளை காப்பாற்றுவேன் என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதம் என்பதும் நாம் அணிந்திருக்கும் ஆடை. உள்ளுக்குள் நாம் எல்லோரும் ஒருவரே..

ஒரே கடவுளை நோக்கித்தான் சென்றுக் கொண்டிருக்கிறோம். இதில் மதம் என்பதுதான் வெறும் பாதை, அவ்வளவே..

இதில் என்னுடைய பாதை மட்டுமே இறைவனை சென்றடையும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை..

நான் சென்றுக் கொண்டிருக்கிற பாதையின் சிறப்பைப் பற்றி வேண்டுமானால் நான் எடுத்துரைக்கலாம். அதற்கு நான் தேர்ந்தெடுத்த கூடமே இந்த என் பைபிள் தளம்..

எந்த ஒரு சூழ்நிலையிலும் எவ்வித சர்ச்சைக்கும் ஆளாகும் விதத்தில் எழுத மாட்டேன். இது மட்டும் உறுதி!

tbr.joseph said...

வாங்க நல்லடியார்,

என்னுடைய விளக்கம் வெள்ளிக் கிழமை இடுகிறேன்..

போதுமா?

முத்து(தமிழினி) said...

this is good humble beggining...although i dont have faith in religions i would like to see how to put forth the things...

Samudra said...

எனது வாழ்த்துக்கள் ஜொசப் சார்.

tbr.joseph said...

வாங்க முத்து,

i dont have faith in religions //

நோ கமெண்ட்ஸ்..

ஆனாலும் இந்த பதிவுக்கு வந்து உங்க கருத்து, அது எதுவானாலும், தாராளமா சொல்லுங்க.

tbr.joseph said...

உங்க வாழ்த்துக்கு நன்றி சமுத்ரா.

Post a Comment